Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Saturday, December 3, 2011

கொத்து பரோட்டா – 05/12/11

compare sri
கடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர், டான்ஸர், போன்ற நிகழ்ச்சிகள் எடுபட்ட அளவிற்கு மற்ற டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சிகள் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். சங்கரா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் ஆன்மீக சுவாரஸ்யமாய் பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். பஜன் சாம்ராட் என்கிற இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வை பார்த்தேன். நன்றாகவேயிருந்தது.  பஜனை பாடல்கள் என்பது பக்த்தியை வெளிப்படுத்த உதவும் ஆன்மீக வழி. அதிலும் சில பல சூட்சமங்களும்,சுவாரஸ்யங்களும், இசையறிவும், நெளிவு சுளிவுகளும் இருக்கத்தான் செய்கிறது. செளம்யா, குசுமா ஆகியோர் நடுவர்களாய் இருக்க, வெற்றி பெரும் குழுவினருக்கு ”பஜன் சாம்ராட்” பட்டமும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கிறார். பஜன் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய கேம்பெயின், கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.


BhajanSamraat101111_11 copy என்னடா இவனுக்கும் “பஜனைக்கு” என்ன சம்பந்தம்?  இதையெல்லாம் எப்படி பார்த்தான் என்று ஆச்சர்யபடுகிறவர்களுக்கு,  இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஜெய் ஆதித்யாவும், தொகுப்பாளர் ஸ்ரீயும் என் நண்பர்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது  இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்ல, இதெல்லாம் ஒர்க்வுட் ஆகுமா? என்று கேட்டேன். நீ பார்த்துட்டு சொல்லேன் என்றார்கள். முதல் எபிசோட் பார்த்தேன். ஒர்க்கவுட் ஆகும்தான் போலிருக்கு.கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஒர் அருமையான அனுபவமாய் இருக்கிறது. எதுக்கும் நீங்களும் பார்த்துட்டு சொல்லுங்க.. சங்கரா சேனலில் வியாழன் – வெள்ளி அன்று மாலை 7-8 மணிக்கு.
################################################
டர்ட்டி பிக்சர் படம் இந்தியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. இருக்கும் மீடியா திடீரென சவுத் செக்ஸ் சைரன் சில்க் சுமிதாவை பற்றி ஆளாளுக்கு பேட்டியும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும், படத்தின் விளம்பரமாய் இல்லாமல் தனி ஸ்டோரியே கவர் செய்திருக்கிறார்கள். சில்க் ஸ்மிதாவின் தற்கொலைப் பற்றியும், ஏன் நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் டெல்லியிலிருந்து வெளிவரும் The Pioneer  என்கிற பத்திரிக்கையிலியிருந்து  என்னிடம் பேட்டி எடுத்தார்கள்.
##############################
நேற்று முன் தினம் அண்ணாநகர் திருமங்கலத்திலிருந்து காலையில் ஒரு பக்கம் முழுவதையும் ஒன்வே ஆக்கிவிட்டார்கள். ரோடு ஏதாவது போடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. இருக்கிற ரோடே புழுதி பறந்து கொண்டிருக்க, இவர்கள் ஒன் வே ஆக்கி பெரிய ட்ராபிக் ஜாம் ஆகியிருந்தது. அண்ணாநகரிலிருந்து நூறடி ரோடில் வர, ஊரைச் சுற்றி அண்ணாநகர் உள்ளுக்கு வந்து திரும்பவும் அண்ணாநகர் ப்ளூஸ்டார் வந்து அங்கிருந்து சாந்தி காலனி போய், கோயம்பேடு வர வேண்டியதாகிவிட்டது. என்னவென்று கேட்டால் போலீஸ்காரர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தூசிகளின் நடுவில் சாலிக்கிராமம் வந்து சேர்ந்தோம். இன்று காலையில் செய்திதாள்களை பார்த்த போதுதான் தெரிந்தது. மெட்ரோ பணிகளூக்காக மாற்ற வேண்டியிருக்கலாம் என்பதால் இந்த வழித்தடங்களை டெஸ்ட் செய்திருக்கிறார்களாம். எழவு எதை வேணா செஞ்சித் தொலைக்கட்டும். ஆனா ஒரு அறிவிப்பு செஞ்சிட்டு செஞ்சிருந்தா நான் அந்த பக்கம் போயிருக்க மாட்டேன் இல்லை. எல்லா வேலையும் கெட்டிருச்சு. அத்தனை வண்டியின் பெட்ரோல், டீசல் வேஸ்ட். பொல்யூஷன். சே..
###############################################
kaatral-nadanthen சங்கீத ரசிகர்களுக்கு டிசம்பர் இசைவிழாப் போல புத்தக விரும்பிகளுக்கும், என்னை போன்ற “பன்முக எழுத்தாளர்களுக்கும்”, படிப்பாளிகளுக்கும் டிசம்பர் வந்தால் புத்தக வெளியீட்டு விழாக்கள். இந்த மாதம் முதல் தேதியிலேயே ஆரம்பித்துவிட்டது. உயிர்மையின் விழா. தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தவன்” என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா. L.L.A. பில்டிங்கில் நடந்தது. கூட்டத்தின் வாயிலில் சாருவின் வாசகர்கள் அவரின் “எக்ஸைல்” நாவல் வெளியீட்டிற்கான பேம்லெட்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நல்ல கூட்டம். விவேக், சுப.வீரபாண்டியன், எஸ்.ரா, பவா. செல்லதுரை என்று ஏகப்பட்ட எலக்கியவாதிகளுடன் எனக்கும் தண்டோராவுக்குமான தானைத்தலைவி தமிழச்சி தங்கபாண்டியனும் வந்திருந்து சிறப்பித்தார். விவேக் நான் படிக்கவில்லை, என்று சொல்லி, மேடையில் இருந்த போது படித்துவிட்டு புத்தகத்தில் இருந்த பாதி கவிதைகளை படித்துவிட்டார். அவ்வப்போது தன் படங்களி அவர் சொன்ன கருத்துக்களையும் சேர்த்து தான் இதை ஏற்கனவே சொல்லியிருப்பதாய் சொன்னார். பவா. சுவாரஸ்யமாய் பேசினார். சுப.வி.. ஏதோ திட்டி பேசினார் என்று சொன்னார்கள். கீழே அரட்டையடிக்க போய்விட்டதால் கேட்கவில்லை. தலைவி தமிழச்சி வழக்கம் போல் மலையாள எழுத்தாளர், சாத்தர் என்று அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் அவர் பேச்சை எப்போதும் கேட்பதேயில்லை என்ன மணிஜி. அநேகமாய் என்னுடய புதிய புத்தகமான “தெர்மாக்கோல் தேவதைகள்” வெளிவரும் என்று நினைக்கிறேன்.
#####################################
கொலைவெறி கார்னர் என்று ஒரு காலத்தை வாரா வாரம் எழுத வேண்டியிருக்கும் போலருக்கு. தினம் ஒரு வர்ஷன் படு சுவாரஸ்யமாய் அவரவர் ரேஞ்சுக்கு கற்பனையை கிளப்பி விட்டுக் கொண்டுதானிருக்கிறது. அந்த வகையில் இந்த பாடல். கொலைவெறியின் சுத்தத் தமிழ் வர்ஷன்.
###########################################
ப்ளாஷ்பேக்
இந்திய சினிமாவின் முக்கியமானவர்களில் ஒருவரான தேவ் ஆனந்த் மறைந்துவிட்டார். இந்தி திரையுலகிலேயே ஒரு சிறந்த ஸ்டைலிஷான நடிகர் அவர். இவரது படங்களின் பாடல்கள் மாபெரும் ஹிட் வரிசைகள். திரையில் இவர் செய்யும் சேஷ்டைகள் இன்றைய இளைஞர்களாலும் ரசிக்கப்படுகிற ஒன்று. இந்தி சினிமாவில் இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என்று பன்முகங்களைக் கொண்டவர்.அன்னாருக்கு என் அஞ்சலிகள்.இந்த பாடல் பேயிங் கெஸ்ட் என்கிற படத்திலிருந்து. மிகப் பழைய பாடல். ஆனால் இப்பாடலில் திரையில் தேவ் ஆனந்தின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸை பாருங்கள். அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கும். பாடலும் தான்.
#####################################
நீங்களும் இயக்குனராகலாம் இப்புத்தகத்தை எழுதியவர் “உச்சக்கட்டம்” “நெல்லை சந்திப்பு ஆகிய படங்களை இயக்கிய கே.பி.பி.நவீன். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின்  உதவியாளர். சுவாரஸ்யமான மனிதர். அதே போல இவர் எழுத்தும் இருக்கிறது. சினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய ஆசைப்படும் அத்துனை இளைஞர்களுக்கும் இது ஒரு சிறு கையேடு என்றே சொல்வேன். சினிமாவின் அடிப்படை. ஸ்கிரிப்ட், ஒன்லைன்,ஃப்ரி ப்ரொடக்‌ஷன். ஃப்ரொடக்‌ஷன், ஃபோஸ்ட் ப்ரொடக்‌ஷன்,மற்றும் ஷுட்டிங் அனுபவங்கள் என்று இயக்குனராவதற்கு உண்டான அத்துனை தகுதிகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் புத்தகம். நிச்சயம் சினிமா ஆர்வலர்கள் படிக்க வேண்டிய புத்தகம். நக்கீரன் வெளியிடு.

########################################
யுடான்ஸ் கார்னர்
ஆதி - பரிசல்-யுடான்ஸ் நடத்திய சவால் சிறுகதை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கும் விழா வருகிற பதினெழாம் தேதி சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் நடக்க உள்ளது. மேலும் நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் http://udanz.com வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
#########################################
தத்துவம்
நீ நிரம்ப மாறிவிட்டாய் என்று மற்றவர்கள் சொன்னால் அதற்கு அர்த்தம் நீ அவர்கள் விரும்பியதைப் போல நடிப்பதை நிறுத்தி விட்டாய் என்று.

உன்னுடய மோசமான நாட்களிலும், உன் தவறுகளால் வரும் ப்ரச்சனைகளின் போதும் உடன் இருக்கும் பெண்ணை எக்காலத்திலும் விட்டு விலக விடாதே

உன் வாழ்க்கையில் அவன் வருவதற்கு முன் சந்தோஷமாய்த்தான் இருந்தாயென்றால் அவன் இல்லாமலும் இருக்க முடியும்.
################################
அரசியல் கட்சி மீட்டிங்குக்கு ஆட்களை லாரியில் ஏற்றிக் கொண்டு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூட்டிப் போவது வழக்கம். ஆனால் ஏர்போர்ட்டில் ஒரு ஹாலிவுட் நடிகரை வரவேற்க மணிக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தன் புதிய படமான மிஷன் இம்பாசிபிள் படத்தை இந்தியாவில் ப்ரோமோட் செய்ய மும்பை வந்திருக்கிறார். அவரை ஏர்போர்ட்டில் வரவேற்கவும், கைகுலுக்கவும், ஜூனியர் ஆர்டிஸ்டுகளை அழைத்திருக்கிறார்கள். என்ன கிரகமடா சாமி.
###################################
அடல்ட் கார்னர்
மனைவி பல நாட்களாய் கோமாவில் இருக்க, கணவன் தினமும் அவளின் இடது மார்பகத்தை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருக்க, ஒரு நாள் அவளிடம் அசைவு தெரிந்தது, டாக்டர் வெரிகுட் இனி வலது மார்பை தடவு என்று சொல்ல, அவளிடம் மேலும் அசைவு தெரிய ஆரம்பிக்க, டாக்டர் அப்படியென்றால் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள், சீக்கிரம் உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அந்த பெண் இறந்துவிட்டாள். டாக்டர் கணவனிடன் என்ன நடந்துச்சு? என்று கேட்க, பண்ணும் போது அவ தொண்டை அடைச்சிக்கிச்சு என்றான்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Loading...

Blog Archive