Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Thursday, December 1, 2011

போராளி

M Sasikumar Photos @ Porali Tamil Movie சமுத்திரகனி, சசிகுமார், சுவாதி, சுந்தர்சி.பாபு, எஸ்.ஆர்.கதிர் என்று ஒரு சக்ஸஸ்புல் டீம். பெயர் வேறு தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட்படி தமிழுணர்வோடு வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் படம். கனி-சசியின் கூட்டணி நம்மை திருப்திபடுத்தியிருக்கிறதா? என்று பார்ப்போம்


ஒர் இடத்திலிருந்து தப்பி வரும் சசியும், அல்லரி நரேஷும், நண்பன் கஞ்சா கருப்புவின் வீட்டில் தஞ்சமடைகிறார்கள். பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்கள்.  வேலை செய்துவிட்டு சும்மா இருக்கும் நேரத்தில் சுய தொழில் ஆரம்பிக்கிறார்கள். நரேஷ் தன்னுடன் வேலைபார்க்கும் பெண்ணையும், சசியை எதிர்வீட்டு சுவாதியும் காதலிக்க, மிகக் குறைந்த காலத்தில் ஒரு நல்ல நிலைக்கு தொழிலில் செட்டிலாகிறார்கள். அப்போது கஞ்சா கருப்பு இவர்களின் படங்களோடு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்ததால் பிரச்சனை ஆரம்பமாகிறது. இவர்களைத் தேடி ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன் அவர்கள் துரத்துகிறார்கள்? அதன் பின்னணி என்ன? அவர்கள் ப்ரச்சனையிலிருந்து மீண்டார்களா? என்பது தான் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஏற்படுத்தும் ஆர்வம் இடைவேளை வரை படு சுவாரஸ்யமாய்த்தான் செல்கிறது. முடிவை நான் தான் எடுப்பேன் என்று முடிக்கும் ஹவுஸ் ஓனர் ஞான சம்பந்தம், “உருப்படியா ஒரு வேலை வெட்டிக்கு போ” என்றதும் “வேலையிருந்தா போயிருக்க மாட்டமா?” எனும், அவரது பையன். பார்த்த மாத்திரத்திலேயே சசியின் மீது ஒன் சைட் காதல் கொண்டு, தலையாட்டிக் கொண்டேயிருக்கும் பெண், சாந்தியும், அவளின் காதல் புருஷன் காந்தி கேரக்டர்கள், எப்பவும் புல் டைட்டாகவே இருக்கும் மாடி வீட்டு பேச்சுலர். ஒரு வயதான பாட்டி, ஒரு சிறு பெண், சுவாதி என்று அநாதைகளாய் ஒரு வீட்டில் இருக்கும் குடும்பம். வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் பூட்டு போடப்பட்ட வீட்டில் கயிறு கட்டி பின் ஜன்னல் வழியாய் வரும் கஞ்சா கருப்பு, பெட்ரோல் பங்க் அண்ணாச்சி, அந்த மனநலம் குன்றியவர், பங்கில் வேலை செய்யும் நிவேதா, அவரின் மாமா என்று கொஞ்சம் நாடகத்தனமாய் இருந்தாலும் சுவாரஸ்யமான கேரக்டர்கள், அவர்களின் கேரக்டர்களின் அடையாளமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வசனங்கள் என்று நகைச்சுவை மீட்டரோடு வரும் பழைய பாலசந்தர் ட்ரேட் மார்க் காட்சிகளாக இருந்தாலும் நம்மை கட்டிப் போட்டுத்தான் வைக்கிறது. 
swathi porali movie stills00 ஆனால் இரண்டாவது பாதிதான் படத்தில் வரும் மனநலம் குன்றியவர்களின் மனநிலையைப் போல நிலையில்லாமல் போய், முந்தைய படங்களின் தாக்கத்தின் பார்முலாவின் படி போக ஆரம்பித்து விடுகிறது. சசியின் அதீத புத்திசாலித்தனம். அவரின் சித்திக்கு எரிச்சலாகிவிட, சுற்றியிருக்கும் உறவுகள் இவரை படிப்பை நிறுத்தி வைக்கிறார்கள். வேறு வேலை எதுவும் இல்லாததால் இவரும் சுரியும் கோயில் குளத்தில் உட்கார்ந்து கொண்டு அலைய, தினமும் 108 குடம் பிள்ளையாருக்கு தண்ணி ஊத்திக் கொண்டு அலைய, அவனை பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டி தாடி மீசையோடு அலைய வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் சொத்தில் யுரேனியம் இருப்பதை கண்டு ஒருவன் பதினைந்து கோடி வாங்க வர, அப்போது தான் சொத்தை இவர்கள் எல்லோரும் அனுபவ பாத்தியதை மட்டுமே, உரிமை சசிக்கு என்பதும் தெரிய வருகிறது. நடுவில் வசுந்தராவும், அவரது அப்பாவும் இவரின் சொத்துக்காக அப்பனை கொன்றவர்கள் அவர்கள் என்பது தெரிய வர, அவர்களை கொல்கிறான்.  மனநல காப்பகத்தில் அவனை வைத்து விட்டால் சொத்தை நாம் அடைந்து விடலாம் என்று அவனை துரத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் படு குழப்பம்.

சசிகுமாருக்கான சரியான கேரக்டர். ரொமான்ஸ் சுத்தமாய் வர மாட்டேனென்கிறது. அதிலும், சுவாதியின் காதலுக்கு ஓகே என்றதும் அவர் ஒரு பக்கம் காதலில் ஜெயித்த ஃபீலிங்கை உணர்வெழுச்சியில் அழுதும், சிரித்தும் சொல்லிக் கொண்டிருக்க, இவரின் ரியாக்‌ஷன் செம காமெடி.. கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாக் கேரக்டரின் ஆழ் மனதையும் படித்து அதற்கான ரெமிடியை தரும் கேரக்டராய் வலம் வருவது உருத்துகிறது. இவ்வளவு ஸ்மாட் ஆள் எதற்கு ஓடி ஒளியணும்.  எப்போதும் சிடுசிடுவென இருக்கும் சுவாதியின் கேரக்டர் மேல் கொஞ்சம் எரிச்சலே வந்தாலும், அதற்கான காரணம் தெரியும் போது அனுதாபம் வருகிறது. லோக்கல் ஸ்லாங் தமிழ்செல்ல்வி கேரக்டரில் நிவேதாவின் கேரக்டர் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அல்லரி நரேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு நாடோடிகள் போலவே நண்பர்களால் அவதிப்படுகிறார். இவரை விட சூரி கொஞ்சம் பரவாயில்லை. ஜெயபிரகாஷ் வழக்கம் போல் நச்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு சேஸிங் காட்சியில் நிற்கிறது. ஆனால் ஏற்கனவே இம்மாதிரியான சேஸிங் காட்சிகளை இவரின் ஒளிப்பதிவிலேயே பார்த்து விட்டதால் அரை மனசோடு ஓகே. சுந்தர்.சிபாபுவின் இசையில் ஒரு குத்துப் பாடல் ஓகே ரகம். வழக்கம் போலான சேஸிங் பாட்டும், ஆர்.ஆரும் நச்.
sasikumar_porali_movie_06 எழுதி இயக்கியவர் சமுத்திரகனி. முதல் பாதியில் முழுவதும் ஷார்ப்பான வசனங்களால் நம்மை வசீகரிக்கிறார். சின்னச் சின்ன கேரக்டர்களின் ரியாக்‌ஷன்களில் மனதில் நிற்க வைக்கிறார். சுவாரஸ்யமான பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் சசியின் கேரக்டரால் நிறைய விஷயங்களை சொல்கிறார். ஆனால் இவ்வளவு ஸ்மார்ட்டான கேரக்டரை மனநல மருத்துவமனையில் என்ன தான் சசியின் குடும்பம் சேர்த்துவிட்டது என்றாலும் ஜெயப்ப்ரகாஷ் ஏன் அவருக்கு மனநலம் ப்ரச்சனையில்லை என்று கண்டு பிடிக்க முடியவில்லை. படம் நெடுக எல்லா கேரக்டரும் ஏதாவது ஒரு வகையில் புத்திசாலித்தனமாக பேசுவது பாலசந்தர் படம் பார்க்கிறோமா? என்ற சந்தேகத்தை வரவழைத்துவிடுகிறது. சசிக்கு ஒரு கதையை வைத்தவர் அல்லரி நரேஷுக்கு ஒரு அழுத்தமான மேட்டரை சொல்லியிருக்கலாம்.  இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் மேட்டர் எல்லாம் கிட்டத்தட்ட தெலுங்கு பட வாடையடிக்கிறது. அல்லரி நரேஷ் நடித்திருப்பதால் ரெண்டு லேங்குவேஜுக்கும் எடுபட வேண்டும் என்பதாலா? சசிகுமாரின் கேரட்டரை அதீத புத்திசாலியாய் காட்டியிருப்பதும், அந்த கிராமத்தில் வரும் காட்சிகளிலில் சசியின் பெரியப்பா தன் சொத்துக்களைத்தானே சசியின் பெயரில் எழுதி வைத்தது சசி வளர்ந்த பின்தானே  தெரிகிறது அப்படியிருக்க ஏன் அவரை படிக்க வைக்காமல் இருக்க வேண்டும்.  அதற்கான லாஜிக் மிஸ்ஸிங். சின்ன ஜமீன் படத்தில் வரும் கார்த்திக் கேரக்டரை விஸ்வம் கேரக்டர் பயமுறுத்தி வைத்திருப்பார். வெளியே கார்த்திக் சின்னபுள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார். மாமாவை பார்த்தால் நடுங்குவார். ஏனென்றால் மாமா சின்ன வயதிலிருந்தே அடித்து துவைப்பார் என்ற பயம். ஆனால் இங்கே அப்படி யார் இவரை பயமுறுத்தினார்கள்?. பிறகு பல விஷயங்களை வெறும் வசனங்களாகவே பேசி எஸ்கேப்பாயிருப்பது கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

நட்புதான் சிறந்தது. உறவுகள் துரோகம் செய்யும் என்று சொல்லும் சசி கேரக்டர், நிவேதாவின் அக்காவுக்கு அமாவாசை பேய் ப்ரச்சனையின் காரணத்தை கண்டுபிடித்து, பேசும் போது “நம்ம பொண்ணு பேச்சை நாமே கேட்கலைன்னா எப்படி?” என்று பேசுவது முரணாக தெரிந்தாலும், தன்னை இப்படித்தானே எல்லோரும் பட்டம் கட்டி வைத்தார்கள் என்கிற வலியை சரியாக உணர்த்தியிருக்கிறார். சுவாதிக்கும், சசிக்குமான நெருக்கம் உண்டாக வரும் காட்சிகள் சுவாரஸ்யம். உன்னை அண்டாவா நினைச்சி தூக்குறேன் என்பதும், வண்டியிலிருந்து இறங்கும் போது “நீங்க என்னை அண்டாவா நினைக்காம தூக்குனாத்தான் இறங்குவேன்” என்பதும், காதலை சொல்ல விழையும் காட்சியும், க்யூட். கீழ் வீட்டு சாந்தி, காந்தி தம்பதிகளிடையே வரும் வசனங்கள், அந்த பிள்ளையார் பெயிட் சர்வீஸ் கான்செப்ட். விலையேற்றம் பற்றியது, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் போன்ற சின்னச் சின்ன ஷாட்டுகளில் கொஞ்சம் பழைய பாணியாக இருந்தாலும் டைரக்டர் தெரிகிறார். முதல் பாதியில் ஏற்றிவிடப்பட்ட ஆர்வத்தை அப்படியே அலேக்காக தூக்கிப் போய் இன்னும் சுவாரஸ்யபடுத்தியிருந்தால் போராளி வென்றிருப்பான்.
போராளி – 50/120

No comments:

Post a Comment

Followers

Blog Archive