Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Wednesday, December 7, 2011

கேபிளின் கதை - 25


25
ஆம் வியாபாரசூட்சமம்தான். சென்னையில் லோக்கல் சேனல் என்ற வியாபாரத்தை எஸ்.சி.வி உடைத்தது. அதற்குசில காரணங்களும் இருந்தது. எல்லா சேனல்களுக்கும் விளம்பர வருவாய் என்றால் அதுசென்னையை அடிப்படையாய் கொண்ட நிறுவன்ங்களிலிருந்து வரும் விளம்பரங்களே.ஏரியாவுக்கு ஒன்று என்று லோக்கல் சேனல்கள் இருந்தால் லோக்கல் விளம்பரங்கள் வரும்.அதில் வரும் வருமானம் அந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு போய்விடும். அதேநேரத்தில் தாங்கள் தங்கள் நெட்வொர்க்கில் ஒரு லோக்கல் சேனலை ஆரம்பித்துவிட்டால்சென்னை மாநகரம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரே லோக்கல் சேனல்என்றால் மொத்த வருமானம் அவர்களுக்கே வரும் என்பதனால் தான்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்தங்கள் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் சென்னையில் இருந்தஇன்னொரு நெட்வொர்க் ஹாத்வே. ஹாத்வே வடநாட்டிலிருந்து சிட்டி கேபிளுக்கு போட்டியாய்வந்திறங்கிய கம்பெனி. மற்ற ஏரியாக்களில் எல்லாம் ஆப்பரேட்டர்களே எம்.எஸ்.ஓவாக இருந்தநேரத்தில் தான் இவர்களும் உள்ளே நுழைந்தார்கள். பெரும்பாலும், அண்ணாநகர்,வடசென்னை, மற்றும் அடையார் ஏரியாக்களில் இருக்க, எஸ்.சி.வி இவர்களுக்கு போட்டியாய்ஆட்டத்தில் இறங்கியது.

ஒவ்வொரு ஆப்பரேட்டராய்எஸ்.சி.வியுடன் தானாகவே சேர ஆரம்பிக்க, அவர்களுக்கும் மிக சுலபமாய் போய்விட, வெகுசீக்கிரத்திலேயே சென்னையில் அறுபது சதவிகித கேபிள் மார்கெட்டை எஸ்.சி.வி தன்கைவசப் படுத்தியது. இந்த நேரத்தில் தான் சென்னையில் முதல் முதலாய் எஸ்.சி.வி.ஹாத்வே ப்ரச்சனை பூக்க ஆரம்பித்தது. இரண்டு ஏரியா ஆப்பரேட்டர்களின் ஆட்டம்துவங்கியது. ஆளாளுக்கு ஏரியாவிட்டு ஏரியா இணைப்புகளை போடுவதும், சில பெரியஆப்பரேட்டர்கள் இந்த மாதிரி சின்னத்தனமான வேலையை செய்யாமல் மொத்தமாய் ஒருஆப்பரேட்டரையே தங்கள் நெட்வொர்க்குக்கு மாற்ற ஆரம்பிக்க, இரண்டு எம்.எஸ்.ஓக்களில்அலுவலகமும் இந்த பஞ்சாயத்து பிரச்சனையில் திக்கு முக்காட ஆரம்பிக்க,எஸ்.சி.வியும், ஹாத்வேயும் ஒரு அக்ரிமெண்டுக்கு வந்தது. அதாவது ஹாத்வே செயல்படும்நாற்பது சதவிகித ஏரியாவில் அவர்களே செயல்பட, மீதியிருக்கும் அறுபது சதவிகிதஇடத்தில் எஸ்.சி.வி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும், இரண்டுஏரியாக்களிலும் ஃபீட் கட் ஆனால் ஆதாவது சிக்னல் கட் ஆனால் அவரவர் கண்ட்ரோல்ரூமிலிருந்து சிக்னல் எடுத்துக் கொள்ளலாம் என்பது வரை பேசி ஒரு புரிந்துணர்வுக்குவந்தது.

எல்லாம் முடிந்து சுபமாய்இவர்களின் தொழில் இங்கே சென்னையில் செட்டிலாக ஆரம்பிக்க, மெல்ல இவர்களின் கவனம்தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களுக்கு தாவ ஆரம்பித்தது. முக்கியமாய் மக்கள் தொகைஅதிகமாக இருக்கும் மாநகராட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துசென்னையிலிருந்து, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருநெல்வேலிஎன்று விரிவு படுத்த முடிவு செய்தார்கள்.

ஆனால் சென்னையைப் போல பலஇந்த ஏரியாக்களில் அவ்வளவு சுலபமாய் சட்டென நுழைய முடியவில்லை. மதுரை போன்றஏரியாக்களில் அழகிரி நெட்வொர்க்கை பயன்படுத்தியும், இவர்களின் தி.மு.க அடையாளத்தைவைத்து, நம்ம நெட்வொர்க் என்று உடன்பிறப்புகளிடையே பரப்பி விட, முதலில் சேர்ந்ததுகட்சிக்காரர்கள். சாதாரணமாய் சந்திக்க முடியாத மாறன் சகோதர்ர்கள் தங்களைகூப்பிட்டு பேசும் போது உடன்பிறப்புகளுக்கு புல்லரிப்பாகி, உணர்ச்சிவசப்பட்டு உடன்இணைந்தார்கள்.

அவர்கள் அப்படிஉணர்ச்சிவசப்பட்டு இணைந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாய் இருந்தார்கள்.அதாவது லோக்கல் சேனல்களை பொறுத்தவரை. அவர்கள் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.

சென்னையை விட மற்றஊர்களில் சேட்டிலைட் சேனல்களுக்கு இணையாய் லோக்கல் சேனல்கள் புகழ் பெற்றுக்விளங்கிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பெரிய வருமானமும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்நிலையில் அவர்களது சேனலை காட்டக்கூடாது என்றால் ஆட்டத்திற்கே வர மாட்டார்கள்என்பதால் எஸ்.சி.வியும் யோசிக்க ஆரம்பித்தது. வேறு வழியில்லாமல் அங்கிருக்கும்லோக்கல் சேனல்களை அனுமதித்தது. முதலில் அவர்களை சேனலை அனுமதித்துவிட்டு, பின்புஅவர்களிடமிருந்து மாத்த்திற்கு இவ்வளவு என்று அவர்கள் சேனலை ஒளிபரப்ப ஒரு தொகையைவாங்கிக் கொள்ள ஆரம்பித்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive