Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Saturday, December 10, 2011

25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்

நம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்‌ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.


செய்திகளை தருவதில் ஏதும் பாரபட்சம் காட்டமாட்டோம் என்று சொன்னவர்கள்  தற்போது அதே கேப்டன் டிவியில் காலையில் நித்யானந்தாவின் சீடர்கள் சேனலுக்கு பணம் கட்டி அவரைப் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். திருட்டு தில்லாங்கடி என்று தெரிந்த பிறகு அவரை ஆதரித்து வரும் அந்த அரை மணி நேரம் நிகழ்ச்சிக்கு அவர்களிடமிருந்து 25,000 + சர்வீஸ் டேக்ஸோடு வாங்கிக் கொண்டு பக்தியை பரப்புகிறார்களாம். என்ன கொடுமைடா இது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive