Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, October 14, 2011

கேபிளின் கதை-21

21 எல்லோரும் சேர்ந்த காலத்தில் சேராமல் வேறு வழியில்லாமல் மக்களின் ப்ரெஷர் தாங்காமல் ஆப்பரேட்டர்களால் உருவான எம்.எஸ்.ஓவில் சேர விரும்பும் போது அம்மாதிரியான நெட்வொர்க்குகள் ஒரளவுக்கு நிலைக்கு வந்து அதன் முதலீடுகள் பெரிதாகியிருக்க, இவர்கள் பெரும் விலைக் கொடுத்தே அந்த நெட்வொர்க்குகளில் சேர வேண்டிய நிர்பந்தம். ஆனால் வேறு வழியில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். அப்படி அவர்கள் இணையவில்லையன்றால் மக்களுக்கு ஆப்பரேட்டர்கள் எம்.எஸ்.ஓ கொடுக்கும் சேனல்களை தனியொரு ஆப்பரேட்டராய் கொடுக்க சில பல லட்சங்கள் தேவைப்படும். அது மட்டுமில்லாமல் கட்டண சேனல்களுக்கு கட்டும் பணமானது கட்டுப்படியாகாது.


இப்படியான ப்ரச்சனைகளை சமாளிக்க வழியில்லாமல் அதிக பணம் கொடுத்து புதிய எம்.எஸ்.ஓவில் ஆப்பரேட்டர்கள் சேர்ந்தார்கள். ஒரு சில ஆப்பரேட்டர்கள் அவர்களுடன் சேராமல் மேலும் சில லட்சங்களை செலவு செய்து கண்ட்ரோல் ரூமை அமைத்தார்கள். இம்மாதிரி தனியாக தொழில்நுட்பத்தை உயர்த்த முடியாத ஆப்பரேட்டர்களூக்கென்றே ஒரு புதிய ஐடியாவை யோசித்தார்கள் எம்.எஸ்.ஓவில் இருக்கும் ஆப்பரேட்டர்கள். ஒரு வகையில் அவர்களுக்கு உதவிகரமாய்த்தான் இருக்கும் என்றாலும் தங்களுக்கென்று இருந்த கட்டுப்பாட்டு அறை போய்விடும் என்பது அன்று அவர்கள் உணரவில்லை. அப்படி உணராமல் போனதற்கு காரணம் கட்டண சேனல்கள் தான் என்றால் அதுதான் உண்மை.

அது என்ன ஐடியா என்றால் யார் யார் புதிய எம்.எஸ்.ஓவில் பார்ட்னர்களாய் இருக்கிறார்களோ அவர்களின் பக்கத்து ஏரியாவில் யார் எம்.எஸ்.ஓவில் சேரவில்லையோ அவர்களை தனியாக பேசி, நீங்கள் ஏன் இன்னும் இன்னும் செலவு செய்ய வேண்டும்?. அதற்கு பதிலாய் உங்களுக்கு என் இணைப்பிலிருந்து உங்களுக்கு சிக்னலை கொடுக்கிறேன். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் போதும், புதிதாய் எதுவும் இன்வெஸ்ட் பண்ண வேண்டாம் என்றதும். பெரிய தொகை கொடுத்து அவர்களுடன் இணைய முடியாதவர்கள் அந்ததந்த ஆப்பரேட்டர்களிடம் லிங்க் ஆப்பரேட்டராக சேர்ந்து அதிக சேனல்களைக் கொண்ட எம்.எஸ்.ஓ நெட்வொர்க்கிலிருந்து சிக்னலை பெற்றார்கள். அப்படி சிக்னலைப் பெறும் ஆப்பரேட்டர்களிடமிருந்து ஒரு இணைப்புக்கு என்று எவ்வளவு ரூபாய் அவர்கள் மற்ற சேனல்களுக்கு கட்டிக் கொண்டிருந்தார்களோ அந்த தொகையை விட கொஞ்சம் குறைவாகவும், இணைப்புகளில் கொஞ்சம் குறைவாகவும் வாங்கிக் கொண்டார்கள்.

இம்மாதிரியான சிறு ஆப்பரேட்டர்களுக்கு இது பெரும் சாதகமாய் இருந்தது. குறைந்த அளவு கட்டணச் சேனல் தொகையில் நல்ல் தரமான சிக்னல்களையும், அதிக சேனல்களும் கிடைக்கப் பெற்றதால் இந்த லிங்க் ஆப்பரேட்டர் முறை வரப் பிரசாதமாய் ஆனது. ஆனால் அதே போல அந்த எம்.எஸ்.ஓவின் ஆதிக்கம் கொண்ட ஏரியாவின் விஸ்தீரணமும் அதிகமாகியது. அது மட்டுமில்லாமல் கட்டண சேனல்களை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வர இது ஒரு பெரிய அஸ்திரமாய் இருந்தது எம்.எஸ்.ஓக்களுக்கு. ஏனென்றால் சேனலுக்கு இவர்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகராறு என்றால் உடனடியாய் இவர்கள் கட்டுப்பாட்டு அறையில் சிக்னலை ஆஃப் செய்து வைக்க முடியும் என்பதால் எங்கே ப்ரச்சனையில் ஆஃப் செய்துவிடுவார்களோ என்று சேனல் யோசித்துக் கொண்டிருக்க, சுவிட்சின் மேல் கை வைத்திருப்பது போலவே சீன் போட்டுக் கொண்டிருக்கும் எம்.எஸ்.ஓக்கள். இவர்களின் இந்த உள் கர்ஜனைகள் ஈ.எஸ்.பி.எ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களிடம் செல்லாது. ஏனென்றால் பெரும்பாலும் அவர்கள் இந்தியா பங்கு கொள்ளும் மேட்சுகளின் போதுதான் விலையேற்றுவார்கள். அதன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து சண்டை போடவெல்லாம் நேரம் இருக்காது. சேனல் வரவில்லையென்றால் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி சேனல்களின் தரப்பில் ஓகே சொல்லிவிட்டால் கணிசமான தொகையை கட்ட வேண்டியிருக்கும். தங்கள் மீது விழும் பளுவை தங்கள் லிங்க் ஆப்பரேட்டர்கள் மீது போட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் எம்.எஸ்.ஓ ஆப்பரேட்டர்களுக்கு. ஆரம்ப காலத்தில் சந்தோஷமாக இருந்த ஆப்பரேட்டர்களுக்கு இப்போது திரிசங்கு நிலையில் விடப்பட்ட நிலை. என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க தொடங்கினர்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive