Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, July 31, 2011

கொத்து பரோட்டா - 01/08/11


நேற்று முந்தினம் என் பிறந்தநாள். முதல் நாள் ராத்திரியிலிருந்தே எஸ்.எம்.எஸ் மூலமாகவும், தொலைபேசியிலும், ஃபேஸ்புக்கிலும், ஜி+லும், பஸ்ஸிலுமாய் திகட்ட, திகட்ட வாழ்த்திய அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என் பிறந்தநாள் அன்றே அண்ணன் அப்துல்லா, பட்டுக்கோட்டைபிரபாகருக்கும் பிறந்த நாள் என்று அறியும் போது மேலும் சந்தோஷமாயிருந்தது. அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
######################################################


செவிக்கினிமை

டி.இமானின் இசையில் வெளிவந்திருக்கும் “நினைவில் நின்றவள்” படத்தில் வரும். “சின்ன பூவே” என்கிற பாடல் கேட்டவுடன் இம்ப்ரஸிவ். பல்ராம், மற்றும் அனுராதா சேகர் பாடியுள்ள இந்த பாடல் கேட்ட மாதிரியே இருந்தாலும். நல்ல மெலடி. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ”கள்வனே என் கள்வனே” என்கிற பாடலும் நல்ல ஃபூயூசன். நிலா அது வானத்து மேலேவையும் ரீமிக்ஸியிருக்கிறார். ஓகே.
###################################################
சட்டம் ஒயுங்கு
அதிமுக பிரமுகர் மீதிருந்த இன்னொரு நில அபகரிப்பு கேஸும் வாபஸாகிவிட்டது. வழக்கு கொடுத்தவரே தனியே செட்டில் செய்து கொள்வதாய் சொல்லி கேஸை வாபஸ் வாங்கிவிட்டாராம். நடு நிலை. சக்ஸேனாவிற்கு மட்டும் ஒரு கேஸ் வாபஸான இன்னொன்னு ஆட் ஆவுது.
########################################################
தமிழ் நாடே எதிர்பார்த்த கலாநிதிமாறன் போலீஸ் விசாரணை நடைபெறாதது ஏமாற்றமாயிருந்தது பல பேருக்கு. முக்கிய குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் இனி அவரிடம் விசாரணை செய்ய தேவையில்லை என்கிறார்கள். அடுத்த மூவ் என்னவாகயிருக்கும் என்று ஆர்வமாயிருக்கிறது.
##########################################################
கடந்த மூன்று மாதமாய் தமிழ் திரைப்படங்களுக்கான வரி விலக்கை அளிக்கும் கமிட்டியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வரிவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கிறது அரசு. சில மாற்றங்களுடன். முக்கியமாய் தமிழில் மட்டுமே பெயர் வைத்தால் பத்தாது. அது “யு’ சர்டிபிகேட் படங்களாய் இருத்தல் வேண்டும் என்றும், தமிழ் கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் படங்களுக்கும் தான் வரி விலக்கென்றும் அறிவித்துள்ளது. தமிழில் பெயர் வைத்ததால் பிட்டு படத்துக்கு கூட வரி விலக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க “யு” சர்டிபிகேட் படங்களுக்கு மட்டும்தான் என்கிற இந்த சட்டம் வழி வகுக்கும் என்றாலும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இயக்கும் படங்கள் எல்லாவற்றிக்கும் கட்டிங் கொடுத்தாவது ‘யு” சட்டிபிகேட் வாங்குவார்கள். சில “யு” சர்டிபிகேட் படங்களில் வரும் காட்சிகள் எல்லாம் படு “ஏ”தனமாய் தானிருக்கிறது. இதற்கு பதிலாய் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேண்டுமென்றால் தியேட்டரில் தமிழ் படங்களுக்கு வரி குறைந்த அனுமதி கட்டணம் கொடுத்தால் தான் என்று சட்டம் போட்டிருக்கலாம். தீடீரென தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் மக்களை பிழிந்தெடுக்கும் தியேட்டர் அனுமதி கட்டணம் குறைக்க பாடுபடுவோம் என்று அறிக்கை விட்டிருப்பது காமெடியாய் இருக்கிறது. உள்ள வலிக்குதோ.. என்னவோ..
###########################################################
பழைய எம்.ஜி.ஆர் படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களுக்கு மவுசு உள்ளது போல, சிவாஜி நடித்த பழைய படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் சென்னை சாந்தியில் சிவாஜியின் “கெளரவம்” திரைப்படத்தை போன வாரம் வெளியிட்டார்கள். புதிய படங்களுக்கு கூட முப்பது பேர் நாறபது பேர் தான் வரும் காலத்தில் செம கலக்‌ஷனாம். அதனால் நிறைய பழைய சிவாஜி படங்களை தூசு தட்ட் ஆர்வமாகிவிட்டனர் விநியோகஸ்தர்கள். அதில் முக்கியமானது கர்ணன். ப்ரிண்டை முழுவதும் டிஜிட்டல் இண்ட்ர்மீடியேட் செய்து டி.டி.எஸ் முறையில் ஒலிப்பதிவையும் சரி செய்து முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு அளிக்க தயாராகி வருகிறது கர்ணன். அதற்கு முழு முயற்சியையும் விநியோகஸ்தர் திவ்யா பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. ஓல்ட் இஸ் கோல்ட்
########################################################
சமச்சீர் கல்வியை இன்னமும் செயல்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன் என்றே புரியவில்லை. பொது வாழ்க்கைக்கு என்று வந்த பின்பு இவ்வளவு ஈகோ தேவையா? என்ற கேள்வி ஆதரவு கொடுப்பவர்கள் மனதிலும் எழத்தான் செய்கிறது. கொஞ்சம் யோசியுங்க..
#####################################################
திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோயம்புத்தூரில் பிரியாணி சகிதமாய் நடந்து முடிந்துவிட்டது. பிரியாணி செய்து சாப்பிட்டதை தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஏதும் நடக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடம் ஆரம்பித்து உயர்நிலையில் உள்ளவர்கள் வரை தலைமையில் மாற்றம் தேவை என்று ஃபீல் செய்து கொண்டிருக்கும் வேலையில் அதை செயல் படுத்தாமல் இருப்பது மேலும் வீழ்ச்சிக்கு வித்தாகாது?
#########################################################
ப்ளாஷ்பேக்
பாடல் ஆரம்பித்த அடுத்த கணம் மளுக்கென கண்களில் கண்ணீர் கட்டிக் கொள்ளும். என்னா பாட்டுடா? என்று உருக வைத்திடும். இளையராஜாவின் இசையும், குரலும் நம்மை உருக்கிக் கொண்டிருக்க, மகேந்திரனின் மாண்டேஜுகள் இன்னும் நம்மை உள்ளூக்குள் இழுத்து ஒரு விதமான நெகிழ்வான அனுபவத்தை எந்த காலத்திலும் தரும் “மெட்டி ஒலி” என்கிற இந்த நண்டு படப் பாடல். மொட்டை.. மொட்டைதான். இப்படத்தில் வரும் ஓவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும்.

###########################################################
மை கார்னர்
சன் டீவியில் மாபெரும் வெற்றி பெற்ற மலர்கள் சீரியலில் வரும் காட்சி இது. இதன் இயக்குனர் பத்ரி. சின்ன கேரக்டரில் நடித்து கொண்டிருந்த எனக்கு ஆடுகிறான் கண்ணன் என்கிற தொடரில் பெரிய கேரக்டர் கொடுத்து ஆதரவளித்தவர். வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு பட இயக்குனர்.

##########################################################
அடல்ட் கார்னர்
எமதர்மன்ராஜா நரகத்துக்கு வந்தவன் கிட்ட சொன்னாரு பூலோகத்தில இருக்கும் வரை நரகத்தை நம்பல ஆனா இப்ப  நரகத்துக்கு வந்துட்ட. நீ பாவம் செய்ததுக்கு இங்க மூணு தண்டனை ரூம் இருக்கு, உனக்கு எந்த ரூம்ல தண்டனை வேணும்ன்னு நீயா பாத்து தேர்ந்தெடுத்துக்கலாம் " என்று சொல்லி அழைத்து போய் ஒவ்வொரு ரூமா காமிச்சார்.

எமதர்மன், "இது முதல் ரூம், இதுல நிறைய சாப்பாடு இருக்கு, உன் இஷ்டத்துக்கு நீ சாப்பிடலாம்" என்றார்.  மனிதன் முதல் ரூமை வேண்டாம் என்று சொன்னார்..

எமதர்மன், "இது இரண்டாவது ரூம், வித விதமான உடைகள் இங்கே கொட்டி குவிஞ்சி கிடக்கு..உன் இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டுக்கலாம்" என்றார்.

 மனிதன் இரண்டாவது ரூமையும் வேண்டாம் என்று சொன்னார்.

எமதர்மன் மூன்றாவது ரூம் கதவை திறந்தார்.

அங்கே ஒரு சூப்பர் பிகர் ஓரு ஆணின் லுல்லாவை மவுதிங் செய்து கொண்டிருந்தாள்.

எமதர்மன் கேட்பதற்கு முன்னதாகவே மனிதன் மூன்றாவது ரூம் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டார். எமதர்மன் சரி என்று சொன்னார்.

  மனிதன் எமதர்மனிடம், "நீங்க எதோ தண்டனை ரூம் என்று சொன்னீங்க, ஆனா பாத்தா அப்படி தெரியலையே..மூணாவது ரூம் ரொம்ப சூப்பர்" என்றபடியே மூணாவது ரூமுக்குள்ள நுழைந்தார்.

 அப்போது எமதர்மன், "அம்மா உன் தண்டனை முடிந்தது. நீ எழுந்து இந்த நரனுக்கு இடம் கொடு" என்றார்
##############################################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Saturday, July 30, 2011

குறும்படம் - பசி

திருப்பூர் ரவிகுமாரின் குறும்படம். மிக சாதாரண லைன் தான். அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். நடுநடுவே வரும் அனிமேஷனை விட, ஷங்கரின் ஒளிப்பதிவு அருமை. எங்கோ என்னவோ லைட்டாக மிஸ்சாகியிருப்பதாய் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Friday, July 29, 2011

வெப்பம்

ரொம்ப நாளாகவே பாடல்கள் மூலமாய் அறிமுகமாயிருந்த படம்.  கெளதமின் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய படம். ட்ரைலர் கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியிருக்க, பெண் இயக்குனரின் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு ஏறியிருந்த படம் வெப்பம்.


பெண் இயக்குனர்கள் வழக்கமாய் தொட மறுக்கும்  கதை களன். குப்பம், தாதா, பொடி, தூள், விபச்சாரம், பெண்கள், காதல், துரோகம் என்று எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்திருக்கிறார் இயக்குனர். அது தான் பிரச்சனை.
 veppam_movie_stills_photos_images_01 நாநி, நித்யா மேனன், கார்த்திக் குமார் மூவரும் குப்பத்தில் வசிப்பவர்கள். மூவரும் ஒட்டுக்காய் வளர்கிறார்கள்.  நாநி இஞ்ஜினியரிங் கல்லூரி மாணவராம். நாநி அவனது அண்ணன் இருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. நாநியின் அப்பா அவர்கள் கூட இல்லை. அதே ஏரியாவில் பெண்களை வைத்து ப்ராத்தல் தொழில் செய்து வருகிறான். அவன் அம்மாஜி எனப்படும் பெரிய பெண் தாதாவின் கண்காணிப்பில் தொழில் செய்து வருபவன். கார்த்திக் சீக்கிரம் பணம் சம்பாதித்து தான் காதலிக்கும் விபச்சாரப் பெண்ணை விடுதியிலிருந்து மீட்க, சரக்கு கடத்த தயாராகிறான். அதிலிருந்து ஆரம்பிக்கும் ப்ரச்சனைதான் படம்.
veppam_movie_stills_photos_images_02 வழக்கமாய் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் வரும் கார்த்திக் குமார் இதில் லோக்கல் படிக்காத மெக்கானிக்கடைக்காரனாக வருகிறார். நிறைய பாடி லேங்குவேஜில் நடிக்கிறார். எல்லாம் வேஸ்ட். நாநியின் முகத்தில் காதலின் போது இருக்கும் சுவாரஸ்யம் மற்ற காட்சிகளில் இல்லை. இரண்டு நாயகிகளில் நித்யா மேனன் சுத்தமாய் பொருந்தவேயில்லை. இரண்டாவது பெண் க்யூட். சரியான தேர்வு. விபச்சார விடுதியில் இருக்கும் பெண்ணாய், காதலனுக்கு முன் கஸ்டமருடன் போவதற்கு மருகும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கல் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருந்ததுதான். நா.முத்துகுமாரின் ரசிக்கக்கூடிய பாடல் வரிகளுக்கு கொஞ்சம் கூட உதவாத பாடல் மேக்கிங். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு தரம். பெரும்பாலும் ஹாண்ட் ஹெல்டில் எடுத்திருக்கிறார். கொஞ்சம் நீளமான காட்சிகளாய் இருந்தாலும், மிக குறுகிய இடத்தில் ப்ரேம்களை வைத்து அசத்தியிருக்கிறார். படத்தில் வரும் அந்த மஞ்சள் கலந்த பச்சை டோன் கொடுக்கும் விஷுவல் எபெஃக்டுகள், படத்தில் இல்லாததால் தனியாய் தெரிகிறது.
veppam_movie_stills_photos_images_08 படத்தின் பெரிய மைனஸே திரைக்கதை எனும் வஸ்துவை சரிவர மேய்க்காததே.. படம் ஆரம்பிக்கும் போது நாநியின் அண்ணனுக்கு முக்யத்துவத்துடன் ஆரம்பிக்கிறது. திடீரென நாநி, நித்யா மேனன், கார்த்திக்கின் பால் போகிறது. அவ்வப்போது வாய்ஸ் ஓவரில் நாநியின் அண்ணனின் பாயிண்ட் ஆப் வியு. திடீரென நாநியின் அப்பா, விபசாரம், விபசார விடுதி காதலி என்று பாயிண்ட்டாப் வியூ மாறுகிறது. கார்த்திக் ஏன் நாநியின் அப்பாவிடம் சேர ஆசைப் பட வேண்டும் என்று யோசிக்கும் போது, அதற்கான பதிலேயில்லை. அங்கே போன பின்புதான் விபசாரப் பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார். எனவே… லாஜிக் தவறு. முதல் பாதி முழுவதும் நான் லீனியராய் சொல்வது போல சென்று இரண்டாவது பாதியில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்கள். 
ஆனால் அதற்குள் ஆரம்ப சுவாரஸ்யம் எல்லாம் வடிந்து விடுவதால் எதுவும் எடுபடவில்லை. சவசவ என போகிறது திரைக்கதை. படம் நெடுக ஆக்‌ஷன் காட்சிகளுக்கான சீன்கள் இருந்தாலும் Veppam_movie_wallpapers_stills_01பெரும்பாலான காட்சிகளில் ஆக்‌ஷன் கொரியோகிராபி படு சொதப்பல். ரத்தமே வராமல் கார்டூன் படங்களில் வருவது போல கத்தியால் குத்திக் கொள்கிறார்கள்.  இரண்டு சீனுக்கு ஒரு திருப்பம், வெட்டு, குத்து, கலாச்சார அதிர்ச்சிகள், அவ்வப்போது மியூட் செய்யப்பட்ட வசனங்கள் என்று வைத்துவிட்டால் ஒரு பக்கா ஸ்லம் பேஸ்டு லோக்கல் ஆக்‌ஷன் படம் தயார் என்று நினைத்துவிட்டார் போலும் ஜோஷ்னா. படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் ஸ்லம் ஃபீல் இரண்டாவது ரீலீல் ஹைஃபை ஸ்லம் படமாய் மாறிவிடுகிறது. குப்பத்தைப் பற்றி ஏதும் தெரியாமல் குப்பத்தைப் பற்றி படமெடுத்தால் இப்படித்தான் ஒட்டாமல் வரும். அம்மாஜியாகவரும் அந்த பெண் கேரக்டர் படு சொதப்பல்.

பாராட்ட வேண்டிய விஷயமென்றால் ஒரு பெண் இயக்குனராய் இருந்து இம்மாதிரியான களத்தை எடுக்க துணிந்தது. அதிக வன்முறையில்லாமல் எடுத்தது. ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன டீடெயில்கள். கார்த்திக், அந்த விபசாரப் பெண் எபிசோட். முக்கியமாய் கார்த்திக் கதவை திறக்கும் போது ஒரு கஸ்டமர் வெளியே வர, கார்த்திக்கின் தவிப்பும், கோபமும், அந்தப் பெண்ணின் தடுமாற்றமும்.. க்ளாஸ்.
வெப்பம் – சூடேயில்லை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, July 28, 2011

கருங்காலி

Karungali190810_26 பூமணி படத்தின் இயக்குனர். மிட்டா மிராசு, கிழக்கும் மேற்கும் போன்ற படங்களுக்கு பிறகு நெடுநாள் படமில்லாமல் தானே நடித்து இயக்கிய படம். வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்த படம். ஏற்கனவே அஞ்சலியின் துடிப்பான சில ஸ்டில்கலால் ரசிகர்களிடையே ஒர் ஆர்வத்தை ஏற்படுத்திய படம் அந்த ஆர்வத்தை தணித்ததா? இல்லையா? பற்றி பின்பு பார்ப்போம்.


Karungali111210_29 ரவி ஒரு அனாதை. குப்பத்தில் உள்ள அனாதை சிறுவர்களை எடுத்து வளர்க்கும் ஒரு கம்யூனிஸ்ட் தாத்தாவின் ஆதரவில் அவனும் வளர, திடீரென ஒரு நாள் அவர் புட்டுக் கொள்ள, கூட்டத்தை காக்கும் கட்டாயத்தில் திருடனாகிறான். சிட்டி ஆப் காடில் வருவது போல கஞ்சா பேக்கேஜில் வேலை செய்ய ஆரம்பித்து மெல்ல கஞ்சா விற்பவனாக மாறி பொட்டலம் ரவியாய் வளர்கிறான். கெட்டவன் மட்டுமல்ல காமக் கொடூரன். சிறு வயதிலிருந்தே மற்றவர்கள் உடலுறவு கொள்வதை திருட்டுத்தனமாய் வேடிக்கை பார்ப்பவன். கும்பலில் இருக்கும் ஒரே ஒரு சிறுமி வயதுக்கு வந்து ரவியிடம் காதலாகி அவன் பின்னாலேயே அலைகிறாள். உடலுறவு கொள்கிறாள். ஆனால் அவளை திருமணம் செய்ய மாட்டேன் என்கிறான். தன் ஆசையை அவள் ஒருத்தியால் அடக்க முடியாதென்கிறான். அவள் கர்பமாகும் போது அவளை சுட்டுக் கொல்கிறான். நடிகையின் பிணத்துடன் நெப்ரோ மேனியாக்காக மாறி உடலுறவு கொள்கிறான். சரி…. எதுக்கு இவ்வளவு என்று கேட்கிறீர்களா? ஹீரோ இவ்வளவு கெட்டவன் என்று சொல்லத்தான். ஒரு மழை நாளில் விபத்துக்குள்ளாகும் டாக்டரை காப்பாற்றி, அவளின் காதலுக்கு ஆளாகிறான். ஜெயிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து திரும்ப, திருந்தி வந்து நல்ல அன்புள்ள கணவனாய் வாழ்கிறான். ஜெயிலில் பாதிரிமார்கள், குருமார்களின் தொடர் போதனையால் திருந்திவிடுகிறானாம். அப்போது டாக்டரிடம் குழந்தையில்லாமல் வரும் அஞ்சலியை பற்றி தெரிந்து கொண்டு, டாக்டர் தான் அவளிடம் தன்னை அனுப்பியதாகவும், தன்னை ஒரு டேப்ளெட்டாக நினைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் உடலுறவு கொண்டால் நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும் என்று சொல்லி டார்சர் செய்கிறான் அவள் அவனுடன் உறவு கொண்டாளா? அவள் கணவனுக்கு விஷயம் தெரிந்ததா? ரவியின் மனைவி டாக்டருக்கு தெரிந்ததா? அவள் சோரம் போனாளா என்பதை வெள்ளித்திரையில் முடிந்தால் பார்த்துக் கொள்ளவும்.
Karungali111210_32 அடல்டரி சப்ஜெக்ட் கத்தி மேல் நடப்பதற்கு சமம். கொஞ்சமே கொஞ்சம் விலகினாலும் விரசத்தின் உச்சத்தை தொட்டுவிடும். அப்படிப்பட்ட கதையை எடுத்த இயக்குனர் அக்கதைக்கான ஜஸ்டிபிகேஷனை செய்திருக்கிறாரா?என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று ( சாரி மூன்று இல்லை இரண்டுதான்.) கதாநாயகிகளையும் போட்டு பிசைந்தெடுத்துள்ளார். முதல் கதாநாயகியாய் வரும் பெண் கேரக்டர் ஒரு அரைகுறை கேரக்டராய் இருப்பதால், அபாரமான உடல் வளைவுகளை எக்ஸ்போஸ் செய்கிறார். விழுந்து விழுந்து ரவியை காதலிக்கிறார். சாகிறார். இரண்டாவதாக வரும் சுனிதா வர்மா எக்ஸ்போஸ் செய்ய வாய்பில்லை. சொல்லிகொள்ளவும் பெரிதாய் வாய்ப்பில்லை. மூன்றாவதாக வருபவர் அஞ்சலி. பார்த்தவுடன் பச்சக் என முத்தம் கொடுக்கத் தூண்டும் வகையில் இருக்கிறார்.  அவர் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸுக்காகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது. சரியான விகிதத்தில் எக்ஸ்போஸ் செய்யப் பட்டிருக்கிறார். இவரின் கேரக்டரின் தன்மையால் இவரின் நல்ல நடிப்பு எடுபடாமல் போய்விடுகிறது. ரவியாக நடித்த இயக்குனர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் ம்ஹும்.
Karungali190810_25 ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, க்ளஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். எழுதி இயக்கி, நடித்தவர் இயக்குனர் களஞ்சியம். கன்னி பருவத்திலே படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வள்வு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம். அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், தெய்வ திருமகள் கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள். தன் கணவன் எப்போது புத்த்கம், செல், கம்ப்யூட்டர் என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான் என்று குறை சொல்லும் அளவிற்கு உள்ள ஒரு பெண் நிச்சயம் இம்மாதிரியான காரணங்களுக்காக சோரம் போய்விடுவாள் என்று நினைக்க தூண்டுவதே படு அபத்தமான பர்வர்ஷனாக இருக்கிறது. Karungali tamil movie _17__001 படம் நெடுக ஆங்காங்கே வரும் சில பல சுவாரஸ்யமான காட்சிகளையும் ரசித்து பாராட்ட முடியாமல் போவதற்கு பிட் பட பார்மெட் திரைக்கதை என்பது வருத்தமே.  இப்படத்திற்கு அஞ்சலி பெரிய ப்ளஸ்ஸாக இருக்கலாம். ஆனால் அஞ்சலி போன்ற சிறந்த கலைஞர்களின் கேரியருக்கு இந்த படம் ஒரு பெரிய மைனஸே. ம்ஹும் பெட்டர் லக் அஞ்சலி.
கருங்காலி- மழுங்கிய கோடரி

Tuesday, July 26, 2011

கேபிளின் கதை-14


14.
ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும்கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்குஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பார்க்கவேண்டும். அதுதான் மாதாமாதம் கேபிள் டிவி காரர்களுக்கு பணம் கொடுக்கிறோமே? என்றுகேட்பீர்கள். அது இலவச சேனல்களை உங்களுக்கு கொடுப்பதற்கான கட்டணம்தான்.அவர்களுக்கு அந்த சேனல்கள் எல்லாம் இலவசமாய் வருகிறது. அதனால்தான் சேனல்கள் அதிகமாகினாலும்,விலை ஏறாமல் இருந்தது. ஆனால் முதல் முறையாய் ஒரு சேனலுக்குபார்வையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி தங்களுக்கு கட்ட வேண்டும்என்ற நிலையை கொண்டு வந்த்து ஈ.எஸ்.பி.என்.தான்.அவர்கள் கட்டணச் சேனலாய்ஆன போது மக்களிடமிருந்து அவர்கள் வாங்கச் சொன்ன தொகை மிக சிறியது தான். வெறும் ஒருரூபாய் ஐம்பது காசு என்று நினைக்கிறேன். அன்றைய தேதியில் கேபிள் டிவிஆப்பரேட்டர்களுக்கு ஒன்னரை ரூபாய் எல்லாம் பெரிய காசேயில்லை. சரி ஒரு இணைப்புக்குஒன்னரை ரூபாய் என்றால் எப்படி அவர்கள் நெட்வொர்க்குகளில் உள்ள இணைப்புகளைகணக்கெடுப்பார்கள்?. அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரி பார்க்கப் படுமா? என்றகேள்வியெல்லாம் எழத்தான் செய்தது. ஆனால் அதற்கு முன்னால் மக்கள் எப்படி தனியாக ஒருசேனலுக்கென்று பணம் கொடுப்பார்கள்? என்ற கேள்வி எழுந்தது என்னவோ நிஜம் தான்..ஆனால் இந்தியர்களின் கிரிக்கெட் பைத்தியம்  அக்கேள்வியை எல்லாம் தூக்கி கடாசி விட்டது. ஆம்அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் வழங்கும் நேரடி ஒளிபரப்பைத் தவிர வேறு கிரிக்கெட்ஒளிபரப்பே இல்லாத நேரத்தில் துல்லியமான ஒலி, ஒளியுடன், உலகின் பல மூலைகளில்நடக்கும் அத்துனை மேட்சுகளையும் தொடர்ந்து ஒளிபரப்பும் உரிமையை ஈ.எஸ்.பி.என்தன்னிடத்தே வைத்திருக்க, மக்கள் அச்சேனலுக்காக ஒன்னரை ரூபாய் கொடுப்பதற்குபெரிதாய் கவலைப்படவில்லை.

அதே போல ஆப்பரேட்டர்களும்இந்த ஒர் சேனலுக்காக ஒன்னரை ரூபாய் ஏற்றி காசு வாங்க பெரிதாய் இஷ்டப்படாததாலும்,போட்டியின் காரணமாய் அதையும் இலவச சேனல்களுடன் கொடுக்க ஆரம்பித்தார்கள்.ஈ.எஸ்.பி.என். சேனல் ஆப்பரேட்டர்களிடத்தில் பணம் வசூலிக்க வந்த போது உங்களுக்கு எவ்வளவு இணைப்புஇருக்கிறது?என்றவுடன் பெரும்பாலானஆப்பரேட்டர்கள் அதிக இணைப்புகளை சொன்னால் தான் மரியாதை என்று நினைத்து ஒரு பத்துசதவிகிதம் அதிகமாகவே சொல்ல.. அதில் மிக குறைவான இணைப்புகளுக்கே அவர்கள் பணம்கட்டினால் போதும் என்றார்கள். உதாரணமாய் ஆறுநூறு இணைப்புகள் வைத்திருப்பவர்பெருமைக்காக, ஆயிரம் இணைப்பு என்று சொல்லியிருந்தார்கள் என்றால். அவர்கள் வெறும்நூற்றியைம்பது இணைப்புக்கு ஒன்னரை ரூபாய் வீதம் கட்டினால் போதும் என்று வரும் போதுஆப்பரேட்டர்களுக்கு பெரிய தொகையாய் தெரியவில்லை. ஆனால் அவர்களின் மார்கெட் நிமிர, நிமிரஆப்பரேட்டர்களை துரத்தி துரத்தி அடித்தார்கள்.

ஒன்னரை ரூபாய்க்குஆரம்பித்த ஈ.எஸ்.பி.என் சேனல் தன்னுடய கட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்றஆரம்பித்தது. இந்தியா பங்கு பெரும் ஒவ்வொரு மேட்ச் முக்கியமாய் வெளிநாட்டில்நடக்கும் மேட்சுகள் ஆரம்பிக்கும் போதும் விலை ஏற்ற ஆரம்பித்தது. ஒரு சிலவருடங்களில் ஒன்னரை ரூபாய் என்பது மூன்று ரூபாய் என்றாகியிருந்த நேரத்தில்,டிஸ்கவரி என்ற சேனல் டிஜிட்டல் டிகோடருடன் தன் பங்கிற்கு களம் இறங்கியது. அவர்கள்முதலில் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள பெரிய ஆப்பரேட்டர்களை தெரிந்தெடுத்து, அவர்களுக்கெனதனி ஆறடி டிஷ்ஷையும், டிகோடரையும் சலுகை விலையில் கொடுத்து, தங்கள் சேனலை பரப்பஆரம்பித்தது.


ஆம் அன்று நாங்கள் கேள்விகேட்காமல் தலையாட்டியதற்கான விலையை இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.ஈ.எஸ்.பி.என் சேனல் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுடய விலையை உறுத்தாமல் முக்கியமாய்இந்தியா வெளிநாடுகளில் ஆடும் மேட்சுகளின் போது ஏற்ற ஆரம்பிக்க, ருசி பார்த்துவிட்டகிரிக்கெட் ரசிகர்கள் வெறி கொண்டு ஆதரவு தர ஆரம்பித்திருக்க, முதல் முறை கட்டணச்சேனல் என்று ஆன போதே விலையை ஏற்றாமல், போட்டியின் காரணமாய் அதே நூறு ரூபாய்க்குகொடுத்ததினால், அடுத்தடுத்து இவர்களின் விலை ஏற்றம் செய்யும் போது வேறுவழியில்லாமல் ஐந்து முதல் பத்து ரூபாய் ஏற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் வந்துநின்றார்கள். ஆனால் இதை சாக்காய் வைத்து அக்கம்பக்கம் இருக்கும் போட்டியாளர்கள்தங்கள் ஏரியாவில் விலை ஏற்றிவிட்டு, பக்கத்து ஏரியாவில் நூறு ரூபாய்க்குஈ.எஸ்.பி.என் சேனலுடன் என்று விளம்பரம் செய்து ஏரியாவிட்டு ஏரியா இணைப்பு கொடுக்கஆரம்பித்தார்கள்.

இந் நேரத்தில் அமெரிக்காவின்புகழ் பெற்ற சேனலான டிஸ்கவரி தன்னுடய சேனலை இந்தியாவில் ஆரம்பிக்க வந்தது. வரும்போதே தன்னுடய அமெரிக்க வியாபார தந்திரத்துடன் ஒவ்வொரு ஏரியாவில் இருக்கும் முக்கியஆப்பரேட்டர்களை தெரிவு செய்து வந்தது. அதில் ஒரு முக்கியமானவர்களில்முக்கியமானவனாக என்னை தெரிந்தெடுத்து, ஒரு டிஷ் ஆண்டனாவையும், சல்லிசான விலையில்ஒரு டிஜிட்டல் டிகோடரையும் கொடுத்து உங்களுக்கு மட்டும் இலவசம் என்றது. என்னால்அவர்களின் வியாபார தந்திரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஓரளவுக்கு பெரிய ஆப்பரேட்டர்களில் ஒருவன். எனக்கு இலவசமாய்கொடுத்துவிட்டு ஒரு ரெண்டு மாதம் ஓட்டிவிட்டால், என்னிடம் இந்த சேனல் இருக்கிறதுஎன்று மற்ற ஆப்பரேட்டரகள் தானாகவே முன்வந்து சேனலை கேட்பார்கள் அப்போது கட்டணச்சேனலுக்கான விலையையும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் ஒரு சேர அவர்கள்இஷ்டப்படி அதிகப்படுத்தி அக்ரிமெண்ட் செய்து கொள்ளலாம் என்பதுதான் அவர்களின்திட்டம். ஆனால் சேனலைப் பொறுத்தவரை அருமையான கண்டெண்ட் உள்ள சேனல் இதற்கு ஒருஇரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது என்று தோன்றும். தனிப்பட்டமுறையில் ஒன்னரை ரூபாய், இரண்டு ரூபாய் என்று பார்த்தால் நிச்சயம் பெரிய தொகையாய்தெரியாது. ஆனால் அதுவே ஒரு ஆப்பரேட்டருக்கு நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் என்றால்ஐந்நூறு ருபாய் என்றாகும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

எங்கள் ஏரியாவில் இப்படிஅப்படியென சுமார் இருபது ஆப்பரேட்டர்களுக்கு மேல் இருக்க, கட்டணச் சேனல்களின்வரவால் ஆட்ட்த்தை கலைக்கவும் மனமில்லாமல், நட்த்தவும் முடியாமல் தொழில் நட்த்தகஷ்டப்பட்டவர்கள் அதிகம் பேர். முக்கியமாய் குடிசைப் பகுதிகளில் தொழில் நட்த்திக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ப்ரச்சனை கிரிக்கெட் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்ஆதரவு அவர்கள் ஏரியாக்களில் உண்டு. ஆனால் அதற்காக ஐந்து ரூபாய் அதிகமாக பணம்கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அன்றைய காலகட்ட்த்தில் கலர் டிவியை விட கருப்புவெள்ளை டிவிக்கள் அதிகமிருந்த காலம். வெறும் எட்டு சேனல்களுக்கு 75 ரூபாய்க்குமேல் வாங்க முடியாது இதில் கிரிக்கெட் போன்ற சேனல்களை ப்ரைம் பேண்டில் கொடுக்கவேண்டும்.  இதனால் என்ன செய்வது என்றுபுரியாமல், புதிய சேனலுக்கான மாடுலேட்டர், டிஜிட்டல் டிகோடர் போன்றவைகளை வாங்கவேண்டுமென்றால் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்க, வேறுவழியில்லாம பக்கத்தில் இருந்த பெரிய ஆப்பரேட்டரிடம் விற்க ஆரம்பித்தார்கள். சிலபேர் அவர்களிடமிருந்து சிக்னலை மட்டும் பெற்று கொண்டு அவர்களுடய சேனல்களில் டிமாடுலேட் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

என்னிடம் டிஸ்கவரி சேனல் வந்த்துஇப்படித்தான் பக்க்த்தில் இருந்த ஆப்பரேட்டர்கள் என் கண்ட்ரோல் ரூமிலிருந்துகேபிளை ஓட்டி தங்கள் கண்ட்ரோல் ரூமில் டி மாடுலேட் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாய்போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஈ.எஸ்.பி.என்னும், டிஸ்கவரியும் சேர்ந்து ஒருநோட்டீஸை விட்டார்கள்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்Monday, July 25, 2011

நான்- ஷர்மி - வைரம்-6

6 ஷர்மி
pic3 
நான் வயதுக்கு வந்த விழாவிற்கு பிறகு அம்மா என்னிடம் வந்து “இதபாரு பேபி.. இனிமே பாய்ஸ் கூடல்லாம் ஜாக்கிரதையா பழகணும். என்ன? தனியா எங்கியாச்சும் கூப்பிட்டாங்கன்னா போக்க்கூடாது. என்ன புரியுதா?” என்றாள். ஆனால் எனக்கு புரியவில்லை. ஆனால் அவள் இம்மாதிரி என்னிடம் உட்கார்ந்து பேசி வெகு நாளாகிவிட்ட்து.


“யாராவது உன் உடம்பை டச் பண்ணி பேசுனா, உனக்கு கம்பர்டபிளா இல்லாட்டி, என் கிட்ட சொல்லு. நீ தனியா இருக்கிறப்போ அப்படியாராச்சும் நடந்தாங்கன்னா அவங்க கிட்டயிருந்து விலகி வந்திரு.” என்றாள். டிரைவர் சுந்தரத்தைப் பற்றி சொல்ல்லாமா? என்று யோசித்தேன். சொல்லவில்லை.

மீண்டும் ஸ்கூல் போன போது கூடப் படிக்கும் எல்லோரும் என்னையே பார்ப்பது போலிருந்த்து. முக்கியமாய் ஆண்கள். என் பிஸிக்ஸ் மிஸ் என்னைப் பார்த்து “எப்படியிருக்கே?” என்று விசாரித்துவிட்டு, “சட்னு இன்னும் அழகாயிட்டா பாருங்க” என்று மேத்ஸ் மிஸ்ஸிடம் சொல்லியது எனக்கு மேலும் வெட்கத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு நான் என்னையே கண்ணாடியில் பார்ப்பது அதிகமானது. என்னுடய முகத்தில் அவர்கள் சொல்லியது போல ஒரு பளபளப்பு ஏறித்தான் இருந்தது. கன்ன்ங்கள் எல்லாம் ரூஜ் தடவியதைப் போல சற்றே சிகப்பாக பளபளத்த்து. இடுப்பு லேசாய் அகண்டு நேராக நின்று கண்ணாடியில் பார்க்கும் போது தடாலென அதிர்ச்சியாய் இருந்த்து. இன்ச் டேப் வைத்து அளந்தபின் தான் கொஞ்சம் அசுவாசமடைந்தேன். மார்பகங்கள் இன்னும் பெரிதாய் திம்மென நெஞ்சில் கட்டி வைத்த பந்து போல இருந்த்தை என்னாலேயே ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சில நேரங்களில் குளித்துவிட்டு டவலைக் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன் சட்டென எல்லாவற்றையும் திறந்து நொடியில் தெரியும் நிர்வாணத்தை ரசிப்பதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.

ஸ்கூலில் கிட்ட்த்தட்ட ராஜகுமாரியைப் போலவே என்னைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மற்ற பெண்கள் தங்களிடம் வந்து பேசமாட்டானா? என்று ஏங்கிய அர்ஜுன் என் பின்னால் அலைந்த்து எனக்குள் ஒரு ஆணவத்தை ஏற்படுத்தியது. அவனை அலையவைக்க என்ன என்ன வழி என்று யோசிப்பதே ஒரு பொழுது போக்காய் ஆனது. அர்ஜுன் அதற்கெல்லாம் சளைக்கவேயில்லை. விடாமல் துரத்தினான். எவ்வளவு இன்ஸெல்ட் செய்தாலும் அடிபட்ட பார்வையுடன் என்னையே சுற்றி வந்தான். சில சமயம் பாவமாய் இருந்தது.

அர்ஜுனை அப்படி டீஸ் செய்வது என் தோழிகளிடையே என்னைப் பற்றிய ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவனுக்காக் எதை வேண்டுமானாலும் செய்ய நிறைய பேர் காத்திருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒர் எல்லை இருக்கும் என்பது என் நெருங்கிய தோழி ரேஷ்மாவின் பிறந்தநாள் அன்று தெரிந்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Sunday, July 24, 2011

கொத்து பரோட்டா – 25/07/11

தமிழ்நாடு பூராவும் திமுக அமைச்சர்கள், கட்சிகாரர்கள் என்று பாகு பாடு இல்லாமல் நில அபகரிப்பு கேஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பல பேர் மீது சென்ற ஆட்சியின் போதே போலீஸாரிடம் கேஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள். நிச்சயம் இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்க தகுந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பையா போன்ற அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மட்டும் தொடர்ந்து விசாரணையில் இருப்பதாய் சொல்லப்படுகிறது. அதில் சமீபத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மீது கேஸ் கொடுத்தவர் தனக்கு எழுதப்படிக்க தெரியாது என்றும், என்ன ப்ரச்சனை என்றே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் என்று கூறி கேஸை வாபஸ் வாங்கிவிட்டார். இதன் பின்னணி என்னவென்று தமிழ் நாட்டிலிருக்கு சிறு குழந்தைகளுக்கு தெரியும். இந்த ஆட்சியிலாவது பாரபட்சமில்லாத சட்டம் ஒழுங்கு போற்றப்படும் என்கிற ஒரு விஷயம் வெறும் நம்பிக்கையாக மட்டுமே போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. இந்த பக்கம் கேஸ் கொடுத்தவங்க நல்லா படிச்சவங்க போலிருக்கு.
#############################


சென்ற வாரம் பூராவும் பதிவுலக வாசகர்களின் சந்திப்பாகவே அமைந்துவிட்டது. அதை தொடங்கி வைத்தவர் பதிவர் எழில். ஒரு சனிக்கிழமை லஞ்சுக்கு அழைத்திருந்தார். பெலிடாவில் நான், எவனோ ஒருவன் பெஸ்கி, எழிலுடன் அருமையான லஞ்சை அளித்தார். மிக சுவாரஸ்யமாக போனது அன்றைய மதியம். அதன் பிறகு சினி சிட்டியில் இரண்டு பேர் கொஞ்சம் தயங்கியபடி அருகே வந்து “நீங்க கேபிள்தானே?” என்று கேட்டனர். ஆமாம் என்று சொன்ன மறுவினாடி “அஹா… தலைவரே..” என்று பெருங்குரலெடுத்து கட்டி அணைத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டு போனார். அவர்களில் ஒருவர் சாப்ட்வேர் ஃபீல்டில் இருந்தாலும் டி.ஜேவாக இருக்கிறார். பெயர் கோபி. அவருடய விஸிட்டிங் கார்டே மிக சுவாரஸ்யமாய் இருந்தது. அதே சினி சிட்டியில் இன்னொரு நண்பர் வாசகர். அபுதுபாயிலிருந்து கார்திகேயன்.  இரண்டு வருடங்களுக்கு மேலாக படித்துக் கொண்டிருப்பதாகவும், நிச்சயம் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். நன்றி கார்த்திகேயன். நண்பர் ஹாரிஸ் கூட இந்த வாரம் அழைத்திருக்கிறார். இவரும் என் நெடுநாள் வாசகர்.
################################
செவிக்கினிமை
கேட்டவுடன் மறுபடி, மறுபடி முணுமுணுக்க வைத்த பாடல் “வாகை சூட வா” படத்தில் வரும் “போறானே..போறானே” . கேட்சியான ட்யூன். முக்கியமாய் நேகாவின் குரல் ஹாண்டிங்  வாய்ஸ். அதே போல கார்த்திக் நேதாவின் பாடல் வரிகள். மிக ஆழகாய் ஆழமாய் எழுதப்பட்ட வரிகள். ”போறானே.. போறானே, காத்தோட தூத்தலைப் போல”, என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருக்கும் ஒரு சுவாரஸ்யமே பாடலை நம்முள் கொண்டு செல்கிறது.

இந்த வாரம் “வந்தான் வென்றான்” பாடல் வெளியீட்டிற்கு போயிருந்தேன். தமனின் இசையில் மூன்று பாடல்களும், ட்ரைலரையும் வெளியிட்டார்கள். மூன்று பாடல்களில் எனக்கு பிடித்தது தாமரை எழுதிய “காஞ்சனமாலா” தான். கொஞ்சம் ரஹ்மானின் ‘நெஞ்சினிலேவை பிரதியெடுத்தது போல இருந்தாலும் இண்ட்ரஸ்டிங்.  ஆலாப் ராஜு பாடியிருக்கும் அஞ்சனா விஷுவலாய் நன்றாக இருக்கிறது. டாப்ஸி டாப்பாக இருக்கிறார். ஆனால் தமனின் டிரேட்மார்க்கான குரல்களை டெக்னோ சவுண்டாக்கி விடும் ஸ்டைல் வர வர எரிச்சலடைய வைக்கிறது. மதன் கார்க்கி மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். சமீப காலத்தில் வெகு சீக்கிரத்திலே முன்னணி பாடலாசிரியர் வரிசையில் வந்து கொண்டிருக்கிறார் இவர். நா.முத்துகுமாரின் முடிவில்லா மழையோடு பாடலும் ஹிட் வரிசையில் வர சான்ஸிருக்கிறது.
###################################
சென்ற வாரம் நான் எழுதிய ”கேட்டால் கிடைக்கும்” கட்டுரை பல பேரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நிறைய நண்பர்கள் தொலைபேசியில் பாராட்டிவிட்டு, தாங்களும் தங்கள் பங்குக்கு இது மாதிரியான விஷயங்களுக்காக போராடியிருப்பதாய் சொன்னார்கள். முக்கியமாய் பெங்களூரிலிருந்து நண்பர் பிரபு. பஸ் ஸ்டாண்டுகளில் கட்டண கழிப்பறைகளில் ஒரு ரூபாய்க்கு பதிலாய் இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் வாங்குவதைப் தான் எதிர்த்ததாகவும், அதற்காக தன்னை அடிக்க வந்ததாகவும் கூறினார். அதே போல வாசகர் சரவணன் மக்கள் தங்கள் உரிமையை உணர ஏன்  அதற்கான சட்ட திட்டங்களைப் பற்றி எழுதக்கூடாது என்று கேட்டார். விரைவில் அதையும் வெளியிடுகிறேன் நண்பரே. நம் உரிமைகளை நாம் என்றுமே விட்டுக் கொடுக்க கூடாது. நம்மிடமிருந்து கொள்ளையடிக்க அவர்கள் வெட்கப்படாத போது நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் நம் உரிமைகளை கேட்பதற்கு?. இதை ஒரு இயக்கமாய் நாம் செய்தால் என்ன? உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
#################################
ஓர் அறிவிப்பு
இயக்குனர் களஞ்சியம் இயக்கி, நடித்திருக்கும் “கருங்காலி” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை வருகிற புதன்கிழமை 27ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு திரையிட இருக்கிறார்கள். பார்க்க விரும்பும் பதிவர்கள், பேஸ்ஃபுக் அன்பர்கள் தயவு செய்து என்னை தொடர்பு செய்து உங்கள் வருகையை உறுதிபடுத்தவும். நன்றி.
###################################
டெல்லி பெல்லி படத்தை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கிறது. படத்தில் நாயகர்கள் போலிஸிடமிருந்து தப்பிக்க புர்கா அணிந்து போவதால் முஸ்லிம்களின் மனம் புண்பட்டிருக்கிறதாம். சினிமா கண்டு பிடித்த காலத்திலிருந்து இருக்கும் இந்த யுக்தி இப்போதுதான் இவர்கள் மனதை புண்படுத்தியிருக்கிறதா? நிச்சயமாய் இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் வரும் வசனங்கள் ஹிங்கிலிஷ் படமாதனால் ஆபாச வார்த்தைகள் வந்ததை பற்றி பெரியதாய் கண்டு கொள்ளவில்லை. அதுவும் அமீர்கான் போன்ற பெரிய நடிகர்களின் தயாரிப்பாய் இருந்தால் கண்டு கொள்ளப்படுவதில்லை. அதே நம்மூர் ஆரண்யகாண்டம் என்றால் ட்ரிபியூனல் எல்லாம் போய்தான் வரணும். அதென்ன தமிழுக்கு ஒரு நியாயம்? மற்ற மொழிகளூக்கு ஒரு நியாயம்?
#################################
ப்ளாஷ்பேக்
இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவிக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்த பாடல். ஒரு பாடல் முழுவதும் தன்னுடய நடனத்தின் மூலம் கட்டிப் போடும் திறமை மிக சிலருக்கே உண்டு. இதே மாதிரி பாடல்கள் பல ஹிந்தி படங்களில் வந்திருந்தாலும் இது என்னுடய பேவரிட்.
#######################################
அட்டக்காப்பி
இந்தப் படம் தான் உட்டாலக்கடின்னு ஒலகத்துக்கே தெரிஞ்சாலும் அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்ததா சொல்றாய்ங்க.. சரி அதை விடுங்க. இந்த பாட்டை கேளுங்க.. இதையும் கஷ்டப்பட்டுத்தான் போட்டாய்ங்களா?

############################################
Amy winehouse பேரைக் கேட்கும் போதே கொஞ்சம் லேசான போதை ஏறும். இவரின் ரிஹாப் சிங்கிளை கேட்டபின் இவர் குரலில் உள்ள போதை நம்மை கிறங்கடிக்கும். அப்படிப்பட்ட இளமையான, இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.  மிகவும் குறுகிய காலத்தில் பணம், புகழ், விருதெல்லாம் இவரை தேடி வர, போதையின் உச்சத்தில் ஏறி அமர்ந்த காரணத்தால் 27 வயதில் நேற்று முன் தினம் வீட்டில் இறந்து கிடந்தார் இவர்.

###################################################
மை கார்னர்

##############################################
அடல்ட் கார்னர்

அந்த பெண்கள் பள்ளியில் ஆங்கில வாத்தியார் ஒருவர் வகுப்பு எடுக்க வரும்போது பேண்ட்டுக்கு ஜிப் போட மறந்து வந்துட்டார்.. அவர் லுல்லாவை பார்த்த மாணவிகள் சிரிக்க ஆரம்பித்தனர்.மாணவிகள் சிரிப்பது எதற்கு என்று புரியாத அந்த ஆங்கில வாத்தியார் மிரட்டறதா நினைச்சிகிட்டு, 'இனிமே யாரவது சிரிச்சிங்கன்னா வெளிய நிக்க வச்சிடுவேன்'...அப்படின்னு சொன்னதும் மாணவிங்க ஒட்டு மொத்தமா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...

Saturday, July 23, 2011

குறும்படம் - The Plot

The Plot. தமிழ் குறும்படம் தான். அஸ்வின் ஷரவணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படம் கருத்தளவில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எனும் பழிவாங்கும் கதையாய் இருந்தாலும், ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும், பின்னணியிசையிலும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள். உங்கள் பார்வைக்கு...

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Friday, July 22, 2011

காஞ்சனா – முனி-2

Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills எத்தனை பேரு.. ஒரு படத்துக்கு. சரி விடுங்க.. ஏற்கனவே தமிழில் முனி முதல் பாகம் வந்த போது சரியாக போகவில்லை. ஆனால் தெலுங்கில் ஏற்கனவே ராகவா லாரன்ஸுக்கு இருந்த மார்கெட்டினால் சரி ஓட்டம் ஓடியதாக தகவல்.  அந்த தைரியத்தில் அதே கதையை கொஞ்சமே கொஞ்சம் மாற்றி பார்டு டூ எடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் வேறு ஏதும் படமில்லாததால் காசி, ஏவி.எம் போன்ற தியேட்டர்களில் காலை காட்சி புல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காரணம் கடந்த ஒரு வாரமாகவே சரி விளம்பரம்.


Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills லாரன்ஸ் ஒரு வீரன், சூரன், கருப்பழகன், பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் கவர்பவர். ஆனால் இவருக்கு சாயங்காலம் ஆனால் பயம். பேய் பயம். அண்ணன் அண்ணி, குழந்தைகள், அம்மாவோடு ஒரு பெரிய பங்களாவில் இருக்கிறார்கள். ஒரு நாள் இவர்கள் வழக்கமாய் கிரிக்கெட் விளையாடும் க்ரவுண்டி ஏதோ பில்டிங் கட்ட ஆரம்பிக்க, வேறு ஒரு புதிய க்ரவுண்டை கண்டுபிடித்து ஆட ஆரம்பிக்கிறார்கள். அங்கே ஸ்டெம்ப் அடிக்கும் இடத்தில் பேய் இருக்க, அதன் ரத்தம் ஸ்ட்ம்பில் பட்டதோடு வீட்டிற்கு எடுத்து வருகிறார். வீட்டிற்குள் பேய் வந்துவிடுகிறது. அந்தப் பேய் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்பதை கட்டாயமாய் கண்டு களிக்க வேண்டும் என்று நினைத்தால் போய் பார்க்கவும்.

ராகவா லாரன்ஸ் வழக்கப்படி நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ரஜினியை இமிடேட் செய்கிறார். சிகப்பு லஷ்மிராயுடன் சல்லாபிக்கிறார். டபுள் மீனிங்கிலும், சிங்கிள் மீனிங்கிளும் அம்மா, அண்ணன், அண்ணி, என்று மொத்த குடும்பமே பேசிக் கொள்கிறது.  அம்மா பக்கா கோவை பாழை பேசுகிறார். அண்ணி அய்யராத்து பாஷை பேசி சிக்கன் சமைத்து போடுகிறார். அண்ணன் சாதாரண தமிழ் பேசுகிறார். என்ன எழவுக்கென்றே தெரியவில்லை.  முதல் பாதி முழுவதும் தேவையில்லாத சண்டைக் காட்சிகள், குத்து பாட்டுகள் என்று போனாலும், பேய் மேட்டர் ஆரம்பித்ததும் கொஞ்சம் சுறுசுறுப்படையத்தான் வைக்கிறார். சும்மா ஜிவ்வென போய் கொண்டிருக்கும் போது கோவைசரளாவை காமெடியாக்கியதால் ஜில்லிப்பு தணிந்து போய் விடுகிறது. ஆனால் இப்படத்தை பொறுத்தவரை கோவை சரளாத்தான் சரியான எண்டர்டெயினர். சும்மா புகுந்து விளையாடுகிறார். இவரது மருமகளாக வரும் தேவதர்ஷினியும் க்யூட். வெள்ளைத்தோல் லஷ்மிராய் ம்ஹும்…….
Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் குழந்தைகள் கூட பயப்படாது. ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படு அபத்தம். எலலா வில்லன்களையும் கொன்ற காஞ்சனா, கடைசி வில்லனை மட்டும் கோவிலுக்குள் வைத்து, வெளியே வைத்து எல்லாம் விளையாடி கொல்வது படு போரடிக்க்கிறது. அட இடைவேளை வரை பரவாயில்லையே என்று நினைத்ததற்கு சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்கள். வழக்கமான பழிவாங்கும் கதைக்கு அரவாணி பெயிண்ட் அடித்திருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

தமன் வர வர ஏமாற்றுகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது. கேமரா கோணங்களில் பெரிதாய் பயமுறுத்தாமல் சின்னச் சின்ன ஷாட்களில் நம்மை ஜில்லிட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கோவை சரளாவும், தேவதர்ஷினியும், வீட்டில் பேய் இருக்கிறதா? என்று கண்டு பிடிக்க செய்யும் முயற்சிகள் த்ரிலுக்கு திரில், காமெடிக்கு காமெடியாக வந்திருக்கிறது.
காஞ்சனா- பேய் படம் எப்படியிருந்தாலும் பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்கு
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, July 21, 2011

கேட்டால் கிடைக்கும்.

ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய  புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.


நான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒரு ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன்.  ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.

இப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா? அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும்.  அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா? என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே?” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.

“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.

தியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள். ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள். 

இதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள்.  நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

சிப்லிங்க்ஸ் இல்லையேன்னு வருத்தமா?

The Plague Picnic 2011

Viime lauantaina järjestettiin toisen kerran suomalaisten Emilie Autumn fanien tapaaminen The Plague Picnic Helsingin Vanhassa kirkkopuistossa eli tuttavallisemmin Ruttopuistossa. Sää suosi tänäkin vuonna ja aurinko paistoi lämpimästi, vaikka aamulla olikin pieniä sadekuuroja. Itse saavuin tapaamiseen Kampin kautta, mistä hain itselleni muutaman siiderin ja salaatin. Itse paikan päälle saavuin luonnollisesti myöhässä (milloinkohan oppisin olemaan ajoissa?), mutta eipä se haitannut. Muut olivat jo aloittaneet tekemään keijunsiipiä, mutta itse en sellaisia tarvinnut, joten katselin muiden askartelua.

The second Finnish Emilie Autumn fans meeting was organized in Old church park, Helsinki also known as Ruttopuisto (The Plague Park) on last saturday 16th of July. The weather was perfect, although there was some raining in the morning. I was a little late from the picnic (like I am always), because I picked some cider and salad before the meeting. Others had already started to make some fairy wings, so I was just watching others crafting.


 Siivet olivat upeita ja niitä pitikin testata heti
The faery wings were amazing and girls put them on immediately

Picnicin aikana kuuntelimme luonnollisesti Emilie Autumn:in musiikkia ja nautimme eväitä. 
We were listening Emilie Autumn and eating lunch during the picnic.

Tytöt ja päivänvarjot.
Girls with their parasols.
pic: Riikka


 Cherries!
It´s tea time


Keijusiipien teko on likaista puuhaa.
Making faery wings is messy.

Hola hoop is fun fun fun!

Meri Tuuli was pretty in pink
 "olen myöhässä, niin kovin kovin myöhässä"

Venla was relaxing
Näytin iloiselta
I looked so happy
 

ehkäpä siiderin ansiosta..
maybe because of the cider...

Ei liene yllätys, että asuuni ja meikkiini etsin inspiraatiota nimenomaan Emilien tyylistä. Hän on erittäin lahjakas, taiteellinen ja inspiroiva persoona niin monella tapaa. Ihailen häntä suuresti! Asuni kehittelin oikeastaan tuon kasvoihin piirretyn sydämen pohjalta ja tältä se sitten näytti:

It´s not surprise that I got inspiration to my outfit from Emilie. She is so talented, artistic and inspiring person in so many ways. I admire her so much! Everything in my outfit started from that heart on my cheek and I looked like this:


Paita, shirt - Seppälä
 Hame, skirt - Boutique LouLou
Alushame, petticoat - H&M
Sukat, socks - Boutique LouLou
Kengät, shoes - Anttila

Hame näyttää aika lyhyeltä, mutta minulla oli sen alla burleskipöksyt eli sellaiset röyhelöiset alushousut, jotta vilautuksilta vältyttiin. Ihmisten tuijotukselta en tosin onnistunut välttymään tälläkään kertaa ja monet kävivät ottamassa kuvia meistä piknikin aikana. Hieman häiritsevää yrittää jutella ihmisten kanssa, kun koko ajan joku oli kuvaamassa.


Korvakorut, earrings - H&M
Kaulakoru, chocker - Cybershop

Tämä kuva on suosikkini koko piknikiltä. Kerrankin onnistunut kuva minusta.
This is my favorite one of the photos.Ja lopuksi koko porukka. Kiitokset kaikille ja toivottavasti näemme taas ensi vuonna!
And here is all of us:

Lähetimme myös Emilielle kuvat piknikistämme ja hän vastasi näin:
Emilie also saw our picnic photos and sent us a message:

"You are all so beautiful, and doing such a fucking beautiful thing, 
makes me cry with joy and pride:)!"

"But, oh, what beautiful things I'll wear
What beautiful dresses and hair
I'm lucky to share his bed
Especially since I'll soon be dead"

Followers

Loading...

Blog Archive