Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, December 6, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011


சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.


தம்பி வெட்டோத்தி சுந்தரம்
ரொம்ப நாளாய் தயாரிப்பில் இருந்து வெளியான திரைப்படம். கரண் மிகவும் எதிர்பார்த்திருந்த படம். விதயாசாகரின் இசையில் ஒரு பாடல் சூப்பர்ஹிட். படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஆவரேஜாய் இருந்ததற்கு காரணம் அஞ்சலி என்பது திரையில் அஞ்சலி தெரிந்தவுடன் கிடைத்த விசிலை வைத்தே சொல்லிவிடலாம். சுமார் நான்கரை கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம், எழுபத்தியைந்து லட்சம் எம்.ஜி. முறையில் வெளியாகி, அதுவும் கடைசி நேரத்தில் அந்த விநியோகஸ்தர் பணப்பிரச்சனையில் மாட்டி வெளிவந்த படம். இதற்கு முன்னால் வந்த படங்களைவிட சுமாரான படமாய் இருந்தும் கரண் என்கிற நடிகரின் ப்ரெசென்ஸும், கதையே இல்லாமல் படம் வரும் காலத்தில் அதிகப்படியான கதை சொல்லி குழப்படித்ததன் காரணத்தினாலும், இடைவேளைக்கு பிறகு பார்க்கிறவர்கள் கழுத்தையெல்லாம் அறுத்து கொண்டிருந்ததால் டூமச்சாகி விட்டது. மீண்டும் கரணுக்கு இது ஒரு தோல்விப்படமாய் அமைந்தது வருத்ததிற்குரியதே. விமர்சனம் படிக்க

வித்தகன்
பார்த்திபன் நடித்து வெளிவரும் 50வது படம். வித்த”கன்” என்றெல்லாம் சுவாரஸ்யமாய் விளம்பரத்துக்கு யோசித்தவர் அதே போல வித்யாசமாய் யோசிக்கிறேன் என்று படத்தின் ரெண்டாவது பாதி முழுவதும் வித்யாசமாய் யோசித்து உட்கார முடியாமல் செய்து விட்டபடியால் படம் வேலைக்காகமல் போய்விட்டது. நல்ல பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது என்று நினைக்கிறேன். பார்த்திபனின் லொல்லுக்காக பார்க்க உட்கார்ந்தாலும் பின்பாதியில் அவராலேயே தியேட்டரை விட்டு கதிகலங்கி வரும்படி படமிருந்தது வருத்தத்துக்குரியதே. விமர்சனம் படிக்க

மயக்கம் என்ன?
தீபாவளிக்கே வந்திருக்க வேண்டிய படம். தியேட்டர் கிடைக்காததாலும், பெரிய படங்களோடு வர வேண்டாம் என்று நினைத்ததாலும் இரண்டு வாரம் தள்ளி வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தும், படத்தின் ரெண்டாவது பாதி மிகவும் மெதுவாக சென்று பல பேரின் பொறுமையை சோதித்ததால் படம்  வெகுஜனங்களிடம் எடுபடவில்லை . சென்னை,கோவை போன்ற ஏ செண்டர்களில் படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருக்கிறது. என்றாலும், வசுலைப் பொறுத்தவரைக்கும் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.விமர்சனம் படிக்க

பாலை
என்ன தான் அழுது புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும், செண்டிமெண்ட் பேசியும் இப்படம் ஒரு தோல்விப் படமே. சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது. விமர்சனம் படிக்க

இதை தவிர, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மழை, நான் சிவனாகிறேன் போன்று இன்னும் சில சின்னப் படங்கள் வந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை என்பதால் அவை லிஸ்டில் வரவில்லை. மொத்ததில் இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மோசமான மாதமே.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive