Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Monday, November 7, 2011

Mogudu

Mogudu  Stills4 (58) கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில், டாப்ஸி, கோபிசந்த, ராஜேந்திரப்ரசாத், நரேஷ், ரோஜா என்று ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம் குழுமியிருக்கும் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது இப்படத்தைப் பற்றி. அதிலும் போஸ்டர் டிசைனில் டாப்ஸியின் 16 எம்.எம். பரந்த முதுகை பார்த்ததும், பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை இளைஞரகளுக்கு ஏற்படுத்தியிருந்ததால் பார்த்தாகிவிட்டது.


ராஜேந்திரப்ரசாத் ஹைதராபாத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பெரிய குடும்ப தலைவர், மூன்று பெண்கள், மாப்பிள்ளை, பேரன் பேத்திகளுடன் வாழும் பெரிய குடும்பத் தலைவர். இவர்களின் ஒரே ஆண் வாரிசு கோபி சந்த. நல்லவர், வல்லவர், ஒரு கார் கம்பெனியில் வேலை பார்க்கிறாரா? அல்லது ஓனரா என்று தெரியவில்லை. அங்கு இருக்கிறார். வீட்டுக்கு அடங்கிய நல்ல பிள்ளை. இவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்ய குடும்பமே தேடுகிறது. ஆனால் ஒன்றும் அமையாமல் இருக்க, கோபிசந்த டாப்ஸியை ஒரு நடன விழாவில் சந்திக்கிறார். பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்படுகிறார். அடுத்த சந்திப்புகளில் காதலை சொல்கிறார். டாப்ஸியின் அம்மா ரோஜா ஒரு அரசியல்வாதி. கடைசியில் குடும்பத்தினர் அனைவரும் சந்திக்கும் போது, கோபிசந்த அப்பாவும், டாப்ஸியின் அப்பாவும் சிறு வயது நண்பர்கள் என்றதும் திருமணம் சுலபமாக நடந்துவிடுகிறது. மறு வீடு போகும் சமயம் ஒரு சின்ன ப்ரச்சனை பெரிதாகி, ஈகோவினால் அடிதடியாகி, டாப்ஸி தாலியை கழட்டி வீசி விடுகிறார். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
Mogudu  Stills4 (39) கோபிசந்துக்கு இப்படம் ஒரு வித்யாசமான படமே. வழக்கமான அடிதடி விஷயத்திலிருந்து விலகி ஒரு சப்டிலான கேரக்டரில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.  பாடல்களிலும், நடனக் காட்சியிலும், அவ்வப்போது சிக்ஸ்பேக்கில்லாது சாதா பேக்கில் பீச்சில் நடந்து வரும் போது ரசிக்க முடிகிற அளவிற்கு, இவர் உணர்ச்சிவசப் படுகிறேன் பேர்விழி என்று அழும் காட்சிகளில் சிரிப்பைத்தான் வரவழைக்க முடிகிறதே தவிர.. பீலிங்கை அல்ல என்று சொல்ல ஃபீலிங்காய்த்தான் இருக்கிறது. மற்றபடி ஓகே.
Mogudu  Stills4 (42)
டாப்ஸிக்கு மிக ஸ்ட்ராங்கான கேரக்டர். முதல் காட்சியில் பரத நாட்டியம் ஆடிவிட்டு, அடுத்த காட்சியில் முழு மப்பில் கோபிசந்த் காரில் ஏறும் காட்சியில் இருந்து, தாலியை வீசி எறிந்துவிட்டு, அவர் பின்னாலேயே போய் எங்கே வேறு ஒருத்தியுடன் செட்டில் ஆகிவிடுவானோ என்று நொந்து அலைந்து காமெடி செய்வதும், பின்பு செண்ட்டிமெண்டாய் என் புருஷன்.. என் புருஷன் என்று ஆங்காரப் படுவதுமாய் பல ஷேடுகளை உடைய கேரக்டர். கொஞ்சம் குருவி தலை பனங்காய் என்றாலும்  அழகாய் சமாளித்திருக்கிறார். முக்கியமாய் தன் சொந்த குரலில் பேசி நடித்திருக்கும் படம் இது. கொஞ்சம் ஆம்பளைத்தனமான குரல் என்றாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.  ஷாரதா தாஸின் பிகினி கவர்ச்சி ம்ம்ம்ம்.. சில காட்சிகளில் சட்டென் ரீமா சென்னை நினைவு படுத்துகிறார்.
Mogudu  Stills4 (57) ராஜேந்திர ப்ரசாத், வழக்கமாய் இம்மாதிரி கேரக்டரில் தாத்தாவாக்கி கே.விஸ்வநாத்தை போடுவார்கள். இதில் கொஞ்சம் வித்யாசமாய் அப்பாவாக்கி ராஜேந்திரப்ரசாத்தை போட்டிருக்கிறார்கள். கொடுத்த கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். அதே போல் நரேஷும். பட். கலக்கி எடுப்பவர் டாப்சியின் அரசியல்வாதி அம்மாவாக வரும் ரோஜாதான். சும்மா அடி தூள் பரத்துகிறார். அவரது குரலும், பாடி லேங்குவேஜும் அசத்தல். படு கேஷுவலும் கூட.

பாபு ஷங்கரின் இசையில் பெரும்பாலும் ஏற்கனவே திரேதாயுகத்தில் போடப்பட்ட ஆங்கில பாடல்களில் உல்டாதான். இருந்தாலும் ஓகே. பின்னணியிசை ஜாரிங். ஒளிப்பதிவு வழக்கம் போல எல்லா கிருஷ்ண வம்சியின் படம் போலவே நச். மாச்சோ மேன் கோபிசந்தை இம்மாதிரியான சாப்ட் கேரக்டரில் நடிக்க வைத்தமைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ஆனால் அதே கொஞ்சம் மைனசாக போய்விட்டதோ என்று தோன்றுகிறது. இப்படத்தில் வரும் சிலபல காட்சிகள் ஏற்கனவே கிருஷ்ணவம்சியின் பழைய படங்களில் பார்த்த நினைவு வரத்தான் செய்கிறது. முதல் பாதி சுவாரஸ்யமாய் போகிறது. இரண்டாவது பாதியில் டாப்ஸி, ஷாரதா, கோபிசந்த மொரீஷியஸ் எபிசோட் சுவாரஸ்யமாய் இருந்தாலும் ஃபினிஷிங்கில் டெம்ப்ளேட்டாய் போனது சுவாரஸ்யத்தை கெடுக்கவே செய்கிறது. டாப்ஸியின் தம்பிக்கு ஏன் கோபிசந்த் மீது அவ்வளவு காண்டு?. வேணு மாதவின் காமெடி பெரிதாய் எடுபடவிலலை என்றாலும் இரண்டாம் பாதியில் டாப்ஸி, ஷாரதா, கோபிசந்த சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகள் சுவாரஸ்யம்.
Mogudu – 25/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive