Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Wednesday, August 24, 2011

சாப்பாட்டுக்கடை - ஆரோமா

இரண்டு பேர் அஞ்சு பரோட்டா, இரண்டு சப்பாத்தி, ஆலுமட்டர், காலிப்ளவர் சப்ஜி சாப்பிட்டு மொத்த பில் 49 ரூபாய் என்றால் நம்புவீர்களா..?. என்ன பகல் கனவு கண்டீர்களா? என்று கேட்பவர்கள் ஒரு நடை நம்ம கோடம்பாக்கம் ரோடு, மீனாட்சி காலேஜுக்கு முன்னால் ஒரு சின்னக் கடை ஆரோமா என்ற இந்தக் கடைக்கு ஒரு நடை போய் வாருங்கள். அவ்வளவு அருமையான சப்பாத்திகள்.
சுடச்சுட..


 இவர்களின் மெனு கார்டில் அதிகபட்ச விலையே 35 ரூபாய்தான். குறைந்தபட்ச விலை 4 ரூபாய். கையேந்திபவனிலேயே ப்ரைட்ரைஸ் 30 ரூபாய் விற்கிறார்கள். அது மட்டுமில்லாமல் துரிதமான சர்வீஸ், சப்பாத்தி மட்டுமில்லாது, பரோட்டா,  காலையில் தோசையெல்லாம் கூட போடுகிறார்கள். சகாய விலையில் சென்னையில் சாப்பிட நல்ல வெஜ் ரெஸ்டாரண்டுகளில் இதுவும் ஒன்று. ஒரு நடை போய் வாருங்கள். சின்ன பட்ஜெட்டில் நிறைவான உணவு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive