Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, October 9, 2011

கொத்து பரோட்டா - 10/10/11

ஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். மேயர் வேட்பாளர், கவுன்சிலர் என்று. யார் எந்தக் கட்சி என்று புரியவேயில்லை. பெரும்பாலான தேர்தல்களில் இவர்களை ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் இருந்து பார்த்தாகிவிட்டதால் இவர்கள் நேரில் வரும் போது கொஞ்சம அப்ரசண்டித்தனம் தெரிகிறது. நம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்த வேட்பாளரின் கட்சியை தெரிந்து கொண்டே மாற்றி மாற்றி கட்சி பெயர் கேட்டார். பின்னர் வழக்கமாய் இரண்டு பேருக்கு ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம்? இந்த வாட்டி உங்களுக்கு போடறேன் என்று சொன்னதும் சந்தோஷமாய் கிளம்பிய வேட்பாளரின் கடைசி தொண்டன், “சார்.. இந்த வாட்டி நம்மளுக்கு போட்டுப் பாருங்க.அப்புறம் தெரியும்” என்றவுடன், நம் நண்பர் “ என்ன இப்ப நீங்க ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்க.. அப்புறம் எங்களை உங்க ஆபீஸுக்கு அலைய விடுவீங்க அவ்வளவுதானே. இது எவன் வந்தாலும் மாறாது” என்றாராம். அந்த தொண்டர் எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாராம். போனது பெரிதில்லை. ரோட்டிற்குப் போய் தனியாய் சிரித்துக் கொண்டிருந்தாராம்.நிஜம் சிரிக்கிறது.இம்மாதிரியான நேரங்களில் இவர்களை கலாய்ப்பது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
#######################################


தேர்தல் சூடுதேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழகம், குஜராத் போல வளர்ச்சியடைந்த மாநிலமாய் மாற்றப்படும்- பிரமலதா விஜயகாந்த

இதை ஏன் உங்க கூட்டணிக் கட்சியோட சேர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கக்கூடாது?

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு நீங்கள் என்னத்தை கண்டீர்கள்? தேமுதிக தலைவர் விஜயகாந்த

மூணு மாசத்துக்கு முன்னாடி தெரியலையா?
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். - டாக்டர் அய்யா..

சொல்லிட்டேயிருக்கீகளே.. இப்பவே பூட்டுனா உங்கள் யாராவது தடுக்கிறாய்ங்களா என்ன?

#################################################
எஸ்.ஆர்.எம். சிவாஜி பிலிம் இன்ஸ்டிடியூட் சார்பாக தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் விழாவுக்கு போயிருந்தேன். வைரமுத்து அழைப்பிதழில் தன் போட்டோவை போடாமல் விட்டதற்காக தமிழுக்கே அவமானம் என்று கொதித்துவிட்டு போயிருந்தார். எல்லார் போடோவையும் போட்டு விட்டு அவர் போட்டோவை போடாதது தமிழுக்கு இழுக்குத்தான் .அநியாயமாய் ராத்திரி பத்து மணிக்கு நிகழ்ச்சியை முடித்தார்கள். வந்திருந்த கலைஞர்கள் எல்லாருமே விருதை வாங்கினோமா? எஸ்கேப் ஆனோமா? என்று ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போனது படு சுவாரஸ்யம். இந்நிகழ்ச்சியை கவர் செய்ய புதிய தலைமுறையிலிருந்து ஆள் வராததை மறைமுகமாய் பச்சை முத்து சுட்டிக் காட்டினார். வெற்றி மாறன் ஒரே வார்த்தையில் நன்றி சொல்லிவிட்டுப் போனார். பெரிதான சுவாரஸ்யம் ஏதுமில்லா ஒரு விழா. விழா முடிந்து நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது Zifo technologies கம்பெனியின் சேர்மன், மேனேஜிங் டைரக்டர் ராஜ் பிரகாஷ், என்னை அடையாளம் கண்டு ஒரு பத்து நிமிடம் என் வலைப்பூவைப் பற்றியும், தன் அலுவலகத்தில் எல்லோரும் படிக்கும் ஆர்.எஸ்.எஸ்.பீட் உங்களுடயதுதான் என்று பாராட்டிவிட்டு அவரின் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு நாள் போக வேண்டும்.
#############################################
சென்ற அரசு செய்த இன்னொரு விஷயத்தை மீண்டும் தன் ஈகோவினால் புஸ்வாணமாக்கியிருக்கிறார்கள். அதாவது அரசுக்கு சொந்தமான உட்லான்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடத்தை அரசு கையகப்படுத்தி அதை சென்ற அரசு செம்மொழி பூங்காவாக மாற்றியது. ஆட்சி மாறியவுடன் நிச்சயம் அந்த பூங்கா சீரழிந்து போய்விடும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது அந்த நிலம் அரசுக்கே சொந்தமானது கிடையாது என்று மீண்டும் அந்த ஹார்ட்டி கல்சர் சொசைட்டிக்கு திரும்பக் கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது அரசு. என்ன கொடுமைடா சாமி?
##################################################
சதுரங்கம் சிறப்பு திரையிடலுக்கு நம் ப்ளாக்கர்களுடன், நிறைய பேஸ்புக் நண்பர்களும் வந்திருந்தார்கள். டீஸெண்டான கூட்டம். நண்பர் கரு.பழனியப்பனின் வசனத்தை பற்றி ஆளாளுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் பட வசனங்களை விட அவர் சாதாரணமாய் பேசும் போது சொல்லும் விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். அவருடன் வேறொரு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசும் வாய்ப்பிருந்த போது அவரின் பேச்சை ரசித்திருக்கிறேன். இம்முறையும் அவரின் உதவியாளர் அமல்ராஜை அடையாளம் கண்டுபிடிப்பதில் தோற்றுப் போனேன். மனுஷன் ஒவ்வொரு முறையும் ஒரு கெட்டப்பில் வருகிறார்.
###########################################
அறிவிப்பு
இன்று மாலை 6.30 மணிக்கு, ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள ப்ரிவியு தியேட்டரில் “வர்ணம்” திரைப்பட சிறப்பு காட்சி நம் பதிவர்களுக்காக திரையிடப்படுகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து கண்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
#########################################
வருகிற தீபாவளி வெளியீட்டுக்கு இரண்டு படங்களுக்கு பெரும் போட்டியிருக்கிறது. நான் எழுதியிருந்தது போல இருக்கிற ஆயிரத்து சொச்ச தியேட்டர்களில் எவ்வளவு தியேட்டர்களை தங்கள் படத்தை திரையிடுவது என்ற போட்டி அதிகமாகவேயிருக்கிறது. ஒரு புறம் உதயநிதி ஸ்டாலின் படம். இன்னொரு புறம் அவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத ஆஸ்கர் ரவிச்சந்திரனின் படம். இருக்கிற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் எல்லாவற்றிலும் ஆளுக்கு மூணு என்கிற விகிதத்தில் பிடித்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற ஊர் தியேட்டர்களில் தியேட்டர்காரர்களின் பெரும் எதிர்பார்ப்பு சூர்யாவின் ஏழாம் அறிவிற்கே இருப்பதால் பெரிய அளவு எம்ஜியை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். பார்ப்போம்...
############################################
பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் http://udanz.com  உலக அளவில் அலெக்ஸா ரேங்கிங்கில் ஒரு லட்சத்திற்குள் வர சில ஆயிரங்களே உள்ளது. யுடான்ஸ் டிவியில் ஒலிப்பரப்பான நேரடி நிகழ்ச்சிகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். யுடான்ஸ் - ஆதி - பரிசல் சவால் சிறுகதை போட்டிக்கு உங்கள் கதைகளை அனுப்பி விட்டீர்களா?
##########################################
தத்துவம்
U Will Never Get a Second chance to Make a first Impression. So Remember the 1st Impression can only give you the 2nd chance.

எப்படி காதலிப்பது? அப்படின்னு புக்கு போட்டவன் எப்படி மறக்கறதுன்னு புக் போடலியே? அது ஏன்?

வாழ்க்கையில் கோபத்திற்கு Mute பட்டனும், தவறுகளுக்கு Back பட்டனும், கஷ்ட காலத்திற்கு Fast Forward பட்டனும், நல்ல நேரங்களுக்கு Pause பட்டனும் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்.
##########################################
ப்ளாஷ்பேக்
சில படங்களில் அற்புதமான பாடல்கள் அமைந்திருக்கும் . ஆனால் படம் ஓடாததால் அப்பாடல்கள் நம்மிடையே பிரபலமாகாமல் போய்விடும். அப்படி இளையராஜாவின் இசையில் வெளியான எவ்வளோ படங்களில் அற்புதமான பாடல்களை ராஜா அளித்துள்ளார். அந்த வரிசையில் இந்த கோயில்புறா படத்தில் எல்லாப் பாடல்களும் கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் க்ளாசிக்.. கேட்டுப் பாருங்கள் சும்மா ஒரு இசையெனும் போதையில் எழுந்த வந்த உணர்வு ரிப்ரெஷிங்காக இருக்கும்.என்னா பாட்டுடா?
#################################################
அடல்ட் கார்னர்
நடு ராத்திரியில் பெற்றோர்களின் அறைக்குள் நுழைந்த சிறுவன் அவர்கள் இருந்த கோலத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி அம்மாவை பார்த்து கோபமாய் கேட்டான். ‘நான் மட்டும் விரல் சூப்பினா திட்டுறே?”

No comments:

Post a Comment

Followers

Blog Archive