Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Monday, December 12, 2011

படித்து கிழித்தவை 2011

சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆங்கிலத்தில்  இந்த வருடம் சேத்தன் பகத் தான் டாப் ப்ரியாரிட்டி

1.One Night @ call centre -சேத்தன் பகத்
நா
ன் படித்த முதல் புத்தகம். வழக்கமாய் வாய் சுளுக்கிக் கொள்ளும் ஆங்கிலமாய் இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட கதை. க்ளைமாக்சில் மட்டும் சினிமா பாணியை வைத்திருந்தார். பட் சுவாரஸ்யமான கேரக்டர்கள், அவர்களின் உறவுகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று நம் நண்பர்களுடன் பயணித்தார் போல இருந்த நாவல்.

2. 2 states The story of My  Marraige- சேத்தன் பகத்
முதல்
புத்தகம் படித்த இம்பாக்டில் வாங்கிய புத்தகம். ஒரு சவுத் இந்தியன் பெண்ணுக்கும் நார்த் இந்தியன் பையனுக்குமான காதல் கதை. படு ஃபிலிமியாய் இருந்தது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், காதல், ஊடல், காதலுக்கான போராட்டம், க்ளைமாக்ஸ் எல்லாம் படு சினிமாவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.

3. Revolution 2020 - சேத்தன் பகத்

கோபால், ராகவ், ஆர்த்தி ஆகியோர் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். கோபால் வறுமையில் இருப்பவன். ராகவ் புத்திசாலி வசதியானவன். ஆர்த்தி இலக்கில்லாத ஒர் அழகிய இந்தியப் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையேயான காதல், வன்மம், துரோகம், தியாகம் பற்றியது. எனக்கு இக்கதையின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை.

4. Three mistakes of my life- சேத்தன் பகத்

அஹமதாபாத்தில் இருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. கிரிகெட், குஜராத் பூகம்பம், இந்துத்துவா, மதவாதம் என்று பல விஷயங்களை தொட்டிருப்பார். மிக இயல்பான நடையில் இம்ப்ரசிவான எழுத்து. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பான கதை.

Five points to some one- சேத்தன் பகத்
த்ரீ இடியட்ஸின் மூலம். இன்னும் முடிக்கவில்லை.. 

And Thereby Hangs a Tale -Jeffrey Archer  இன்னும் முடிக்கவில்லை.

தமிழில்

தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை.

1. வெட்டுபுலி – தமிழ்மகன் – உயிர்மை
அருமையான புத்தகம். அரசியலையும் சினிமாவையும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு விஷயம் என்பதை ஒரு நூற்றாண்டு கதையாய் சொன்னதில் என்னை அடித்துப் போட்டவர். நிச்சயம் படித்தே தீர வேண்டிய புத்தகம்

2. மாதொருபாகன் – பெருமாள்முருகன் -ஆழி
இதுவும் ஒரு பீரியட் நாவல். குழந்தையில்லாத தம்பதிகளைப் பற்றிய கதை. குழந்தைக்காக மனைவியை ஊர் திருவிழாவில் சுற்றியலையும் சாமியின் உருவமாய் அன்று மட்டும் பூஜிக்கப்படும் இளைஞர்களிடம் விட்டு குழந்தை பெற விழையும் கதை. ஒரே மூச்சில் படித்து மிரண்டு போனக் கதை. அதுவும் க்ளைமாக்ஸ் அட்டகாசம். இதுவும் படித்தே தீர வேண்டிய நாவல்.

3. பணம் –கே.ஆர்.பி. செந்தில் – ழ பதிப்பகம்
கே.ஆர்.பி.செந்தில் எழுதிய புத்தகம். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம். ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய அத்துனை அம்சங்களோடு எழுதப்பட்ட நிஜ வாழ்க்கை நான் -பிக்‌ஷன்.

4. ஏவி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் –முற்றம்.
தமிழ்மகன் எழுதிய நாவல். சினிமாவில் புகழ் பெற எல்லாவற்றையும் இழந்து ஜெயிக்கும் நாயகியின் கதை. இன்றைய டர்ட்டி பிக்சரை நினைவுப்படுத்தினாலும் பெரிதாய் பாதிக்காத நாவல்.

5. உலோகம் – கிழக்கு
ஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம். சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.

6. தேகம் – உயிர்மை
சாரு நிவேதிதாவின் நாவல் எனும் மொக்கை. டார்ச்சர், கிகிலோ, என்று ஜல்லியடித்த டார்ச்சர். ஏண்டா படித்தோம் என்று யோசிக்க வைத்த புத்தகம்.

7. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
அற்புதமான புத்தகம். நம்மையே ஒரு முறை உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும் புத்தகம்.

8. உணவின் வரலாறு – பா.ராகவன்

உணவைப் பற்றிய படு சுவாரஸ்யமான புத்தகம்.

9. திரைச்சீலை – ஓவியர் ஜீவா
தேசிய விருது வாங்கிய புத்தகம். இவரின் ரசிப்பனுபவமும், அதை எழுதிய விதத்திற்காகவும் படிக்க வேண்டிய புத்தகம்.

10.எளியகுறள் – கமலாபாலாதிருக்குறளுக்கு ரெண்டு வரியில் எளிமையான விளக்கவுரை கொண்ட நூல்.

11.ராயர்ஸ் காபி கிளப் – இரா.முருகன்
இரா.முருகனின் சுவாரஸ்யமான திண்ணைப் பேச்சு போன்ற ஒரு புத்தகம்.

12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி
தமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.
நம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.

13.நீங்களும் இயக்குனர் ஆகலாம் – கே.பி.பி. நவீன்

சினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய விழையும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

14.சாமானியனின் கதை- உலகநாதன்
பதிவர் உலகநாதனின் வாழ்வனுபவகள். நான் - பிக்‌ஷன்

15.உளவுக் கோப்பை – தரணி

படு மொக்கையான நாவல். நல்ல வேளை கிழக்கு 50 ரூபாய்க்கு புத்தகம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது.

16.என்னைச் சுற்றி சில நடனங்கள் – பாலகுமாரன்
வழக்கமான பாலகுமாரன்

17.ரப்பர்- ஜெயமோகன்

ஆரம்பத்தில் டயலாக்குகள் மனதினுள் ஏறாமல் இருந்தது ஆனால் போகப் போக  கட்டிப் போட்ட நாவல்.

18.கலைவாணி
- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை- ஜோதி நரசிம்மன்
சுவாரஸ்யமான புத்தகம் என்றாலும் மனது கனக்க வைக்கும் புத்தகம்.

19.அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்
இது
நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப்  நாவல்.

20.பதவிக்காக – சுஜாதா
21.பாரதி வாழ்ந்த வீடு – சுஜாதா
22.இரயில் புன்னகை – சுஜாதா
23.கனவுத் தொழிற்சாலை- சுஜாதா
24.கடவுள்களின் பள்ளத்தாக்கு- சுஜாதா
25.சின்னக்குயிலி- சுஜாதா
26. ஜன்னல் மலர்- சுஜாதா
27.கம்ப்யூட்டர் கிராமம்-சுஜாதா
28.சிவந்த கைகள்-சுஜாதா
29.கரையெல்லாம் செண்பகப்பூ-சுஜாதா
30.உள்ளம் துறந்தவன்-சுஜாதா
31.கை- சுஜாதா
மேலுள்ள புத்தகங்கள் எல்லாம் மீள் வாசிப்பு.. சுஜாதா ஆல்வேஸ் ராக்ஸ்

32.நீங்கதான் சாவி- சுரேகாபதிவர் சுரேகாவின் தன்னம்பிக்கை கட்டுரைகள். சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து எழுதிய விதம் சுவாரஸ்யம்.

33.ஸ்ட்ராபரி –ஸ்ரீசங்கர் தொகுப்பு
பாலியல் சம்பந்தப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நூல். எல்லாக் கதைகளும் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஓகே புத்தகம்.

34. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

பாதி படித்த நிலையில் உள்ள புத்தகங்கள்

ஆண்பால் பெண்பால்
- தமிழ்மகன் லேட்டஸ்ட் -படு சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கிறது அநேகமாய் இன்னும் ரெண்டு நாளில் முடித்து விடுவேன்.

இடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்
- இது பத்து பக்கம் வந்திருக்கிறது.

அலகிலா விளையாட்டு  - பா.ராகவன் - என்னவோ தெரியலை படு பயங்கர ஸ்டார்ட்டிங் ட்ரபிளாக இருக்கிறது.

ஆயில் ரேகை – பா.ராகவன் -
ஆரம்பிக்கவேயில்லை

ஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பு.-
பாதி படித்துவிட்டேன். என்ன எழுத்தாளண்டா.

புதுமைபித்தனின் முழு தொகுப்பு-
இதுவும் பாதி.. முடிந்த நிலையில் இருக்கு.

வயது வந்தவர்களுக்கு மட்டும் –
கி.ராஜ நாராயணன் - இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.

சீனா விலகும் திரை – பல்லவி அய்யர் -
இதுவும் பாதி படித்த நிலையில்

சூடிய பூ சூடற்க -
  நாஞ்சில் நாடன். இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive