Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Thursday, December 15, 2011

சாப்பாட்டுக்கடை –பாரதி மெஸ்

Photo0420 Photo0416
திருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.“வாங்க நம்ம பாரதி மெஸ்சுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

திருவல்லிக்கேணி பாரதி ரோட்டில், அதாவது இட்லி சாம்பாருக்கு புகழ் பெற்ற ரத்னா பவனிலிருந்து பீச்சுக்கு வலது பக்கம் திரும்புவோமில்லயா அந்த ரோட்டின் பேர் பாரதி ரோடு. ஒரு நூறு மீட்டர்  நடந்தால் இடது பக்கமாய் ஒரு பெரிய பாரதியின் படம் போட்ட ஒர் வழிகாட்டி விளம்பரம் இருக்கும். பாரதி மெஸ் என்று. அந்த தெருவின் பெயர் அக்பர் தெரு. உள்ளே நுழைந்தவுடன். முதல் கட்டடமே பாரதி மெஸ்தான் வாசலிலேயே பாரதியார் முண்டாசோடு வரவேற்றார்.
Photo0417 Photo0415
பார்த்த மாத்திரத்திலேயே இடம் பிடித்துவிட்டது. ஒரு சின்ன நீளமான இடம். அதில் இடிபாடில்லாத நிலையில் டேபிள்கள் போடப்பட்டு, பாஸ்ட் புட் பாணியில் நின்று கொண்டு சாப்பிடும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்ததும், சுவரெங்கும் பாரதியின் படங்களும், அவரைப் பற்றிய சிறு குறிப்புகளுமே விரவியிருந்தது இம்ப்ரசிவாக இருந்தது. நாற்பது ரூபாய் சாப்பாடுக்கு. ஒரு வட்ட தட்டில் சின்னச் சின்ன கிண்ணங்களில் சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, ஊறுகாய், அப்பளம், அது தவிர அதில் ஒரு சிறு தட்டில் சாதம் போட்டு சாப்பிட வைத்திருந்தார்கள். அதில் ஒரு குட்டியூண்டு மசால் வடை. அநேகமாய்  இந்த வடை மேட்டர் தினம் மாறும் என்று நினைக்கிறேன். அதனுடன் சூடான சாதத்தை ஒரு ஹாட்பேக்கில் ஒரு குட்டி கரண்டி போட்டு தருகிறார்கள். அட பார்க்கும் போதே அசத்துகிறார்களே என்று நினைத்து சாதத்தை எடுத்து போட்டு, துளி காரக்குழம்பை கலந்தடித்து, ஒரு கவளம் சாப்பிட்டவுடன் கண்கள் கலங்கியது. வாவ்… அட்டகாசம். அவ்வளவு சுவையான காரக்குழம்பு. நான் மூன்று முறை வாங்கிச் சாப்பிட்டேன். அளவான காரத்துடன், முழு மிளகையையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு, திக்காக ஒரு குட்டியூண்டு கப்பில் கொடுத்தார்கள். நாக்கில் ஒட்டியது. அடுத்து வந்த சாம்பார், ரசம் என்று எல்லா அயிட்டங்களுமே அசத்தலாய் மெஸ்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட் சுவையில்லாமல் வீட்டுச் சாப்பாடு போல இருந்தது. அதிலும் ரசமும், காரக்குழம்பும்.. ம்ம்ம்ம்........ மவுத் வாட்டரிங்..
Photo0414Photo0418
கடையில் வாசலில் ஒரு சின்ன பூத் வைத்திருந்தார்கள். அதில் நிறைய பத்திரிக்கைகள் போடப்பட்டிருந்தன. “இங்கு இருக்கும் பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு போய் படிக்கலாம் இலவசம்” என்று போட்டிருந்தார்கள். இன்னொரு சிறு அலமாரியில் பாரதியின் கவிதைகள் 20 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. “என்னஜி.. கடை ஓனர் இலக்கியவாதி போலருக்கு?” என்றேன் நண்பர் பாலாவிடம்.

“அட சொல்லலையில்லை. இதை நடத்துறவர் பத்திரிக்கையாளர் கண்ணன். தினமலர்ல இருந்தாரு. இவர் ஒரு குறும்பட, ஆவணபட இயக்குனரும் கூட” என்றார். நிச்சயம் ஒரு அருமையான, சுவையான, நிறைவான, டிவைனான வீட்டு சாப்பாட்டுக்கு நான் கேரண்டி.

சங்
கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive