Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Wednesday, September 14, 2011

That Girl In Yellow Boots

That_Girl_in_Yellow_Bootsஅனுராக் கஷ்யப். இந்திய இண்டிபெண்டண்ட் சினிமாவின் அடையாளமாய் இருப்பவர். கல்கி கொச்சிலினுடன் எழுதி இயக்கியிருக்கும் படம். சென்ற வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட  படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு.


தன் தாயையும், பதினைந்து வயது சகோதரியின் தற்கொலைக்கு பிறகு மும்பைக்கு வந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கி, தன் தந்தை அஜய் பட்டேலை தேடும் ரூத் எனும் பிரிட்டிஷ் பெண்ணை சுற்றும் கதைதான். பெரிய அளவு மெலோ ட்ராமா இல்லாமல் முகத்திலறையும் நிதர்சனங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் அனுராக் கஷ்யப்பும், கல்கியும். ரூத் இந்தியாவில் வொர்க் பர்மிட் இல்லாமல் அரசின் வெளிநாட்டு ரிஜிஸ்டர்களிடம் லஞ்சம் கொடுத்தும், வழிந்தும் டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டெண்ட் செய்ய, ஒரு மசாஜ் பார்லரில் வேலை செய்கிறாள். அங்கு வரும் கஸ்டமர்களுக்கு மசாஜுடன் “கைவேலை”யும் செய்துவிட்டு பணம் சம்பாதிக்கிறாள். அவளுக்கு ஒரு டிரக் அடிக்ட் பாய்ப்ரெண்ட், என்று அவளை சுற்றி இயங்கும் ஆண்களின் உலகத்தை, அவர்களின் வக்கிரத்தை, இன்ஸெக்ட் அதிர்ச்சிகளை, பாசத்தை, அட்டகாசத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் அவளுக்கு கிடைக்கும் அதிர்ச்சி நமக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
 That-Girl-in-Yellow-Boots-6_b ரூத்தாக கல்கி. அவருக்காகவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. அருமையாய் அக்கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். டிரக் அடிக்ட் காதலன், அவன் கடன் வாங்கிய அந்த கார்டூன் போன்ற காமெடி கன்னட வில்லன், அவனின் அடியாட்கள், வீட்டு ஓனர், மசாஜ் செய்ய வரும் நஸ்ரூதீன் ஷா, எப்போதும் போன் பேசிக் கொண்டேயிருக்கும் மசாஜ் பார்லர் பெண் முதலாளி. என்று ஒவ்வொரு சின்ன கேரக்டரும் நச்சென நடித்திருக்கிறார்கள். நம் அரசு இயந்திரத்தை முடுக்கச் செய்யும் லஞ்சத்தை டொனேஷன் என்று கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளும் ரூத் கேரக்டர் மூலம் அரசு இயந்திரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள்.

இம்மாதிரி பாராட்டும் படியான நிறைய விஷயங்கள் இருந்தாலும், ரூத் கேரக்டரின் மேல் பெரிதாய் இன்வால்வ் ஆக முடியாமல் போகக் காரணம், அவரை பற்றிய ஒரு தெளிவில்லாமை தான். வரும் கஸ்டமர்களுக்கு “கைவேலை” செய்து சம்பாதிப்பவர், காதலனுடன் படுக்க மாட்டேன் என்கிறார். அதற்கான காரணம் அவரின் வாழ்க்கையில் இருக்கிறது என்றாலும் பெரும்பாலும் வசனங்களாலேயே புரிய வைக்க முயற்சித்திருப்பது ரூத்துடன் பயணிக்க முடியாமல் போகிறது. ரூத்தின் பின்னணி என்ன? அவளின் தந்தையின் தேடலுக்கான இண்டெப்த் உணர்ச்சி நம்முள் கடக்காமலேயே இருப்பதால் ஏதோ வெளியே இருந்து எட்டிப் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.
That-Girl-in-Yellow-Boots-7_b படத்திற்கு கிடைக்க வேண்டிய மூடை சரியாக கேனான் 7டியின் மூலம்  கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ். புதிய இசையமைப்பாளரான நரேன் சந்திரவாக்கரின் பின்னணியிசை பல சமயங்களில் ஹாண்டிங். சில சமயங்களில் இடறுகிறது.  பதிமூணே நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ரெண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. அதுவும் சென்ற வருட இறுதியில் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுவிட்டு இப்போதுதான் இங்கே வெளியாகியிருக்கிறது. நிச்சயம் ஒரு போல்டான சப்ஜெக்ட் தான் ஆனால் அதிர்ச்சியாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பு முன்னிருந்து துருத்துவதால் இன்வால்வ் ஆக முடியவில்லை. நஸ்ரூதீன் ஷா, போன்ற நடிகர்கள் அனுராக் கஷ்யப் எனும் இயக்குனருக்காக அவ்வளவு முக்கியமில்லாத கேரக்டரில் நடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது.
The Girl In Yellow Boots – Something Different But Not Striking Enough
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive