Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, November 8, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011

செப்டம்பர் மாதம் வெளியான படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற படமாய் அமைந்தது ஏ.ஆர்.முருகதாஸின் “எங்கேயும் எப்போதும்” திரைப்படம் மட்டுமே. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருமித்த பாராட்டை சமீபத்தில் பெற்ற படமென்றால் இது ஒன்று தான். வசூல் ரீதியாய் ஆரம்பித்த ரெண்டொரு நாள் தடுமாறினாலும் மக்களின் மவுத் பப்ளிசிட்டியினாலும், மீடியா ப்ரோமஷனக்ளினாலும் பெரிய அளவிற்கு ரீச்சானது என்றே சொல்ல வேண்டும். சிட்டி மட்டுமில்லாது தமிழகமெங்கும் பெரும் வெற்றியை பெற்றது இப்படம். திரையிட்ட சில நாட்களிலேயே ஒரு தியேட்டரில் வெளியாகியிருந்த படத்தை இன்னொரு தியேட்டரிலும் போடப்பட்ட அரிதான படங்களில் இதுவும் ஒன்று. வசூல் ரீதியாக சுமார் பதினெட்டிலிருந்து, இருபது கோடியை தொடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐம்பது நாளை கடந்திருக்கும்  இம்மாதிரியான ஆவரேஜ் பட்ஜெட் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் புத்துணர்ச்சியான சுவாசம் என்றே சொல்ல வேண்டும்.


இம்மாதம் தீபாவளி மாதம் என்பதால் நிறைய படங்கள் வெளியாகவில்லை. ஏனென்றால் அப்படியே ரிலீஸ் செய்தாலும் தீபாவளிக்கு வரும் பெரிய படங்களுக்காக தியேட்டரக்ள் ஏற்கனவே புக் செய்திருப்பதால் நன்றாக ஓடினாலும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால் வெளியிட மாட்டார்கள். இது பற்றி மேலும் அறிய சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்.*விளம்பரம்*. முதல் இருபது நாட்கள் ஃபீரியாக இருந்ததால் தைரியமாய் சில படங்கள் வெளியாகத்தான் செய்தது. அதில் முக்கியமானது களவாணி வெற்றிப் படத்திற்கு பிறகு இயக்குனர் சர்குணத்திடமிருந்து வெளிவந்த...

1. வாகை சூடவா

மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த படம். அதற்கு காரணம்  இயக்குனர் சர்குணத்தின்  முந்தைய ஹிட் படமான களவாணியும், இப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணமாய் அமைந்தது. பீரியட் பிலிமாக எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் மந்தமான திரைக்கதையோடு, முடிவில் அழுத்தமான குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எடுத்திருந்தார் இயக்குனர். இப்படத்தின் ஏஸ்தடிக் ஒளிப்பதிவினாலும், நலல் இசை, மற்றும் க்ளைமாக்ஸ் கருத்துக்காக பெரும்பாலான பத்திரிக்கையாளர்களிடமும்,  இலக்கியவாதிகளாலும், ஒலகப் படம் பார்பவர்களாலும் பாராட்டு பெற்றாலும். அழுத்தமில்லாத. மிக மெதுவாய் செல்லும் திரைக்கதையினால் கமர்ஷியலாய் வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தமே. சுமார் ஏழு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் விலையாய் யாரும் வாங்கவில்லை. அதனால் விநியோகம் முறையிலேயே வெளியிட்டார்கள். படத்தின் தோல்வியின் காரணமாய் கதாநாயகனாய் நடித்த விமல் தன்னுடய சம்பளமான ஐம்பது லட்சத்தை தயாரிப்பாளருக்கு திரும்பித் தந்து உதவிய செய்தியே படத்தின் வெற்றி பற்றிய செய்திக்கான ரிசல்ட். அழகான கதாநாயகி, நல்ல பாடல்கள், சிறப்பான சினிமாட்டோகிராபி, மெசேஜ் சொல்லும் க்ளைமாக்ஸ் எல்லாம் இருந்தும் அசுவாரஸ்யமான திரைக்கதையில் கோட்டை விட்டதால் கமர்ஷியல் வெற்றி தவறிப் போனது வருந்ததக்க விஷயமே. பட் குட் ஷோ.. சர்குணம். விமர்சனம் படிக்க

2.முரண்
சேரன், ப்ரசன்னாவின் நடிப்பில் சேரனின் தயாரிப்பில் ஆரம்பித்து பின்பு யுடிவியின்பால் தயாரிப்பு மாற்றப்பட்டு, சேரனின் கம்பெனி லைன் ப்ரொடியூசராய் இருந்து தயாரித்த படம். Strangers on a train என்கிற ஹாலிவுட்டின் த்ரில்லர் பிதாமகன் ஹிட்காக்கின் படத்தை இன்ஸ்பயர் செய்து எடுக்கப்பட்ட படம். இப்படம் ஏற்கனவே விசாகா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தெலுங்கில் கூட எடுக்கப் பட்டிருக்கிறது. தமிழில் இதை இயக்கிய ராஜன் மாதவ் சிறப்பாகவே எடுத்திருந்தார். இருந்தாலும் மிக மோசமான ஓப்பனிங் கிடைத்தற்கு காரணம் சேரன் தான் என்றால் அது மிகையாகாது. வழக்கமாய் அழுது வடிந்து கொண்டிருக்கும் இவரை பெரும்பாலான இளைஞர்களுக்கு பிடிக்காது. ஆனால் இம்மாதிரியான படங்கள் இளைஞர்கள் அதிகம் புழங்கும் மல்ட்டிப்ளெக்ஸ் படம். அப்படியிருக்க சேரனின் ப்ரெசென்ஸ் யோசிக்க வைத்தது ஒரு மைனசாக இருந்தாலும், இப்படத்திற்கு இவரை தவிர வேறொரு நடிகர் மனதில் தோன்றா வண்ணம் சிறப்பாகவே செய்திருந்தார் சேரன். மிக மோசமான ஓப்பனிங்கால், பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற வசூலும் இப்படத்திற்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். என்ன தான் இன்ஸ்பிரேஷன், பாராட்டத்தகுந்த முயற்சி என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட படம். யூடிவிக்கு இது ஒரு தோல்விப் படம் என்றே சொலல் வேண்டும். இரண்டாவது நாளே சில ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது என்று தகவல். சென்னை போன்ற பெரிய ஊர்களில் மட்டும் இரண்டு வாரம் ஓடியது. விமர்சனம் படிக்க..

3. சதுரங்கம்
கரு.
பழனியப்பன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த படம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டிய படமான இது, தயாரிப்பாளரின் ஃபைனான்ஸியல் ப்ரச்சனை காரணமாய் படம் முழுக்க முடிந்து வெளியிட முடியாமல் இத்தனை வருடங்கள் பெட்டிக்குள் இருந்ததை வேறொரு தயாரிப்பாளர் கையிலெடுத்து வெளியிட்டார். நிச்சயமாய் இப்படம் அப்போதைக்கு வெளியாகியிருந்தால் ஒரு சிறந்த ஹிட் படமாய் அமைந்திருக்கும். ஆனால் இப்போது கோ போன்ற ரேசி பத்திரிக்கையாளர் கதையெல்லாம் பார்த்த பிறகு இது ஒரு மட்டு குறைவுதான். ரிலீஸானதே பெரிய விஷயம் ஆதலால் இதன் வசூல் பற்றியெல்லாம் பேச ஏதுமில்லை. விமர்சனம் படிக்க

4.வர்ணம்
மோனிகா, சம்பத் போன்றவர்களை தவிர முற்றிலும் புதிய டெக்னீஷியன்கள்,நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ஆட்கள் புதுசாய் இருந்தாலும் கண்டெண்ட் நச்சென இருந்ததால் பார்த்த மக்களுக்கு பிடிக்கவே செய்தது. ஆனால் போதிய விளம்பரமின்மையாலும், அடுத்து வந்த தீபாவளி படங்களாலும் காணாமல் போனது. விமர்சனம் படிக்க

5. உயிரின் எடை 24 அயிரி
பேர் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்தது என்றாலும் படம் யாரையும் கவரவில்லை. சிறு முதலீட்டு படம். புதிய்வர்கள் என்ற வகையில் நல்ல முயற்சி. என்ன அதே ரவுடி தாதாயிசம் என்று சொல்லாமல் கொஞ்சம் வேற மாதிரியான விஷயங்களை சொல்லியிருந்தால் ஜெயித்திருப்பார்களோ என்று தோன்றியது. விமர்சனம் படிக்க

6 வேலாயுதம்
தீபாவளிக்கு வருமா? வராதா? என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு ஏழாம் அறிவுக்கு தியேட்டர்காரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு எம்.ஜி கொடுத்துக் கொண்டிருக்க, ஆஸ்கர் ரவிசந்திரன் தான் யார் என்பதை எந்த வித பதட்டமும் இல்லாமல் நச்சென நிருபித்துக் காட்டிய படம். விஜய்யின் இறங்குமுகத்தை கொஞ்சம் தூக்கி வைத்த படம் என்றும் சொல்லலாம். படம் வெளியான அன்று படத்தை பற்றிய பேச்சு பெரிதாய் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தை பற்றிய மவுத்டாக் ஏற ஆரம்பித்துவிட, ஒரு நிலையான வசூலை பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். சென்னை, மற்றும் செங்கல்பட்டு ஏரியா பார்டரை தவிர மற்ற ஏரியாகக்ளில் நிதானமான வசூலை பெற்றுக் கொண்டிருப்பதாய் தகவல். அநேகமாய் இந்த தீபாவளிக்கு வந்த ரெண்டு படங்களில் நிதானமாய் ரேஸில் முந்தும் என்று சொல்லப் படுகிற படம். அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட். சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம். ஆஸ்கர் யாருக்கும் விற்கவில்லை. உலகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்தார். அந்த வகையில் அவருக்கு இப்படம் அறுவடைதான். எப்படி தசாவதாரத்தில் ஒரு பெரிய அறுவடையை செய்தாரோ அதே போல் இதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வேலாயுதம் படத்திற்கு இது வரை ஒரே ஒரு ப்ரஸ் மீட் அதுவும் படம் ஹிட் என்று பிரகடனப் படுத்த வைத்தார்கள். அவ்வளவுதான். படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் முதல் பாதி காமெடி, மற்றும் பாடல்கள். ஒரு வெகுஜன ரசிகனின் எதிர்பார்ப்பை சரியான விகிதத்தில் கலக்காவிட்டாலும் போன விஜய் படங்களை பார்த்தால் ஒரு எரிச்சல் வருமே அது வராமல் இருந்ததே இப்படத்திற்கு ஒரு ப்ள்ஸாக அமைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். போட்ட முதலை முதல் வாரத்திலே கவர் செய்துவிட்டாரக்ள் என்று கூறுகிறார்கள்.  விமர்சனம் படிக்க

7. ஏழாம் அறிவுபடம் வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு. அதற்கேற்றார் போல் பப்ளிசிட்டி, சூர்யாவின் தொடர் வெற்றி, ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் சேரும் ப்டம் என்று ஏகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்க, வியாபாரமும் எகிறியது. சுமார் 85 கோடிக்கு விற்பனையானதாக சொல்லப் படுகிறது. தயாரிப்பு செலவு சுமார் 60-65 என்கிற பட்சத்தில்  தயாரிப்பாளராக ரெட்ஜெயண்டுக்கு பெரிய லாபம் தான். இம்மாதிரியான படங்களுக்கு ஓப்பனிங் பற்றி சொல்ல வேண்டாம். அதிலும் தொடர் ப்ரஸ் மீட்டில் தமிழுணர்வை வியாபாரம் செய்ததால் இன்னும் பெரும் எதிர்பார்ப்பு கூட, மூன்னூறுக்கு, ஐந்நூறுக்குமாய் டிக்கெட் விற்பனை முதல் மூன்று நாட்களுக்கு. அதற்கு காரணம் தியேட்டர்காரர்கள் கொடுத்த அபரிமிதமான எம்.ஜி. அதை கவர் செய்ய வேற் வழியேயில்லை. அவ்வளவு எம்.ஜிக்கு காரணம் தியேட்டர்கள் இல்லாமை என்றும் கூறலாம். உதாரணமாய் சமீபத்தில் வெளியான மங்காத்தாவின் வெற்றிக்கு காரணம் நிறைய தியேட்டர்களில் வெளியிட்டதும், பெரிய எம்.ஜி என்று இல்லாமல் சில தியேட்டர்களில் அட்வான்ஸில் கூட போட்டார்கள். எனவே நூறு முதல் நூற்றைம்பதுக்கு மேல் டிக்கெட் விலை விற்கபடவில்லை. சரியான வசூலை பெற்றது. ஆனால் இங்கே இரண்டு பெரிய படங்கள். இரண்டுக்கு தியேட்டர்கள் பிடிக்க போட்டா போட்டி என்கிற நிலையில் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆடு வெட்டினார்கள். அதனால் தான் பெரிய எம்.ஜி. ஒரு தயாரிப்பாளராய் ரெட்ஜெயண்டுக்கு பெரிய வெற்றி. ஆனால் நிச்சயம் நிறைய விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாஸ் வரும் என்று சொல்கிறார்கள். அதை தடுப்பதற்குத்தான் படம் வெளியான இருபது நாட்களுக்குள் ஐந்து சக்சஸ் மீட் நடத்தப்பட்டிருக்கிறது. தினம் பேப்பரில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இன்னொரு பெரிய மைனஸ் படத்தின் பாடல்கள். பாடல்கள் சொதப்பிவிட்டதால் ஈஸியாய் கிடைக்க வேண்டிய பப்ளிசிட்டி கிடைக்கவில்லை என்பது வருத்தமே. இந்த போதிதர்மர் தமிழர் ஜல்லி. தெலுங்கில் நாங்கள் போதிதர்மர் தமிழ்நாட்டில்தான் பிறந்தார் என்று சொல்லியிருக்கிறோம் என்று சொல்வதெல்லாம், நான் இதைப் பற்றி தெலுங்கு பட க்ளைமாக்ஸில் இங்கே தமிழர்களுக்கு ஏத்திவிட சொன்ன டயலாக்குகள் எல்லாம் இந்தியன் என்றும் மன தேசம் என்றும் பொதுவாய் சொல்லியிருந்ததை மேலும் கிளற போகிறார்களோ? என்று இவர்களாகவே எங்கப்பன் குதிருக்கு இல்லை என்பதை போல வேற விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கல்ள். போதிதர்மரை பற்றிய எபிசோட், சூர்யா, ஸ்ருதியை  தவிர யூகிக்க கூடிய திரைக்கதை, லாஜிக்கில்லா நோக்கு வர்மம். என்று ஜவ்வாய் போனதால் படத்தின் ஓட்டத்தை கூட்ட இன்னும் கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படத்தை வரை விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கு கூட்டி,கழிச்சு பார்த்துதான் ஹிட்டுன்னு சொல்ல வேண்டியிருக்கும் என்பதுதான் இன்றைய நிலை. விமர்சனம் படிக்க

8. ரா.ஒன்
இந்த தீபாவளிக்கு வந்த ஒரே ஒரு ஹிந்தி படம். அதே படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இன்றைய தேதிக்கு இந்தியாவின் அதிக பொருட்செலவு செய்து தயாரிக்கப்பட்ட படம். நம் மக்களை கவர்வதற்காக பத்து செகண்ட் ரஜினி தரிசனம் என்று வேறு விளம்பரம் செய்தார்கள். ஷாருக், கரீனா, பெரும் பொருட்செலவு, டெக்னாலஜி, 3டி, கூடவே ரஜினி  என்று எல்லாம் இருந்தும் படு மொக்கையான கதை மற்றும் திரைக்கதையால் ஆல்மோஸ்ட் ஊத்தி மூடப்பட்டது என்றே சொல்ல வேண்டும். ஏழாம் அறிவு போலவே ஒரு தயாரிப்பாளராய் ஷாருக்குக்கு லாபகரமான படமாய் இருந்தாலும் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கக் கூடிய படம் என்றே சொல்ல வேண்டும். முதல் நாளில் 22 கோடி வசூல் என்றெல்லாம் அறிவித்தார்கள். இப்படத்தின் ப்ரொமோஷன், தயாரிப்பு செலவுக்கு இது கால் தூசு. விமர்சனம் படிக்க


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive