Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, November 20, 2011

புத்தக விமர்சனங்கள்.

KB D4 F1 V1
அன்பு நண்பருக்கு வணக்கம்,

தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.


Final Layout1 “மீண்டும் ஒரு காதல் கதை” சிறுகதை தொகுப்பு ஒவ்வொன்றையும் திரும்பத், திரும்ப படித்தேன். சில சினிமாவுக்குண்டான கதை போல, சில குறும்படங்களுக்குண்டான கதை போல, சில திரைக்கதையுடன் திருப்பதிற்குண்டான காட்சி போல, அள்ளி அள்ளி குடித்தாலும் தெவிட்டாத ஊற்று நீர் போல இருந்தது. லயோலா.. SRM.. , போன்ற விஸ்காம் ஸ்டூடன்ஸ் குறும்படத்திற்கு கதை இல்லாமல் தவிக்கிறார்களாம். உங்கள் புத்தகத்தை கொஞ்சம் படிக்க சொல்லுங்கள்.
Cinema Viyabaram ”சினிமா வியாபாரம்” ஒவ்வொரு  சினிமாக்காரன் கையிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.  எனக்கு தெரிந்து இப்படித் தெள்ளத் தெளிவாக சினிமாவின் வியாபாரம் பற்றி வந்த முதல் புத்தகம் இது தான் என்று நினைக்கிறேன். இத்தனை வழிகளிலிருந்து  சினிமாவுக்கு பணம் வருமா?  வியாரம் விஸ்தரிப்பு இப்படி இருக்கிறதா என வியக்க செய்கிறது. தாங்கள் சினிமாவைப் பற்றி இனி எத்தனை புத்தகம் எழுதினாலும், சினிமாகாரர்களூக்கு இது போல ஒரு உபயோகமான புத்தகம் அமையாது என்பது உண்மையிலும் உண்மை.

சன் டிவியை சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள். தாங்கள் ‘உயிரிலே கலந்தது” படம் விநியோகம் எடுத்து நட்டபட்டது, சில சிரித்தது என விலாவாரியாக சங்கோஜமில்லாமல் காயம்பட்டதையும் வீரத்தழும்பாக எண்ணி கூறி வியக்க வைக்கிறீர்கள். பண்டிகை நேரங்களில் சின்ன பட்ஜெட் படம் ரிலீஸ் செய்ய வேண்டாம் என அழகாக விளக்கி கூறுகிறீர்கள். வினியோகத்தில் நெளிவு சுளிவு சூட்சுமங்களை இப்படி புட்டு, புட்டு  இதுவரை யாரும் சொன்னது. இல்லை. திரைப்படத்தை கலையாக, நினைத்து, நேசித்து, சுவாசித்து அனுபவரீதியாக  தாங்கள் எழுதிய இந்த புத்தகம் சினிமாக்காரனுக்கு ஒரு “திருக்குறள்” மாதிரியானது. பாதுகாத்து, படித்து, மனப்பாடம் செய்து பொக்கிஷம் போல பேணிகாக்க வேண்டிய ஒரு நூல்.

கிட்டத்தட்ட பாதி பக்கங்கள் ஹாலிவுட் வியாபாரம் பற்றி இருக்கிறது. அந்த பக்கங்களை குறைத்து மேலும் தென்னிந்திய மொழி சினிமா வியாபாரம் பற்றி எழுதியிருக்கலாம்.  வரலாறு, சிலந்தி ஒன்றாக ரிலீஸ் ஆகி “சிலந்தி” மிகப் பெரிய வெற்றி என்று கூறி இருந்தீர்கள். சிலந்தியை விட ‘வரலாறு” மிகப் பெரிய வெற்றி என்பது என் கருத்து உண்மையும் கூட.

“சேது” படத்தின் தங்கள் அனுபவம் பற்றி கூறியிருந்தீர்கள். “அது போல மிகப் பெரிய தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் தயாரிப்பில் “நாயகன்’ எடுக்க, படத்தின் பட்ஜெட் எகிற, தயாரிப்பாளருக்கு போட்ட முதல் எடுப்போமா/ என சந்தேகம் வந்து தயாரிப்பை ஜி.வி கைக்கு மாற்றிவிட, ‘நாயகன்” மிகப் பெரிய வெற்றி. வசூலில் அன்று மிகப் பெரிய சாதனை படைத்தது.. அதே போல சங்கிலிமுருகன் தயாரிப்பி “காதலுக்கு மரியாதை” உரிமையை ஆஸ்கார் ரவிசாருக்கு மாற்றி ஏகோபித்த வெற்றி ஆன சரித்திரத்தையும் படைப்பில் பதிவு செய்து இருக்கலாம்.

தியேட்டர் பற்றி கூறும் போது ‘சபையர்” பற்றி கூறியிருக்கலாம். மரோசரித்ரா,  கயாமத் சே கயாமத் தக் , சிபிஐ டைரிக் குறிப்பு இப்படி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த படங்கள் வெளியான காம்ப்ளெக்ஸ் தியேட்டரின் முன்னோடியான சபையர் காம்ப்ளெக்ஸ் பற்றி தங்கள் படைப்பின் வரலாற்றில் பதிவு செய்து இருக்கலாம். மற்றபடி இந்தப்புத்தகம் படம் எடுப்பவர்களுக்கு பாடப் புத்தகம். கடைசியாய் ஒன்று கூறி முடிக்கிறேன்.

தமிழ், ஹாலிவுட் சினிமாவியாபாரம் பற்றி இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்  சினிமா விஷயங்களையும், வியாபாரங்களையும் பற்றி சில பக்கங்கள் ஒதுக்கி, “இந்திய சினிமா வியாபாரம்” என்று பெயரிட்டு தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்த புத்த்கம் மொழிபெயர்த்து  வெளியிட்டால் மிக பயனுள்ள்தாய் இருக்கும். இந்திய திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைவர் கையிலும் தங்கள் புத்தக்ம் தவழும் தங்கள் புகழ் பரவும். தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பற்பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும் என்பது உறுதி.

ஓட்டல் பில் சம்பவத்தில் என் சகோதரி (தங்கள் வீட்டுக்காரம்மா) திறமை தெரிகிறது. தங்களின் எழுத்து திறமை, சினிமா கதை புலமைக்கு பின்னால் தங்கள் வீட்டுக்காரம்மா தெரிகிறார். (ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது உண்மைதானே?) . ஆம் பில் சமாச்சாரத்தில் அவர்களின் நிர்வாக திறமை தெரிகிறது.  அதனால் தான் வீட்டுப் பிரச்சனை இல்லாமல்.. தங்கள் திறம்பட யோசித்து, படம் பார்த்து, படித்து, இப்படி திறமை வளர்த்து எழுத்தாற்றல் படைத்தவராக, எல்லா விஷயத்திலும் திறம்ப்ட பேசுபவராக, போற்றுபவராக இருக்கின்றீர்கள் அவருக்கு என் நன்றி
by
D. ஜீவா
From K.S.Ravikumar

No comments:

Post a Comment

Followers

Blog Archive