Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, December 9, 2011

Panja

panjaareview1கொம்மரம் புலி அடித்த அடியில் தெலுங்கு படவுலகமே ஆடிப் போயிருந்தாலும், பவர்ஸ்டார் பவன் கல்யாண் படம் என்றால் மீண்டும் ரசிகர்கள் முறுக்கேறி பார்க்க தயாராகிவிடுகிறார்கள் என்பதற்கு தியேட்டரில் இன்று பார்த்த கூட்டமே சாட்சி, சத்யம, கேஸினோ, எஸ்கேப், உட்லான்ஸ், மோடம், ஈகா என்று சுற்றிச் சுற்றி தியேட்டர்கள் இருந்தும் எல்லாமே புல். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் என்ற கூட்டணி வேறு கேட்கவா வேண்டும். எக்ஸ்பட்டேஷன் சும்மா அதிரிந்தி.


p ஜே கொல்கத்தாவின் நம்பர் ஒன்  தாதாவான ஜாக்கிஷாராப்பின் நம்பிக்கையான வலது, இடது கரம். சிறு வயதிலிருந்து தாதாவால் எடுத்து வளர்க்கப்படுகிறவர். இவர் இல்லாமல் ஒன்று நடக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் தாதாவின் பையன் வெளிநாட்டிலிருந்து வர, அவனின் அராஜகமான நடைமுறையினால் பழைய ஆட்கள் எல்லோரும் மனதாலும், உடம்பாலும் காயப்பட, எல்லோரும் தாதாவிடமிருந்து விலகி, எதிர் கோஷ்டியான அதுல் குல்கர்னியிடம் போகிறார்கள். தனக்கு எப்படி விஸ்வாசமாய் இருக்கிறாயோ அதே போல் தன் மனனுக்கும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் தாதா. ஆனால் தன்னைப் போலவே தாதாவால் வளர்க்கப்பட்ட ஜானவி என்கிற பெண்ணை தாதாவின் சைக்கோ பையன் அடித்தே கொன்றுவிட, அவனை கொன்றுவிடுகிறார் ஜே. தன் மகனைக் கொன்றவனை தாதா என்ன செய்தார்? ஜே எப்படி தப்பித்தான் என்பதை நடுநடுவே காதல், கொஞ்சம் செண்டிமெண்ட்டோடு தர முயன்றிருக்கிறார்கள்.
p1 பவன் கல்யாண் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு கிரேஸி பிலிமாக இருக்கும். ஏனென்றால் அவ்வளவு ஸ்டைலிஷான ஒரு கேரக்டர். ட்ரிம் செய்யப்பட்ட தாடியோடும், ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் ஷுட்களில் அவரை பார்க்கும் போது, சும்மா.. பிச்செக்கி போதுந்தி என்று தான் சொல்ல வேண்டும். இவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகவே அந்த பாப்பாராயுடு பாடலிலும், படம் முடிந்தவுடன் வரும் பாடலிலும் டான்ஸாடியே அதகளப்படுத்தியுள்ளார். மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட ஒரு பர்பாமென்ஸ் அருமையாய் சூட் ஆகிறது. முக்கியமாய் காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் இவரது ஸ்டைல் வாவ்…
p4 சாரா டேன் தான் கதாநாயகி. ஸ்லிம் பியூட்டி. செடிகளின் காதலியாய் அறிமுகமாகி, பவனின் காதலியாய் ஆகும் வரை இவர் அழகாய் இருக்கிறார். நடிக்க என்று ஏதுமில்லை. ஜானவியாய் வரும் பெண்ணும் ஸ்லிம் ப்யூட்டிதான். சாகும் காட்சியில் பரிதாபம் கொள்ள வைக்கிறார். சைக்கோ மகனாய் வரும் ஷேஷ் அடவியின் பர்பாமென்ஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி, ஜாக்கிஷெராப், தணிகலபரணி, அதுல் குல்கர்னி, நம்ம ஊர் சம்பத், சுப்புராஜு,ஆலி என்று ஏகப்பட்ட நடிகர்கள் ஃபிட் செய்யப்பட்ட பாத்திரத்தில் சரியாய் பிட்டாகியிருக்கிறார்கள். ப்ரம்மானந்தத்தை வைத்து இரண்டாவது பாதியில் ஒரு காமெடி ட்ரை செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே எடுபடுகிறது. முக்கியமாய் அந்த பாப்பாராயுடு பாட்டில் அவர் செய்யும் அட்டகாசமிருக்கிறதே அதை ப்ரம்மானந்தம் மட்டுமே செய்ய முடியும்.
p3 டெக்னிக்கலாய் சொல்லப் போனால் பவன் கல்யாணுக்கு பிறகு படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் தான். செம ஸ்டைலிஷான ஷாட்ஸ், லைட்டிங், ஆக்‌ஷன் சீன்களில் பவனின் வேகத்துடனே பயணிக்கும் கேமரா, அந்த டாப் ஆங்கிள் மொட்டை மாடி சேஸ், என்று அதகளப்படுத்தியிருக்கிறார்.  அதே போல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தையும் மேற் சொன்ன காட்சிளுக்காக பாராட்ட வேண்டிய லிஸ்டில் வருகிறார். யுவனின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பின்னணியிசை. நிச்சயம் தெலுங்கு திரையுலக மக்களுக்கு ஒரு புது அனுபவமாகவே இருக்கும். அருமையாய் செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியவர் விஷ்ணுவர்தன். தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராய் வலம் வந்தவர். கதையாய் பார்த்தால் பெரிதாய் ஏதும் சொல்ல முடியாது. பட் அதை எக்ஸிக்யூட் செய்த வகையில் இவர் பாராட்டுக்குரியவர் முதல் பாதி வரையில். முதல் காட்சியில் தாதாவின் வருகையை ஓட்டி அவரை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியில் எதிரிகளின் ப்ளானை துவம்சம் ஆக்கும் பவனின் ஆக்‌ஷனை அவர் என்ன செய்தார் என்று காட்டாமல் அதை நமக்கு புரிய வைத்தே பில்டப் செய்யும் காட்சியில் ஆரம்பித்து, பரபரப்பாக போகும் திரைக்கதை, கொஞ்சம் லவ் மேட்டர் வந்ததும், லேசாக இறங்கி, தாதாவின் சைக்கோ பையன் வந்ததும் எடுத்த  வேகம் இடைவேளை வரை நச். ஆனால் அதற்கு பிறகு கிராமத்தில் ஹீரோயின் வீட்டில் தங்குவது, அவளின் ப்ரச்சனையை முடிப்பது. என்று என்ன செய்வது என்று தெரியாமல் க்ளைமாக்ஸ் வரை அலைந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. குல்கர்னியின் ஏரியாவிற்கு போகும் இடத்தில் எல்லாம் மக்கள் நடமாடட்மேயில்லமால் இருபது, ஷூட் அவுட் காட்சிகளில் எல்லாம் ஊரே காலியாய் இருப்பதும், ஒரே செட்டில் வேறு வேறு ஆங்கிளில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருப்பதும் ஆங்கில படங்களில் வேண்டுமானால் ஆளில்லாத ரோடுகள் காட்டப்படலாம் கதை களன் கொல்கத்தா என்கிற போது அதுவும் மக்கள் தொகை அதிகமாய் இருக்கும் ஊரில் கணக்குக்கு கூட வில்லன் ஆட்களைத்தவிர வேறு ஆட்கள் இல்லாமல் இருப்பதும், ஒரே ஒரு காட்சியில் கூட போலீஸ் என்கிற நாமகரணத்தை வசனத்தில் கூட பேசாதிருப்பது என்பது போன்ற லாஜிக் ஓட்டைகள் அடைக்கப்பட்டிருக்கலாம். முதல் பாதியையும், இரண்டாம் பாதியையும் கனெக்ட் செய்யும்  விஷயங்கள் மிகக் குறைவாகவே இருப்பதால் படு ஸ்லோவாகிவிடுகிறது.
panjaa- 25/60
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive