Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, May 31, 2011

மைதானம்

Maithanam-Movie-Stills-017
தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு  எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

கொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.


டெக்னிக்கலாய் பார்த்தால் டிஜிட்டல் ஹெச் டிவி கேமரா, அதிகமாய் லைட்டுகள் கிடையாது, இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்கள். கதை நாயகர்களாய் நான்கு உதவி இயக்குனர்கள். தெரிந்த முகமென்றால் தங்கையாக வரும் கதாநாயகியும், அவளுடய பெற்றோர்களாக வரும் இயக்குனர் அகத்தியனும், என்னுயிர் தோழன் ரமாவும்தான்.
 maithanam-movie-stills-080 நான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.

முதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி என்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.

இதையெல்லாம் சரி செய்வது போல படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுவென கொண்டு போயிருக்கிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் சக்திவேலுக்கு கொஞ்சம் பணமும், நல்ல ஆர்டிஸ்டுகளும் கிடைத்தால் ஒரு நல்ல படத்தை தருவார் என்று புரிகிறது.
மைதானம்- 50/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Sunday, May 29, 2011

Knowing me, knowing you

Viimeinkin pääsen päivittämään blogia. Kuten monet tietävätkin, blogger ei ole toiminut kunnolla viime aikoina. Itse en ole päässyt kirjautumaan koko palveluun, joten siitä tämä hiljaisuus. Pahoittelen asiaa, vaikka en tälle itse ole mitään voinutkaan.

Sitten hieman kuulumisia ennen kuin vastaan lähettämiinne kysymyksiin. Sain kaikki kurssit viimein suoritettua eli tämän tytön opiskelut on nyt opiskeltu. Jäljellä on vielä työharjoittelu, jonka suoritan kesällä eli syksyllä on tiedossa valmistujaisjuhlat. Tuntuu oudolta, että minun ei tarvitse enää mennä kouluun ja saattaa olla, että tämä oli viimeinen koulu, minkä tulen käymään. Tämä on kolmas koulu josta valmistun peruskoulun jälkeen, joten eiköhän siinä ole tarpeeksi opintoja yhdelle ihmiselle, vaikka elämä onkin jatkuvaa uuden oppimista.

Olen äärettömän helpottunut siitä, että sain kaikki kurssit kasaan. Tein töitä hullun lailla tämän toukokuun ajan ja sain kehuja opettajilta ahkeruudestani. Minun on aina ollut vaikea olla ylpeä itsestäni tai saavutuksistani. Vähättelen itseäni, onnistumisia ja saavutuksiani. Nyt annoin itselleni luvan olla ylpeä itsestäni ja tyytyväinen saavutuksestani. Monista valmistumisessa ei ole mitään ihmeellistä, mutta kun ottaa huomioon, mitä kaikkea kävin läpi opiskeluni aikana, niin on todellakin syytä arvostaa itseään. Monet saattavat muistaa kuinka olin viime vuonna sairaalassa, pitkällä sairaslomalla ja kävin läpi todellisen helvetin. Tämän takia valmistumiseni siirtyi syksyyn, mikä oli minulle kova kolaus. Olen aina vaatinut itseltäni todella paljon ja tunsin pettäneeni itseni ja olevani täysin epäonnistunut. Sairaudelle ei kuitenkaan voi mitään, eikä sitä itse valitse. Kaikista vastoinkäymisistä huolimatta voin katsoa itseäni ylpeä peilistä ja todeta "minä tein sen". Helppoa se ei ollut, mutta ehkä se on tämä lappilainen jääräpäisyys, mikä sai minut puskemaan läpi sen harmaan kivenkin.

Nyt kun koulu on osaltani ohitse ja minulla alkoi kesäloma, on myös aika palata tämän blogin pariin, joka on jäänyt täysin taka-alalle kiireitteni takia. Loma tulee enemmän kuin tarpeeseen, koska minulla ei ollut viime kesänä päivääkään lomaa. Lupasivat vielä helteitä ensi viikoksi, joten saattaa olla, että käyn heittämässä jäähyväiset talviturkille. Onneksi asun aivan meren välittömässä läheisyydessä, joten rannalle pääsee parissa minuutissa. Toivotan myös muille lomalaisille aurinkoisia lomapäiviä ja valmistuville onnea upeasta suorituksesta!

Sitten niihin kysymyksiin. Kiitokset kaikille, jotka niitä lähettivät. Näihin oli mukava vastata ja joitakin piti tosissaan miettiä. Pidemmittä puheitta:

Miksi sinulla on niin isot tissit ? :) :D

- Geenivika.


Käytkö koskaan parturissa vai leikkaatko / värjäätkö hiuksesi itse !? :)

- Käyn kampaajalla välillä siistimässä latvoja. Erikoisemmisssa hiusjutuissa, kuten värinpoistot, tekohiusten laittaminen jne. luotan myös kampaajaan. Juurikasvun värjäämisen ja otsatukan leikkaamisen hoidan itse.


Lempibändisi/artistisi? Kuka on roolimallisi ja miksi?

- Blutengel ehdottomasti.
Minulla ei ole koskaan ollut ketään erityistä roolimallia, mutta ihailen monia ihmisiä. Ihailen monien bloggaajien tyyliä. Ihailen itsevarmoja ihmisiä, jotka eivät välitä siitä, mitä muut heistä ajattelevat. Ihailen ihmisiä, jotka jaksavat olla positiivisia kaikista vastoinkäymisistään huolimatta. Ihailen ihmisiä, jotka auttavat muita pyyteettömästi, tekemättä siitä numeroa.


Lempikauhuelokuvasi?

- Vaikea sanoa yhtä elokuvaa, koska pidän niin monista. The Crow on kaikessa synkkyydessään ja ahdistavuudessaan mestariteos, jonka voi katsoa yhä uudelleen ja uudelleen. Uusimmista elokuvista sanoisin Sweeney Todd upean tummanpuhuvan puvustuksen ja mustan huumorin ansiosta. Pidän myös The Hills have eyes: in brutaalista teurastusmeiningistä, sekä elokuvan tavasta pitää katsoja otteessaan loppuratkaisuun asti.

 pic: weheartit.com


Kuka on komein miespuolinen "julkkis?"

- Ehdottomasti monen eri bändin keulahahmona tunnettu Chris Pohl <3


pic: www.supermusic.sk


Minne matkustaisit jos sinulla olisi rajattomasti rahaa, ensimmäisenä?

- Amerikkaan olen aina halunnut matkustaa. Olisi upeaa edes kerran elämässä kokea ja nähdä se maa. En osaa sanoa minne siellä haluaisin matkustaa erityisesti.

pic: weheartit.com

Osaatko hyvin ruotsia?

- Kyllä ainakin muiden mielestä. Tulihan tuota kieltä opittua, kun seurustelin ruotsalaisen miehen kanssa. Pystyn käymään keskusteluja ruotsiksi, vaikka joskus saattaa yksi sana olla hakusessa. Riikinruotsalaisia on vaikeampi ymmärtää, koska he puhuvat todella nopeasti ja aivan eri tavalla kuin suomenruotsalaiset. Luen ruotsalaisia iltapäivälehtiä  ja blogeja netissä, jotta pitäisin kielitaitoani yllä.

Jos saisit 100e lahjakortin Anttilaan, rajoituksena että musiikkia, elokuvia tai kirjoja ei saa ostaa. Mitä lähtisit hankkimaan?

- Kosmetiikkaa varmaankin, koska niitä sieltä enimmäkseen ostan muutenkin. Nytkin olisi tarvetta uudelle meikkivoiteelle, puuterille, ihonpuhdistusaineille jne.

Miten vastaat puhelimeen? 

- Riippuu aika pitkälti kuka soittaa. Tuntemattomaan numeroon vastaan yleensä omalla nimellä, mutta kavereille vastaan "Mystis" "No moikka" "Kerro" "Mitä beibe?" :D


Mitä sinulle merkitsee sana "Gootti"? :) 

-  Goottina oleminen ja eläminen on ennen kaikkea elämäntapa. Tästä on tulossa oma postauksensa, joten kerron siinä tarkemmin aiheesta :)

Jos talossasi syttyisi tulipalo ja pystyisit pelastamaan VAIN kolme sinulle tärkeää asiaa, mitkä pelastaisit? Vastaukset mielusti kuvien kera. ;)

- Tässä luultavasti tarkoitettiin tavaroita, joten en laske lemmikkieläimiäni. Olisi liian helppoa sanoa, että pelastaisin eläimeni, joten mietin nyt vain materiaa. Oli vaikea miettiä tavaroita, koska uusia saa aina kaupasta.

1. Ulkoisen kovalevyn pelastaisin, koska se on täynnä tärkeitä muistoja.

2. Tällä hetkellä varmasti WGT:n lipun ja passin (lipusta löytyy kuva aiemmassa postauksesta)

3. Vaikea keksiä kolmatta. Sanotaan vaikka tietokone, vaikka niitäkin saa uusia kaupasta. (uudesta koneesta tulee myöhemmin postaus)Laulatko suihkussa tai yksin ollessasi?

- Suihkussa en laula, mutta muuten laulan lähes koko ajan. Monesti olen meinannut alkaa laulamaan myös bussissa, kun olen kuunnellut musiikkia. Rakastan laulamista yli kaiken, mutta harvoin kehtaan laulaa muiden edessä. Naapurini ovat tosin varmasti useammankin kerran kuulleet laulamistani.


Mitä eri kieliä osaat?

- Suomi (äidinkieli), ruotsi (hyvä), englanti (hyvä), saksa (perusteet). Haluan oppia puhumaan saksaa paremmin, sekä saamen kielen. 

Jos mustaa ei olisi, minkä värin valitsisit?

- Viininpunaisen tai violetin.

Jos joskus menisit naimisiin, käyttäisitkö valkoista mekkoa?

- En usko. Haluaisin tummanpunaisen mekon, mustilla pitseillä. Punainenhan on rakkauden ja intohimon väri, joten mielestäni se sopii jopa paremmin häihin kuin valkoinen. 

Mikä on puhelimesi soittoääni? 

- Tällä hetkellä: Sisters of Mercy - Vision Thing 


pic: daysarenumbers.net

Oletko ikinä joutunut hankintojesi takia "näkkärikuurille"?

- Kyllä sitä on joskus tyhjennelty pakastinta ja syöty puuroa. Onneksi minulla on säästötili ja luottokortti hätätilanteita varten. 

Minkä kokoinen kämppä sinulla on ja miten kaikki vaatteesi/kenkäsi mahtuvat sinne? :D 

- 38,5 neliötä. On suorastaan ihme, että olen saanut tänne mahtumaan näin paljon tavaraa. Ehkä olen vain hyvä organisoimaan tai olen ymmärtänyt luopua tavaroista mitä en tarvitse. Kengät säilytän telineissä, kenkälaatikoissa, sekä pitkässä kangashyllyssä. Vaatehuone on lattiasta kattoon asti täynnä, joten kaikki neliöt ovat hyötykäytössä. Vaatiihan se vähän mielikuvista saada kaikki mahtumaan, mutta ei tämä asunto ahtaalta tunnu kaikesta tavarasta huolimatta. En nimittäin edes viihdy asunnoissa, mitkä ovat askeettisesti sisustettuja.Mikä on hiustyyppisi Fian luokittelun mukaisesti: 
http://forums.longhaircommunity.com/vbjournal.php?do=article&articleid=5 (esim. 3a C ii) Hiuskaksosia on hauska etsiä. :)-
En ole aivan varma tästä, mutta 1a F/M ii veikkaisin.


Mainitse kaksi sanontaa/klisettä. Toinen on pitänyt elämässäsi paikkansa aika hyvin, toinen ei sitten ollenkaan. - Monetkin ovat pitäneet hyvin paikkansa, mutta koitan miettiä parhaimmat.

"Sen eestään löytää, minkä taaksensa jättää"

Olen niin usein koittanut paeta menneisyyttäni, mutta aina se on eteeni jostain tupsahtanut. Myös tekemättömät asiat ovat aina edessä, joten parempi tehdä ne heti.

"Se parhaiten nauraa, joka viimeisenä nauraa"

Tämän olen todistanut niin usein elämässäni. Ihmiset, jotka ennen nauroivat minulle, pilkkasivat ja tekivät elämästäni helvettiä, elävät nyt melkoisen paskaa elämää. Onnellisia heistä ei ole yksikään tänä päivänä. Olen huomannut, että pahat ihmiset saavat lopulta aina ansionsa mukaan. Monet menestyneet ihmiset ovat ponnistaneet pinnalle todella surkeista lähtökohdista, olleet syrjittyjä ja yksinäisiä. Ehkä lopussa myös seisoo se kiitoskin ja paha saa todellakin palkkansa.

"Missä on tahtoa, siinä on tie"

Uskon, että ihminen voi saavuttaa mitä tahansa, jos sitä todella tahtoo ja haluaa. Jos jotain todella kovasti haluaa, löytää keinot saada sen, vaikka se vaatisikin paljon ponnisteluja.

"Parempi karvas totuus kuin makea valhe"

En ole koskaan sietänyt valehtelua ja pettämistä. Jos ihminen jää minulle kiinni valhestaan, hänen arvostuksensa silmissäni katoaa. Rehellisyys maan perii, on parempi sanoa asiat suoraan ja kaunistelematta, kuin keksiä hätävalheita. Olen tavannut elämäni aikana muutaman patologisen valehtelijan ja heidän elämänsä ei ole kyllä millään tasolla ihailtavaa. Itselläkin on parempi olla, kun pystyy puhumaan totta, eikä tarvitse selitellä.

Sitten sanontoja, jotka eivät olet pitäneet paikkaansa:

"Poissa silmistä, poissa mielestä"

Mietin usein menneitä, enkä tunnu pääsevän joistakin muistoistani eroon, vaikka ihminen ei enää elämässäni olisikaan millään tavalla. Luon ihmisiin aina niin syvän tunnesiteen, että sitä on mahdotonta lähes kokonaan katkaista, vaikka toinen olisikin poissa silmistä.

"Puhumatta paras"

Vaikeneminen ei ole aina kultaa. Mielestäni asioista pitää kyetä puhumaan niiden oikeilla nimillä ja suoraan. Eivät asiat ikinä selviä, jos ne vain lakaistaan maton alle.

"Vanhassa on vara parempi"

Mutta toisinaan olisi hyvä myös uudistua. Aina ei kannata tyytyä tuttuun ja turvalliseen, vaan on hyvä ottaa riskejä. Aina se ei kannata, mutta voi joskus tehdä elämästä moninverroin hauskempaa.

Siinäpä niitä oli. Toivottavasti vastaukset miellyttivät ja saa kysyä, jos joku jäi vielä ihmetyttämään. Parista aiheesta on tulossa oma postauksensa, joten jätin vastaukset sen takia lyhyiksi. Olen muuten jäljessä näissä postauksissa, mutta koitan saada nyt päiviteltyä useammin. Tuleva viikko on täynnä juoksevien asioiden hoitamista koulun, töiden ja matkan takia. Pitäisi ehtiä työhaastatteluun, kouluun, terveyskeskukseen ja pankkiin. Olen kyllä mestari hankkimaan lomallakin itselleni hirveät määrät tekemistä. Alle kaksi viikkoa WGT:n reissuunkin. Sitä on kyllä odotettu niin paljon. Toivotaan, että Islanti ei levittele enää tuhkaansa ympäri ilmatilaa.
Tulipas tästä nyt tekstipitoinen postaus, mutta joskus näinkin päin. Nyt katson valmiiksi vaatteet huomiseen työhaastatteluun ja katson, että kaikki koulu- ja työtodistukset ovat kunnossa.

Loppuun aiheeseen liittyvä biisi, koska Islanti :D

கொத்து பரோட்டா- 30/05/11

நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம்.  ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும் போது உற்சாகம் கரை புரண்டது ஒன்றும் அதிசயமில்லை. பல பட்டிமன்ற பேச்சாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள்  வந்திருந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் அவரைப் பற்றி அவரது குடும்பத்தினரின் பகிர்தல் வீடியோ க்யூட் அண்ட் ஸ்வீட். நல்ல கம்பைளிங் மீரா நாகராஜன். எனக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் ஞாபகம் வந்தது. நெடுநாளைக்கு பிறகு நான் கிட்டத்தட்ட  அரை நாளுக்கு மேல் நிகழ்வில் கலந்து கொண்டு மோகன் தம்பதியரின்  ஆசியை பெற்று வந்தேன். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா.
#############################


ரஜினியை கடைசி வரை கண்ணில் காட்டாமல் வெறும் குரலை வைத்து பூச்சாண்டிக் காட்டிவிட்டு கூட்டிப் போய்விட்டார்கள்.  அந்த குரலை ரெக்கார்ட் செய்தவர்களுக்கு வீடியோ எடுக்க எவ்வளவு நேரமாகும். இன்னும் சிலர் இது அவர் வாய்சே இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ நிஜத்தில் அவர் குரலாய் இருந்தால், அந்தக் குரலில் இருக்கும் நெகிழ்ச்சியும், அயர்ச்சியும் கொஞ்சம் கவலை கொள்வதாய்த் தானிருக்கிறது. நிச்சயம் இத்தனை மக்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது என்ற நம்பிக்கை அவருக்கு மட்டுமல்ல எனக்குமிருக்கிறது. ரஜினியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாய் நினைத்தாலே இனிக்கும், பொல்லாதவன், எங்கேயோ கேட்ட குரல், தில்லுமுல்லு போன்ற படங்களில் அவரிடமிருந்த வெர்ஸடைலிட்டியை நான் மிகவும் ரசித்தவன். எந்திரன் ஆடியோ ரிலீஸுக்கு மலேசியாவுக்கு விமானத்தில் செல்லும் போது நடிகர்கள் பேட்டி எல்லாம் இங்கே லோக்கல் ஸ்டியோவில் டப் செய்யப்பட்டது. இதில் சொல்ல வருவது என்னவென்றால் அதில் ரஜினிக்கு பேசியது மயில் சாமி.
####################################
நிதிகளின் பிடியில் தமிழ் சினிமா உலகம் என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இதோ அடுத்து சில பெயர்களை உங்கள் வாய்க்கு அவலாய் தருகிறேன். இனி விநியோகஸ்தர்கள் சங்கங்களிலிருந்து, இருக்கிற 24 கிராப்ட்டிலும் தலைமை மாற்றங்கள் வரும். அப்படிப் பட்ட மாற்றம் தான் எஸ்.ஏ.சியை பதவியை விட்டு விலகச் சொல்லிய கோர்ட் மேட்டர். எஸ்.ஏ.சி செய்தது ஞாயமில்லை என்றாலும். இதற்கு பின்னணியில் இருக்கும் கே.ராஜன், பாபுகணேஷ், கே.ஆர்.ஜி, கே.ஆர் எல்லோரும் ஜெ விசுவாசிகள். மீண்டும் தேர்தல் நடக்கும் போது இவர்கள் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்த மன்னார்குடி குடும்பம் தங்களது ஆக்கிரமிப்பை சினிமாவில் பதிக்க ஜே.ஜே டிவி பாஸ்கரன் மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது.  தலைவன் என்கிற பெயரில் ஹீரோவாக நடிக்கிறாராம். இன்னும் சில மாதங்களில் இவர்களின் ஆக்கிரமிப்பு பற்றி ஆளாளுக்கு புலம்பத்தான் போகிறார்கள். ஆனால் ஒன்று இவர்களின் ஆக்கிரமிப்புகளினால் சன் டிவியோ, ரெட்ஜெயண்டோ, தயாநிதி அழகிரியோ படம் தயாரிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இவர்களுடனே கை கோர்த்து அவர்கள் தொழில் நடத்திக் கொண்டுதானிருப்பார்கள்.
#####################################
ஹெல்மெட் அணியும் படியான கட்டாய சட்டம் ஆரம்ப நாளுக்கு முன்னமே சொதப்ப ஆரம்பித்து விட்டது. நூறு ரூபாய் ஃபைன், லைசென்ஸ் கேன்சல் என்றதை,  லைசென்ஸ் கேன்சல் எல்லாம் கிடையாது.  வெறும் அபராதம் தான் அதுவும் வெறும் ஐம்பது ரூபாய்தான் என்றார்கள். நேற்று முந்தினம் அதுவும் கிடையாது வெறும் அறிவுரைதான் என்றார்கள். கேட்டால் சட்டம் போட்டு நிர்பந்திப்பதைவிட ஹெல்மெட் அணிவதை மக்களுக்கு புரிய வைத்து வெற்றி பெறுவோம் என்கிறார்கள். இதெல்லாம் சரி.. இனி போலீஸ் காரர்களுக்கு பாடு பாதி திண்டாட்டம், பாதி கொண்டாட்டம். ஏனென்றால் ஐம்பது ரூபாய் என்றால் கட்டிங் பத்து இருபதோடு போய்விடும். அது அவர்களுக்கு திண்டாட்டம். கொண்டாட்டம் என்ன வென்றால் நிச்சயம் பத்து ரூபாய் கிடைக்கும் என்பதுதான். என்னைப் பொறுத்த வரை ஒரு சட்டம் போட்டால் அதை முழுமையாய் இம்ப்ளிமெண்ட் செய்ய முடியாதவர்கள் சட்டமே போடக்கூடாது.  இதே சட்டத்தை சென்ற ஆட்சியில் போட்ட கலைஞருக்கும் பொருந்தும். அது சரி.. கலைஞர் போட்ட சட்டம்ங்கிறதுனால்தான் மம்மி மீண்டும் தானே இந்த சட்டத்தை கொண்டு வந்தாமாதிரி கொண்டு வந்து ஃபைன் கட்டணைத்தை குறைச்சதா சொல்றாங்களே? நிஜமா?. 100-50 அய்ய்யா.. விலை வாசி குறைஞ்சிருச்சு.
####################################
இருக்கிற டாஸ்மாக்குகளையே மூட வேண்டும். முழு மதுவிலக்கு வேண்டும், என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த டாக்டர். மம்மி உயர்வகை மதுவகைகளுக்காக தனி டாஸ்மாக் என்று அறிவித்திருப்பதற்கு ஏதும் சொல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அடுத்து அங்கே போய் நிற்க வேண்டிய நிலை இருக்கலாம் என்ற யோசனையோ. எது எப்படியிருந்தாலும் புள்ளைக்கு ராஜ்யசபா எம்.பி கிடையாது. அப்புறம் எவன் குடிச்சா என்ன? குடிக்காட்டி என்ன? அங்கேயும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் எக்ஸ்ட்ராவா வாங்குவாங்களா மம்மி?
#####################################
இணையத்தின் மூலம் தன்னைவிட்டு ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து அவனது இரண்டாவது திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் ஒரு பெண். வரதட்சணை பிரச்சனையினால் தன்னை ஒதுக்கி வைத்த கணவன் ஒரு நாள் திடுதிப்பென காணாமல் போக, அவரைப் பற்றிய எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல் தவித்த அப்பெண்ணுக்கு தன் கணவன் அரபு நாட்டில் இருப்பதாகவும், வேறு ஒரு திருமணத்திற்கு பெண் பார்பதாகவும் தகவல் வர, உடனடியாய் தானும் ஃபேஸ்புக்கில் ஒரு போலியான ஐடி ஒன்றை கிரியேட் செய்து அவருடன் நட்பாகி, திருமணத்திற்கு பெண் இருப்பதாய் சொல்லி பேசி வழிக்கு வரவழைத்திருக்கிறார். அவர் தான் என்று உறுதியான பிறகு போலீஸில் அவர் மேல் புகார் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண்மணி. இச்செய்தியை நான் பேப்பரில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர் ரவணப்பன் சேட்டில் வந்து இதே செய்தியைப் பற்றிச் சொல்லி அப்பெண் அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர் என்றார். இணையம் சில பேருக்கு நல்லதும் செய்கிறது.
###################################
கணவன்: நான் ஊருக்கு போறேன் வர அஞ்சு நாளாவும்
மனைவி; நல்லது சீக்கிரம் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கணுமின்னு திடீர்னு வந்து நிக்காதீங்க. அப்புறம் நான் கொடுக்கிற சர்ப்ரைஸை தாங்க முடியாது.

டெலிபோன் பூத்தில் ஒருவன் இருபது நிமிடங்களாய் இருக்க, அதை பார்த்த வெறுப்படைந்த வெளியில் நின்றவன் “சார். நானும் பாக்குறேன் இருபது நிமிஷமா ஏதும் பேசாம போனை வச்சிட்டு என்னதான் செய்றீங்க? நாங்க காத்திட்டிருக்கோமில்ல?”
”நான் என் பொண்டாட்டிக் கிட்ட பேசிட்டிருந்தேன்.” என்றான்.
#########################################
தத்துவம்
நம் சிந்தனையை பேச்சாக்கும் ஒரு வஸ்து எதுவென உங்களுக்கு தெரியுமா?
ஆல்கஹால்.

நாம் பன்சுவலாய் இருப்பதில் உள்ள ப்ரச்சனை என்னவென்றால் அதை பாராட்டுவதற்கு யாருமிருப்பதில்லை. ப்ராங்கிளின் பி. ஜோன்ஸ் சொன்னாராம்
####################################
ப்ளாஷ்பேக்
இதுவும் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்திலிருந்துதான். அற்புதமான மெலடி. இப்படி அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் படம். மோகன்லாலின் கேரியரில் உச்சபட்ச உயர்வுக்கு அடிகோலிட்ட படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் வரும் அத்துனை பாடல்களும் க்ளாஸிகல் ஹிட். இந்த பாடலை தவிர எம்.ஜி. ஸ்ரீகுமார் பாடிய நாதமயூரம் என்ற பாடல் அட்டகாசம்.
################################
மிஜிக்
நம் புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஆங்கிலப் பாடல்களின் மேல் ஈர்க்கப்பட்டு, அதன் இன்ஸ்பிரேஷனில் ட்யூன் போட முயற்சி செய்து போகிற போக்கில் அதே பாடலை போட்டு விடுவது உண்டு. அப்பாடல்களின் ஆக்கிரமிப்பு அப்படி. இந்த வாரம் மிஜிக்கில் நம்ம. ஜி.வி.பிரகாஷ்குமார்.
 
################################
மை கார்னர்


################################################# 
அடல்ட் கார்னர்
ஒருநாள் பத்து வயசு பையன் நைட்ல தூக்கம் வராம எழுந்து உக்காந்தான். அப்போ அவன் அம்மாகாரி அப்பாவுடன் கேரளா ஸ்டைலில் மேட்டர் செய்து கொண்டிருக்க, செக்ஸ் பத்தி எதுவும் தெரியாததுனால அம்மா என்ன செய்யிறாங்கன்னு அவனுக்கு புரியல. மறுநாள் காலையில அம்மாகாரிகிட்ட, 'அம்மா நேத்து நைட்டு அப்பா வயித்து மேல உக்காந்து ஏம்மா குதிச்சிட்டு இருந்த?' என்று கேட்டான். பையன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தயங்கிட்டு அம்மாகாரி, 'அது வந்து, உங்க அப்பாவுக்கு தொப்பை பெருசாகி போச்சா, தினமும் இப்படி அவரு வயித்து மேல உக்காந்து குதிச்சா தொப்பை குறையுமாம். அதான் குதிச்சேன்' என்றாள். உடனே பையன், 'அதுக்கு சான்சே இல்லைம்மா.. நீ ஆபிஸ்ல இருந்து வரதுக்குள்ள பக்கத்துக்கு வீட்டு ஆண்டி வந்து ஊதி அப்பா வயித்தை பலூன் மாதிரி பெருசாக்கிடுறாங்க' என்றான்.

###########################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Saturday, May 28, 2011

குறும்படம் – மிட்டாய் வீடு

இப்படமும் ஏற்கனவே கொத்து பரோட்டாவில் அறிமுகப்படுத்தியதுதான். நாளைய இயக்குனர் முதல் பகுதியில் பைனலில் கலந்து கொண்ட படம். பாலாஜியிடம் ஒரு ப்ள்ஸ் என்னவென்றால்  அவரின் திரைக்கதைகள் பெரும்பாலும் கொஞ்சம் க்ளாஸாக, நகைச்சுவை ஊடுருவியபடி இருக்கும் அதில் இப்படமும் தவறவில்லை. அதற்கு அந்த ஓப்பனிங் சீனே சாட்சி. அருமையான கான்செப்ட். க்யூட் எண்ட். நிச்சயம் எல்லோரும் பார்த்து என்ஜாய் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Friday, May 27, 2011

எத்தன்

Eththan-movie-Stills copy நிதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்ததாய் சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு படமாய் வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி தயாரிப்பாளரிடமிருந்து மற்றொரு படம். போன வாரமே ரிலீஸாக இருந்தது சுமார் 80 லட்சத்திற்கும் மேலாய் டிபிசிட் காரணமாய் ரிலிஸாகாமல் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிற படம். டிபிசிட் என்றால் என்ன என்பவர்களுக்கு சினிமா வியாபாரம் நூலை படிக்குமாறு சொல்லிக் கொள்கிறேன். (விளம்பரம்)


விமலும், சனுஜாவும் ராத்திரியோடு ராத்திரியாய் ஊரைவிட்டு ஓடி வந்து வேறொரு ஊரின் பஸ் நிலையத்தில் ஒருவரிடம் மாட்டுகிறார்கள். அவர்களைப் பற்றிய ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. பிஸினெஸ் பண்ணுகிறேன் பேர்விழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கி ஒளிந்தலையும் விமலின் அப்பா ஒரு அரசு வாத்தியார். நல்லாசிரியர் விருது பெற்றவர். எந்த விதமான பொருப்புமில்லாமல் அலையும் விமலின் பார்வையில் சனுஜா விழுகிறார். இருவருக்கும் காதல் என்று ஏதுமில்லாமல் ஒரு கட்டத்தில் சனுஜாவின் செயின் விமலிடம் மாட்டிக் கொள்ள, அதை வைத்து சனுஜாவை கரெக்ட் செய்யலாம் என்று நினைத்திருக்கும் போது, நண்பனின் அப்பாவுக்கு மிகப் பெரிய ப்ரச்சனை ஒன்று வர, அந்த நகையை அவளுடய வில்லன் மாமனிடமே அடமானம் வைக்க, ப்ரச்சனை ஆரம்பிக்கிறது.  அது எப்படி முடிகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.
Eththan-movie-Stills-9 copy லாஜிக் என்ற ஒரு வஸ்துவை நம் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டால் நகைச்சுவையாய் படம் பரபரவென ஓடுகிறது. அதிலும் கடன் கொடுத்த சிங்கம்புலியிடம் விமல் மிமிக்கிரி செய்யும் காட்சி, அப்பாவின் குரலில் பேசி பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய விமல் செய்யும் மிமிக்கிரி தகிடுதத்தம் என்று பாதி படத்திற்கு இப்படியே ஓடி பொழுது போகிறது. திடீரென சீரியஸாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போதுதான் தொய்ந்து விழுகிறது திரைக்கதை. நடுநடுவே டெரர் வில்லனாய் சனுஜாவின் முறை மாமன். அவனைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் சனுஜாவும், அவளது அம்மாவும். ஏன் என்றால் சனுஜாவின் அப்பாவை தள்ளி கொலை செய்ததே மாமன் மகன் வில்லன் தானாம். ஏதோ லாலிபாப்பை பிடுங்கிக் கொண்டான் என்பது போல ஒரு குட்டி ப்ளாஷ் பேக்குகிறார்கள். காமெடி. அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் வெறும் காமெடி என்ற மாத்திரத்தில் எடுத்துக் கொண்டால் எல்லாம் நன்மைக்கே.

விமலுக்கு ரொம்பவும் மெனக்கெடாத இம்மாதிரி கேரக்டர்கள் பழகிப் போய் அல்வா போல வழுக்கிக் கொண்டு செய்கிறார்.  ஆனால் நடிப்பதற்கு என்று பெரியதாய் ஏதுமில்லை. சனுஜா அழகாய் இருக்கிறார். அந்த உதட்டையும், கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி முத்தமிட வேண்டும் போல இருக்கிறார். போன படத்திற்கு இந்த படம் ஊதி விட்டார் கவனிக்கவும்.  மயில்சாமி ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். எம்.எஸ். பாஸ்கர் பழைய தேங்காய் சீனிவாசனின் வாடையில் டபுள் மீனிங் பேசுகிறார்.
Eththan-movie-Stills-5 copy ரமேஷின் ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. தாஜ்நூரின் இசை படத்தின் போக்கிற்கு பெரிய இடைஞ்சலாய் இருக்கிறது. இரண்டாவது பாதியில் க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பாடல் படு சொதப்பல். காமெடிதான் பிரதானம் என்று ஆகிவிட்ட பிறகு லாஜிக்காக பாட்டெல்லாம் போட்டுத்தான் கதையை சொலல் வேண்டுமா? முடியவில்லை. எல்லா பாடல்களும் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கதை, திரைக்கதை, வ்சனமெழுதி இயக்கியவர் சுரேஷ். ஆங்காங்கே வரும் ஒன்லைனர்களும், சிங்கம்புலி வரும் காட்சிகளூம் இண்ட்ரஸ்டிங். வில்லனுக்கும், ஹீரோவுக்குமான காட்சிகள் மிகக் குறைவே. அதனால் பெரிய கன்பர்ண்டேஷன் ஏதுமில்லையாதலால் சுவாரஸ்யம் கூட வில்லை.  சீரியஸாய் வரும் காட்சிகள் கூட முன்னாள் வரும் லாஜிக் மீறிய காமெடி காட்சிகளால் ரசிக்க முடியவில்லை. உதாரணமாய் அப்பாவும், மகனும் பேசிக் கொள்ளும் காட்சி. அதே போல் க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம்  படு சினிமா. போலீஸ், வக்கீலுக்கு எல்லா க்ரெடிட் கார்டேகிடையாது என்பது இயக்குனரே உங்களுக்கு தெரியாதா?. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி சிங்கம் புலியிடமே கடன் வசூல் செய்ய விமல் வருமிடம் அதகளம். மொத்தத்தில் எத்தன் என்ற பெயருக்கு ஏற்றார்போல் இல்லாவிட்டாலும் தப்பிச்சிருவானு தோணுது.
எத்தன் – காமெடி எஸ்கேப்

Thursday, May 26, 2011

ஃபாதர் கேரக்டர்

”ஹலோ.. சங்கர்நாராயணன் சாருங்களா?”

“ஆமாம்”

“.. ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பேசுறேன். டைரக்டர் சார் தான் நம்பர் கொடுத்தாரு”

“சொல்லுங்க”


“நல்ல ஃபாதர் கேரக்டர் இருக்கு உடனடியாய் உங்க கிட்ட பேசி டேட் வாங்கச்
சொன்னாரு”

”டைரக்டரே சொன்னாரா?”

“அட.. ஆமாங்க.. நல்ல கேரக்டர்.. த்ரூவோட்டா வரும். முக்கியமா ஒரு விஷயம் வேற படம்.. சீரியல் ஏதாவது போய்ட்டிருக்கா?”

“ம்.. இப்போதைக்கு ஏதுமில்லை.. ஏன்?”

“ஒண்ணுமில்லை.. மீசையெடுக்கணும்னு டைரக்டர் சொன்னாரு..”

“என்னாது மீசையெடுக்கணுமா? சார்.. ஏற்கனவே நான் பாதர் கேரக்டர்னு யோசிச்சிட்டிருக்கேன்.. இதில நீங்க மீசை வேற எடுக்கணுமின்னு சொல்றீங்க. எதுக்கு யோசிச்சு சொல்லட்டுமா?”

”என்னா சார்.. மத்த கேரக்டர்னா கூட வேற யாரையாவது போட்டு மாத்திருவாங்க.. ஆனா ஃபாதர் கேரக்டர்னா சீரியல் பூராவும் வரும். நல்லா யோசிச்சிக்கங்க.. அதும் டைரக்டரே உங்களைத்தான் போடணும்னு சொல்லிட்டாரு.. ”

”ம்ம்.. சரி.. டைரக்டரே சொல்லிட்டாருன்னு சொல்றீங்க.. ஓகே..  வர்றேன். என்னைக்கு டேட்டு..”

“இப்போதைக்கு மூணு நாளு.. 26, 29, அடுத்த மாசம்3 ஓகேயா..? அப்புறம் சம்பளம் என்னன்னு சொல்லிட்டீங்கன்னா எல்லாம் முடிஞ்சிரும்”

” என்னண்ணே உங்களூக்கு தெரியாதா?”

“சரி..ரெண்டுக்கு முடிச்சிக்கிறேன்”

“ஓகேண்ணே.. நல்ல கேரக்டர் தானே.. எத்தனைப் பொண்ணு எனக்கு?”

“அதெல்லாம் எனக்கென்ன தெரியும்.  டைரக்டர் சொன்னாரு கூப்பிட்டேன். ஓகேவா..அதெல்லாம் டைரக்டர் கிட்ட கேட்டுக்கங்க..”

“சரி காஸ்ட்யூம் ஏன்ன ஏதுன்னு அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை விட்டு சொல்லச் சொல்லுங்க.. போன வாட்டி குலவிளக்கு சீரியல்ல சொல்லாமப் போயி கன்பியூஸ் ஆயிருச்சு.”

“ஆ.. நீங்க ஏதும் எடுத்துக்க வேணாம். இங்க காஸ்ட்யூமர் கிட்ட சொல்லியிருக்காங்கலாம் ஓகே.. அதனால்.. வெறும் கைய வீசிட்டு வந்திருங்க.. ஓகே.. டேட் கன்பார்ம் பண்ணிக்கட்டுமா?”

“ஓகேண்ணே.. கன்பார்ம்”

மனதினுள் ஒரே குழப்பமாய் இருந்தது. இவ்வளவு சின்ன வ்யதில் ஃபாதர் கேரக்டருக்கு கமிட்டாவது என்னவோ போலிருந்தது. அடுத்த நாள் லொகேஷன் பற்றிச் சொன்ன போது கூட நான் யோசிக்கவேயில்லை. மெட்டி ஒலி போல நாலைந்து பெண்களுக்கு தகப்பன் என்றால் என்ன செய்வது. ரொம்பவும் வயசான கேரக்டரில் நடிக்க வேண்டியிருக்குமே என்றெல்லாம். யோசித்துக் கொண்டே லொகேஷனுக்கு சென்றதும், தான் தெரிந்தது ஏன் என்னை காஸ்ட்யூம் எடுத்துவரச் சொல்லவில்லை என்று.. அவ்வ்வ்வ்வ்.

அப்படி என்ன நடந்திச்சுன்னு இங்க பாருங்க..

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Wednesday, May 25, 2011

404- அமானுஷ்யங்களின் தேடல்

404இந்தி திரையுலகம் பீடு நடைப் போட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய வந்துள்ள படம்.பிரவல் ராமன் இயக்கியுள்ள படம். இவரின் முந்தைய படங்களான தர்னா மனா ஹே, காயப், போன்ற படங்கள் கொடுக்காத ஒரு தாக்கத்தை இப்படம் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


404 என்பது டிம்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலில் இருக்கும் ஒரு அறையின் எண். கல்லூரி சீனியர் மாணவர்களின் ராகிங் ப்ரச்சனையால்  தூக்கு மாட்டிக் கொண்டு கெளரவ் எனும் மாணவன் தற்கொலை செய்து கொள்ள அதனால் அந்த அறையில் ஆவி நடமாட்டம் இருப்பதாய் அரசல் புரசலாய் பேசப்பட்டதால் அந்த அறை மூன்று வருடங்களாய் பூட்டப்பட்டிருக்கிறது. அப்போது அங்கே முதலாண்டு படிக்க வரும் அபிமன்யூ எனும் மாணவன் தனக்கு பேய் போன்ற பாராநார்மல் விஷயங்களில் நம்பிக்கையில்லை எனவே அந்த அறையை தாருங்கள் என்று கேட்டு அங்கேயே தங்குகிறான்.
404_1 அபிமன்யூவை உற்சாகப் படுத்தி அவனுக்கு ஆதரவாய், பேய் போன்ற விஷயங்களே இல்லை என்பதை நிருபிக்க  தீஸிஸ் எழுதிக் கொண்டிருக்கும் பிரபல சைக்யாட்ரிஸ்ட், ப்ரொபசர் அனிருத். அவரின் கூற்றுப்படி பேய் போன்ற பயங்கள் எல்லாம் ஹலூசினேஷன் என்றும், நம் மூளையில் நாமே உருவாக்கிக் கொள்வது என்பதை நிருபிப்பதுதான்.

பேய் போன்ற பயங்களே இல்லாத அபிமன்யூவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சீனியர் மாணவர்களின் ராகிங்கின் மூலமும், அவனது அறையில் நடக்கும் சில அமானுஷ்யங்களும் சேர்ந்து குழம்பி பை போலர் டிஸ்ஸாடர் எனும் மனநோயில் வீழ்கிறான். அறையில் இறந்த கெளரவுடன் அவன் தனியாக பேசுவதும், அவன் தம்முடனேயே இருக்கிறான் என்று எண்ணும் அளவிற்கு நிஜத்திலும் சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன.
4041 இவையெல்லாம் அவனது மூளையில் பதியப்படுகிற விஷயங்கள் என்றும் அம்மாதிரி விஷயங்கள் ஏதுமில்லை என்று  நிருப்பிப்பதாய் அபிமன்யூவிடம்  சொல்லி தன் திசீஸை முடிக்கும் அவருக்கும் நமக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியான க்ளைமாக்ஸ் காத்திருக்கிறது.

படத்தின் டைட்டில் காட்சியிலேயே இது வழக்கமான படமில்லை என்று நம்மை தயார் செய்துவிடுகிறார்கள். படத்தின் திரைக்கதை படம் பார்க்கும் ஆடியன்ஸின் அமானுஷம் பற்றிய நம்பிக்கைகளை ஒட்டிய கேள்விகளை தமக்குள்ளே கேட்டுக் கொண்டு அதற்கான விடைகளை தேடும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பதில் அவர்கள்து புத்திசாலித்தனம் தெரிகிறது.  சவிதா சிங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அத்துனை மூட்களையும் நமக்கு தருகிறது. முக்கியமாய் பின்னணியிசையமைத்த இமாட் ஷா பாராட்டப்பட வேண்டியவர்கள்.
4043 ப்ரொபசராய் வரும் மும்பை மேரி ஜான், டோம்பிவெல்லி பாஸ்ட் போன்ற படங்களின்  இயக்குனர் நிஷிகாந்த் காமத்தின் நடிப்பும் பாடி லேங்குவேஜும் அருமை. மிகவும் கண்ட்ரோல்ட் ஆக்டிங் என்றே சொல்ல வேண்டும்.  ஓரிரு காட்சிகளில் இவரே ஒரு பைபோலர் சிண்ட்ரோமில் அவதிப்படுபவரா? அல்லது அந்நிலையிலிருந்து அமானுஷ்யங்களை ஆராய்பவரா என்று சிறு குழப்பம் வரத்தான் செய்கிறது.  அபிமன்யூவாக வரும் ஆரோரா, அந்த மூன்று சீனியர் மாணவர்கள், ஹாஸ்டல் வார்டனாக வரும் இயக்குனர் சதிஷ் கவுஷிக் என்று சிறு சிறு கேரக்டர்களுக்கும் முக்யத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படம் என்பதால் காலேஜ் ஹாஸ்டல் என்பது கொஞ்சம் கூட சாட்சியாய் மாணவர்கள் கும்பல் ஏதுமில்லாமல் இருப்பது உறுத்துகிறது.

குறையென்று சொன்னால் திரைக்கதையின் வேகத்தைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் படம் ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் வகை என்பதால் அதிகம் சைக்காலஜி ப்ரச்சனை பற்றி பேச வேண்டியிருப்பதால் தவிர்க்க முடியாமல் மெதுவாக நகர்கிறது. ஆனால் அக்குறையை கடைசி அரை மணிநேரத்தில் சரி செய்து விடுகிறார்கள். வசனங்களில் நிறைய விஷயங்களை உறுத்தாமல் சொல்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் நாம் உறைந்து போய் நிற்பதை மறுக்க முடியாது. ஒரு வித்யாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜெனரில் ஒரு புத்திசாலித்தனமான திரைக்கதையோடு அளித்த இயக்குனர் பிரவல் ராமனை பாராட்ட வேண்டும்.

404 -  A Movie For Intelligent Film Lovers
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Tuesday, May 24, 2011

Veera

ravi-teja-veera-telugu-movie-stills-4-todayandhra-com தெலுங்கு திரையுலகில் இந்த சம்மருக்கு வந்த பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் அமையவில்லை. ஜுனியர் என்.டி.ஆரின் சக்தி,  ராணாவின் நீ நா ராக்‌ஷஷி, என்று ஊத்தி மூடிக் கொள்ள, நாக சைதன்யாவின் 100% லவ் மட்டுமே சூப்பர்ஹிட். அப்படி வெளிவரும் பெரிய பட்ஜெட் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வீரா. மிரபாகாயின் வெற்றியும், புதிதாய் மாஸ் மஹாராஜா என்ற பட்டத்துடன் அவதரித்திருக்கும் ரவிதேஜாவின் படம் என்பது மேலும் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

Veera-Telugu-Movie-Stills-0v017 வழக்கமாய் ரவிதேஜா படங்களில் வரும் மிக லேசான லைன். அடித்து தூள் கிளப்பும் காமெடி, ரத்தம் வழிந்தோடும் ஆக்‌ஷன் என்று எல்லா வித மசாலாக்களோடு, ரவிதேஜாவுக்கு ஒரே படத்தில் ரெண்டு விதமான கேரக்டர்கள் கொடுத்து அசத்த வேண்டும் என்று இயக்குனர் ஆசைப்பட்டிருப்பார் போலருக்கு. படம் ஆரம்பிககும் போதென்னவோ.. கொஞ்சம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போகப்போக பொறுமை இழக்கச் செய்கிறது. ஒரு போலீஸ் ஆபீசருக்கு கமிஷனரே ஒரு பாடிகார்ட் ஏற்பாடு செய்வாரா? என்பது போன்ற அசுரத்தனமான லாஜிக்கைப் பற்றி பேசாமல் இருந்தால் மேலும் தொடரவும்.
veera-movie-stills-53-e1305865495355 ஏற்கனவே என்.டி.ஆர் முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை ஊரைக் காப்பாற்றும் நல்லவராய், வல்லவரான கேரக்டர் ஆனால் ரவிதேஜாவுக்கு வேலைக்காகவில்லை. அதுவும் அந்த ப்ளாஷ்பேக்கில் காஜல் அகர்வாலோடு கபடி ஆடுவது பார்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர. படத்திற்கு வேலைக்காகாது. அக்காட்சியில் காஜலின் தொப்புளைத் தவிர பெரிதாய் ஏதும் எக்ஸ்போஸ் செய்யவில்லை. என்ன ஆட்டம் ஆடுகிறார்கள். எங்க இளைய தளபதி விசயின் அப்பா ஒரு படத்தின் விஜயசாந்தி கபடி ஆடும் காட்சி எடுத்திருப்பார் அதில் கால் தூசு பெறாது இந்த கபடி. இதற்கு நடுவில் ஊரில் இரண்டு வில்லன், அவனோட மாமன் வில்லன், மாமன் வில்லனின் மனைவி சொர்ணக்கா போலஒரு வில்லி என்று மண்டை காய்கிறது.

லைவ்வில் தங்கச்சி பாசம். அங்கொருவில்லன், போலீஸ் ஆபீஸர் ஷாம். அதற்கு ஒரு கதை என்று சொதப்பியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு விஷயம். ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி இம்சித்ததைப் போல இம்சிக்கவில்லை. ப்ரம்மானந்தத்தின் காமெடி எடுபடவில்லை. டாப்ஸி நாலு பாட்டுக்கு ஆடுகிறார். ப்ளாட்டாக இருக்கிறார். இருந்தாலும் அந்த சுருள் முடியும் உதடுகளும் இம்சிக்கின்றன.
Veera = Bore da
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Monday, May 23, 2011

சாப்பாட்டுக்கடை- அக்பர் மெஸ்

அக்பர் மெஸ் என்றதும் ஏதோ தலைவாழை இலைப் போட்டு மதிய உணவு  போடும் உணவகம் என்று நினைத்து விடாதீர்கள். அக்பர் மெஸ் என்பது ஒரு பிரியாணிக் கடை. சென்னை செண்ட்ரலிலிருந்து வந்தால் மாநகராட்சி கட்டிடத்திற்கு வலது பக்கமாய் திரும்பினால் பெரியமேட்டிக்கு போகும். அங்கே நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே இருக்கும் மசூதிக்கு அருகில் ஒரு சிக்னலிருக்கும். அங்கே இடது பக்கமாய் திரும்பினால் இரண்டாவது இடது தெருவின் உள்ளே நுழைந்தாலே சும்மா வாசனைப் மூக்கைத் துளைக்கும்


Photo0213 ஒரு சின்னக்கடை. சுமார் இருபது பேர் மட்டுமே உட்காரக்கூடிய இடம். பேப்பர் வாழையிலையில் தான் பிரியாணி சர்வ் செய்யப்படும். அந்த இடத்திலேயே ஒரு மெகா சைஸ் அண்டாவிலிருந்து பிரியாணி எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு சுமார் மூன்று பேர்கள் அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டேயிருப்பார்கள். அது தவிர பார்சலுக்கென்று தனிக் வரிசை. அதில் எப்போதும் பத்து பேர் நின்று கொண்டிருப்பார்கள் தூக்குச் சட்டியோடு.  லோக்கல் ஆட்கள் பார்சலை இங்கே கட்டிக் கொண்டு போவதைவிட இப்படி வீட்டிலிருந்து தூக்குச் சட்டியில் கொண்டு போவதையே விரும்புகிறார்களாம்.
Photo0212 பிரியாணியைத் தவிர வேறு சிக்கன்,மட்டன் சாப்ஸ், மற்றும் சில சைட்டிஷ்களிருக்க, கத்திரிக்காய் சட்னியையும், வெங்காயப்பச்சிடியையும் போட்டவுடன். இரண்டு ப்ளேட்டுகளில் நல்ல மட்டனுடன் ப்ரியாணி பரிமாறப்பட, அதைப் பார்த்து அட இவ்வளவை எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சா? சாப்ட்டப்புறம்தான் தெரியும். அது பத்தாது போலருக்கேன்னு. அவ்வளவு அருமையான சுவை. அதிக மசாலாயில்லாமல், அதன் சுவையை பற்றி எழுதிச் சொல்ல முடியாது. அனுபவிச்சு சாப்பிட்டுப் பார்க்கணும். இந்த பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? வழக்கமா பிரியாணி சாப்டப்புறம் வயிறு திம்முனு இருக்கும். ஆனா இங்க அதுக்கு சான்ஸேயில்லை. ஒரு மணிநேரத்தில க்ளீனா ஜெரிச்சு. அடுத்தது எப்போன்னு வயிறு கேட்கும் நிச்சயம் ஒரு முறை போய் வாங்க..

Sunday, May 22, 2011

கொத்து பரோட்டா-23/05/11

புதிய தலைமை செயலகத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்று ஒரு விளக்கத்தை ஜெ அளித்துள்ளார். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஏதோ அவங்களுக்கு சரிபடலைப் போலருக்குன்னு நினைக்கிறாப்புல இருந்தாலும். உள்குத்தாய் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ட்ராபிக் ப்ரச்சனை.  எதிர்காலத்தில் அங்கு பல பாலங்கள் வரவிருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நிச்சயம் ஏற்படும் என்றும், அது மட்டுமில்லாமல் எதிரே இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வியாபார ஸ்தலமான ரிச்சிதெரு வியாபாரிகளுக்கு ப்ரச்சனையாக இருக்கிறது என்றும், இன்னும் பல இடங்களில் லிப்ட் கூட சரி வர பிக்ஸ் செய்யாமல் இருப்பதாகவும். இரண்டாம் கட்ட கட்டுமானம் முடிந்தால்தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும், இங்கு தலைமைசெயலகத்தை மாற்றியதால் சுமார் 30 கோடி பணம் வேஸ்ட்டாகியிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்குமே இரண்டாவது கட்டகட்டுமானம் முடிந்தவுடன் தான் அங்கு மாறிக் கொள்வதாய் சொல்லவேயில்லை. இரண்டு கிலோமீட்டர் தூரம் கோப்புகளை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் வருவதால் மக்கள் பணி கெட்டுப் போகும் என்று சொல்லியிருப்பது சரியே.. ஆனால் கட்டிடத்தை உடனடியாய் கட்ட முடிந்த அரசாங்கத்தினால் இதை உடனே செய்ய முடியாதா?
####################################


கனிமொழி கைது சமாச்சாரம் பல பேருக்கு பல விதமான ரியாக்‌ஷன்களை கொடுத்திருக்கிறது.  சில பேர் சந்தோஷப்படுகிறார்கள்.  கடவுள் இருக்கான்யா? இல்லாட்டி பொம்பளைன்னு பாக்காம அம்மாவை உள்ள தள்ளினாங்க இல்ல அதுக்கு பலன் இப்ப கிடைச்சிருக்கு என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கென்னவோ கனிமொழியின் கைதைவிட மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் நிலையை நினைத்துத்தான். ஏனென்றால் மாறன் சகோதரர்களால் தூக்கியடிக்கப்பட்டு சதி செய்து வெளியேற்றப்பட்ட அவரை வேண்டுமென்று கலைஞர் டிவி ஆரம்பித்தவுடன் அழைத்து வந்துவிட்டு, பின்பு கண்கள் பனித்து குடும்பம் சேர்ந்ததும், ராத்திரியோடு ராத்திரியாய் மாறன் சகோதரர்களால் அடிக்கப்பட்டு, பின்பு வெறும் கையெழுத்துப் போடு நிர்வாக இயக்குனராக இருந்தவரை சம்பந்தமேயில்லாமல் உள்ளே தள்ளியிருப்பதை நினைத்து என்ன சொல்வது?. அன்று ராஜாவை கை கழுவி விட்டவர்கள் இவரையும் கனிமொழிக்காக கைகழுவி விடுவாரக்ள். ம்ஹும். இவர்களை நம்பினால் கைவிடப்படுவர் என்பது தெரிந்த விஷயம்தானே.
##################################
படித்ததில் பிடித்தது
ஆயிரம் கதவுகள் திறக்கட்டும் என்ற ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய நாவலை நண்பர் தாமுர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனார். ஸ்டெல்லாபுரூஸ் இதை திரைப்படமாக எடுக்க எண்ணி வைத்திருந்த கதை இது. பின்பு அது சாத்யப்படாமல் நாவலாய் எழுதினாராம். இதை திரைக்கதையாக்கினால் நிச்சயம் ஒரு வித்யாசமான படம் கிடைக்கும் என்று தாமு சொன்னார். படித்துவிட்டு யோசித்தால் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படம், மனித மனங்களின் இன்னொரு பக்கத்தை காட்டக்கூடிய படமாய் அமையும் என்று தோன்றியது. என் வரைக்குமான ஒரு ஒன்லைனை எழுத அரம்பித்திருக்கிறேன்.
##################################
பாகிஸ்தான் தீவிரவதி அஜ்மல் கஸாப்பை தூக்கிலடத் தயார் என்று அறிவித்த மம்மு ஜாலட் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாராம். கஸாப் உசிரு கெட்டி போலருக்கே.. ம்ஹும்.
###################################
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ட்ராப் என்பது உங்களுக்கு பழைய விஷயமாய் இருக்கலாம். ஆனால் நான் சொல்லப் போகும் விஷயம் உங்களை துணுக்குறச்செய்யும். இது வரை பொன்னியின் செல்வனை எடுக்க விரும்பிய அத்துனை பேருமே எடுக்க முடியாமல் ஏதாவது ஒரு ப்ரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் எம்.ஜி.ஆர். இதை படமாக்க எண்ணி அது முடியாமல் கைவிட்டார். அதன் பிறகு கமல் அதை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்று முனைந்து பின்பு பட்ஜெட் அது இதுவென பல காரணங்களால் ட்ராப்பாக. அடுத்து அதை டிவி சீரியலாய் எடுக்க முடிவு செய்து சன் டிவியில் பிரபலமாய் இருந்த ஜி.டி.என் நெட்வொர் பெரிய படோடோபமான பூஜையுடன் ஆரம்பித்தது. பூஜைக்கே ரத, கஜ, துரத பரிவாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அதே நாளன்று இன்னொரு சேனலிலும் அதே பொன்னியின் செல்வனுக்கு பூஜை போடப்பட்டது.  கடைசியில் இரண்டுமே ஷூட்டிங் போகாமலேயே டராப் ஆனது. அதன் பிறகு இன்னொருவர் அதையே சின்ன பட்ஜெட்டில் செய்கிறேன் என்று ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அபீஸில் ஆரம்பித்து ஒர் ஷெட்யூலில் முடித்துக் கொண்டார்கள்.  பின்பு கொஞ்ச நாள் வரை யாரும் அதை கையிலெடுக்காமல் இருக்க, கலைஞர் டிவி ஆரம்பித்தவுடன் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தயாரிப்பில், விடாது கருப்பு புகழ் நாகா இயக்க மீண்டும் பொன்னியின் செல்வன் எடுக்க ஆரம்பித்து இரண்டு மாதம் ஷூட்டிங் போய் அதுவும் நின்று விட்டது. இப்படியிருக்க கடைசியாய் மணிரத்னமும் கைவிட. மீண்டும் அதை மக்கள் தொலைக்காட்சியில் சீரியலாக்க போகிறேன் என்று கும்பல் கிளம்பியிருக்கிறது. எனக்கு தெரிந்து பொன்னியின் செல்வனை மாரிமுத்து என்று நினைக்கிறேன். நாசர் நடிக்க மேடை நாடகமாக்கியது மட்டுமே வெற்றியடைந்திருக்கிறது. எதுனா காத்து கருப்பு தோஷம் இருக்குதோ?
#######################################
ப்ளாஷ்பேக்
ஜேசுதாஸின் காந்தர்வ குரலில் ரவீந்திரனுடய இசையில் சூப்பர் ஹிட் பாடல். ஹிஸ் ஹைன்ஸ் அப்துலல என்ற படத்திலிருந்து. அற்புதமான கர்நாடக இசையின் அடிப்படையில் இசையமைக்கப்பட்ட பாடல். கேட்டால் கேட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.  கவுதமியும், மோகன்லாலும் அவ்வளவு க்யூட்டாக இருப்பார்கள் இப்படத்தில். இனிமையான மெலடி உங்களுக்காக.

################################### 
கேர்ள்ப்ரெண்டு: எங்க போறீங்க? யாரோட? எப்படி போறீங்க? எதை கண்டுபிடிக்க? ஏன் நீங்க மட்டும்? நீங்க போயிட்டீங்கன்னா நான் என்ன செய்வேன்? நானும் வேணுமின்னா கூட வரட்டுமா? எப்ப வருவீங்க? எங்க தங்குவீங்க? என்னை மிஸ் பண்ணுவீங்க தானே?

கொலம்பஸ் ; நான் ஆணியே புடுங்கலை.

ம்ஹும் இப்படி ஒரு கேர்ள் ப்ரெண்டு மட்டும் இருந்திருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும். அமெரிக்காவையே கண்டு பிடிச்சிருக்க மாட்டார். ஒலகத்திற்கும் ஒரு நாட்டாமை இலலாது போயிருக்கும். எல்லாத்துக்கு ஒரு குடுப்பினை வேணும்.
##################################
என் கார்னர்
#################################
அடல்ட் கார்னர்
ப்ளைட் விரைவில் கிராஷ் ஆகப் போகிறது என்று பைலட் அறிவிக்க,  அமெரிக்க பெண் உடனடியாய் மேக்கப் போட, அழகாய் முகமிருந்தால் நிச்சயம் ரெஸ்க்யூ படை தன்னை உடனடியாய் அடையாளம் கண்டுபிடித்து காப்பாற்றுவார்கள் என்றாள். ப்ரெஞ்சு பெண் தன்னுடய ப்ராவை கழட்டி, அழகான மார்பகங்களை பார்த்து தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று கூற, அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த ஆப்பிரிக்க பெண் தன்னுடய பேண்டீஸை அவிழ்த்து விட்டு, உங்களுக்குகெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. என்னைத்தான் அவர்கள் காப்பாற்றுவார்கள். ஏனென்றால் ப்ளைட் க்ராஷ் ஆனதும் உடனடியா அவர்கள் தேடுவது ப்ளாக் பாக்ஸைதான் என்றாள்.

Saturday, May 21, 2011

குறும்படம்- போஸ்டர்

கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Friday, May 20, 2011

கண்டேன்

kandeen பிரபுதேவாவின் உதவியாளர் ஏ.சி.முகில் இயக்கியுள்ள முதல் படம். போஸ்டரில் சாந்தனு, ஹீரோயின் படத்துடன் எல்லாவற்றிலும் சந்தானத்தின் படத்தை போட்டிருந்தார்கள். முழுக்க, முழுக்க சந்தானத்தை நம்பியே வெளி வந்திருக்கும் படம் என்று தெரிந்தது.

தாத்தா கிராமத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்து கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்ட, அவரிடம் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாய் சொல்லிவிடுகிறார் சாந்தனு.  முப்பது நாளுக்குள் காதலியை கூட்டி வரவில்லையென்றால் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் காதலியை தேடி அலைகிறார் சாந்தனு. ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிய சாந்தனு அவளை இம்ப்ரஸ் செய்ய, குருடன் என்று பொய் சொல்லி காதலிக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு தெரிந்து விடுகிறது. பின்பு காலில் விழுந்து எல்லாம் இழந்த காதலை பெற, கல்யாணம் எல்லாம் நிச்சயமாகிவிடுகிற நேரத்தில் ஒரு சண்டையில் நிஜமாகவே கண் போய்விடுகிறது. அப்புறம் என்ன ஆனது என்று தியேட்டரில் போய் கண்டு கொள்ளுங்கள்.
kandeen1
படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து ஏற்கனவே மூன்னூறு முறைக்கு மேல் தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளாய் வந்து கொண்டிருக்க, நாலு சீனுக்கு  ஒரு சீன் சந்தானம் வந்து லேசாய் கிச்சு, கிச்சு மூட்டிவிட்டு போனார். இடைவேளை வந்ததும் இன்னும் வேற படம் பாக்கணுமா? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்.  முதல் பாதியில் நோகடித்ததற்கு பிராயச்சித்தமாய் இரண்டாம் பாகம் லாஜிக், அது இது என்று எதையும் பார்க்க மாட்டீர்கள் என்றால் சிரிக்கலாம்.


அதற்காக என்னடா படம் நல்லாயிருக்கோன்னு நீங்க நினைச்சிற வேணாம். ஒண்ணுமேயில்லாம சொதப்பியிருக்கிற திரைக்கதையில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் கொடுத்த அந்த சில நிமிடங்களைத் தவிர பெரிதாய் படத்தைப் பற்றி சொல்ல முடியவில்லை.புதிய இசையமைப்பாளர் விஜய் எபினேசரின் பாடல்கள் எடுபடவேயில்லை. படத்திற்கு பெரிய ஸ்பீட் ப்ரேக்கரே பாடல்கள் தான். ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.
kandeen4 சாந்தனு கொஞ்சம் நன்றாக ஆடுகிறார்.  ஆனால் சண்டைக் காட்சிளில் படு காமெடி. கொஞ்சம் நடிக்க முயற்சி செய்த இடங்களில் சந்தானம் உதவியிருக்கிறார். சந்தானம் வழக்கம் போல சந்தடி சாக்கில் அடித்து விடுகிறார்.  இரண்டாவது பாதி என்ற ஒன்றை இவரில்லையேல் அய்யா சாமி நினைக்கவே பயமாயிருக்கு. ஹீரோயின் எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்ல அவருக்கு வேலையுமில்லை. கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணிக்கவுமில்லை.
kandeen2 எழுதி இயக்கிய முகில் சாருக்கு இது முதல் படம். நல்ல லைட்டான, காமெடி கலந்த லைனைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யப் பின்னலாய் திரைக்கதையமைக்க தவறிவிட்டதினால் பல இடங்களில் கொட்டாவி. படம் காமெடியாய் இருக்கலாம். ஆனால் அதில் சொல்லக்கூடிய திரைக்கதை சீரியஸாய் இருக்க வேண்டாமா?  அதிலும் கமிஷனர் ஒரு சமயம் கமிஷனர் கூப்பிடறாருன்னு போவதெல்லாம் ரொம்பவே மோசம். அதற்கு பிறகு லாஜிக் என்ற வஸ்துவை தேடிப் பார்த்தாலும் கிடைக்காது போலிருக்கிறது.  கேள்வி கேட்க வேண்டுமென்றால் படத்தின் முக்கிய விஷயமே அடிபட்டுவிடும். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த அன்றைய இரவு சண்டையில் சாந்தனுவுக்கு கண் பார்வை போய்விடுகிறது. அதற்குபிறகு தலையில் கட்டெல்லாம் கட்டி ஒரு சில நாட்களுக்கு பிறகுதான் அனுப்புகிறார்கள். அதற்கு நடுவில் சாந்தனுவின் காதலியோ, மாமனாரோ, தாத்தாவோ போன் கூட செய்ய மாட்டார்களா? இத்தனைக்கு காதலி கூடவேயிருப்பவள்?. ம்ஹும் முடியல. ஆனால் ரொம்பவே சோதிக்காமல் முழுக்க காமெடி என்று முடிவெடுத்தது பார்த்தால் தான் தப்பிக முடியும்.
கண்டேன் -  ம்ம்ம் What to Say?

எத்தன், கண்டேன், மைதானம்

Eththan-movie-Stills copy
எத்தன் கண்டேன், மைதானம், சுட்டும் விழிச் சுடரே ஆகிய படங்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. எத்தனைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது. எத்தன் மட்டும் டெபிஸிட்டில் இருப்பதால் வெளியாக்வில்லையாம். பெரும்பாலான படங்களுக்கு மல்ட்டிப்ளெக்ஸ், மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட டேட் கிடைக்கவில்லையாம். ஒரு ஷோவும், அரை ஷோவுமாய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் ஏற்கனவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும், கோ, வானம், ஆகிய படங்களுடன், எங்கேயும் காதல், போன்ற படஙக்ள் ஓடுவதாலும், தெலுங்கு படங்கள் சுமார் நான்கு பெரிய தியேட்டர்களில் வெளியாகிறது. சமீபகாலமாய் தமிழ் தவிர, தெலுங்கு படங்கள் தமிழ் படங்களுக்கு ஈடாக பத்து செண்டர்களுக்கு மேல் ஓடுகிறது. கூட்டமும் வருகிறது என்பதால் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரர்கள் அமோகமாய் வரவேற்கிறார்கள். ஆட்சி மாறியும், தமிழ் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இப்போது புலம்புவார்கள் இருக்கிறார்களா?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, May 19, 2011

அல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.

நேற்று சூப்பர் சிங்கர் அல்காவின் முதல் சினிமா பாடலைப் பற்றி எழுதினாலும் எழுதினேன். ஒரே மாநிலப் ப்ரச்சனையாகிவிட்டது. அதிலும் ப்ரியங்காவிற்கு ஏகப்பட்ட சப்போர்ட். ப்ரியங்காவைப்   எனக்கு சுமார் ஐந்து வருடங்களாய் தெரியும். ஆறு ஏழு வயதாக இருக்கும் போதே அவளுடய தந்தையின் இசையில் ஒரு பக்தி பாடல் ஆல்பத்தை கொடுத்தவள். இனிய குரலுக்கு சொந்தக்காரி. அவரது தந்தை ப்ரின்ஸ் நல்லதம்பி ஒரு இசையமைப்பாளர். என்னுடய எல்லாக் குறும்படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர். தம்பீஸ் எனும் இசைக்குழு ஒன்றை வைத்திருக்கிறார். அருமையான கம்போசர். இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவருக்கான ப்ரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். அவரின் வெற்றி வெகு தொலைவில் இல்லை. அது போலத்தான் ப்ரியங்காவின் வெற்றியும். ப்ரியங்காவிற்காக தற்போது நடைப்பெற்று வரும் சூப்பர் சிங்கர் ஜுனியருக்காக ஓட்டுப் போடும் படி வேண்டுகோளைக்கூட சென்ற சில வாரங்களுக்கு முன் எழுதிய கொத்து பரோட்டாவில் கேட்டிருந்தேன். 


அவன் இவன் படத்தில் அவள் பாடியுள்ள பாடலே அதற்கு சாட்சி. இப்படி எல்லாவிதத்திலும் அவளைப் பற்றி, அவளின் திறமையைப் பற்றி நன்கு அறிந்தும் அல்காவை நான் பாராட்டுகிறேன் என்றால் அது நிச்சயம் அவளின் திறமைக்காகத்தான். நேற்று போட்ட வீடியோவில் அவளின் பாடலைக் கேளுங்கள். கேட்டவர்கள் இன்னும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு ஸ்ரீனிவாஸின் கம்போஸிங்கும், அல்காவின் குரலுமே காரணம். நன்றாக இருப்பதை மனம் விட்டு பாராட்டாமல் தேவையில்லாமல், ஜாதி, மொழி,  இன வாரியாக வரிந்து கட்டிக் கொண்டு பேசுவதை விடுவோமே. அது மட்டுமில்லாமல் அடுத்த விஷயம் கேரளாவில் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு தமிழரை, தமிழச்சியை செலக்ட் செய்வார்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் அப்படி குறுகிய மனப்பான்மையில் இருந்துவிட்டு போகட்டுமே. நாமும் அப்படியிருக்க வேண்டுமா? ஒரு மலையாளப் பெண் இவ்வளவு அழகாய் தமிழில் பாடுகிறாளே? அதற்கு ஏன் பாராட்டக்கூடாது? ஷ்ரேயாகோஷலின் குரலில் எத்தனையோ தமிழ் பாடல்களைக் கேட்டுக் கிறங்கிப் போயிருக்கிறோம். பாடுகிற விஷயத்தில் குரலும், பாவமும், தான் முக்கியமே தவிர, இந்தியா, தமிழா, கன்னடமா, மலையாளமா? என்றெல்லாம் முக்கியமில்லை என்பதே என் கருத்து. ஒரு வேளை விஜய் டிவியில் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று வைத்துவிட்டு மலையாள கரையோர குழந்தையை வெற்றி பெற வைத்துதான் ப்ரச்சனை என்றால்… அதற்குத்தான் இம்முறை உலகளவில் என்று சொல்லி தவறை சரி செய்துவிட்டார்களே.. பிறகென்ன? தப்புன்னு தெரிஞ்சு திரும்பப் திரும்ப செய்யறதைவிட இது சரிதானே? அப்படி ப்ரியங்காவிற்காகவோ, அல்லது நம் தமிழ்நாட்டு திறமையை நீங்கள் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கண்டீர்களானால் அவர்களுக்காக ஓட்டை போட்டு, உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நிச்சயம் ஒரு தரமற்ற குரலை நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.  என்ன தான் அல்காவிற்காக மலையாள நடுவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் சிங்கார வேலன் பாட்டிற்கு மொத்த அரங்கமே எழுந்து நின்று கைத் தட்டி ஆரவாரித்து கண்ணீர் விட்டதை பார்த்தால் எல்லாரையும் மலையாளிகளாய் மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
டிஸ்கி:  அப்படி ஒரு தமிழரை நீங்கள் சிறப்பித்து கொண்டாட விரும்பினால் இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டுங்கள். கொண்டாடுங்கள்.:)

Wednesday, May 18, 2011

என்னா வாய்ஸ்டா?

சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை  கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா.
.

Tuesday, May 17, 2011

நண்டு


“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா..? இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார்.

“அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன..? ஏதாவது சீரியஸா..? ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே..? பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே..? என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள்.

“அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல் டாக்டர் வரதராஜன் காத்திருந்தார். இந்தமாதிரி பல பேர்களின் அழுகையை, கதறலை, தன்னுடய இந்த சென்டரில் பார்த்திருக்கிறார். பழகி போய்விட்டது.

கமலா கொஞ்சம், கொஞ்சமாய் அழுவதை நிறுத்த ஆரம்பிக்க, காத்திருந்த வரதராஜன் மெல்ல, ”இதபாரும்மா.. கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல. இப்படி அழறத விட்டுட்டு, அவர ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ.. உடனடியா ஐ.சி.யூல வச்சு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலைன்னா.. நாலு நாளோ, அஞ்சு நாளோதான், அப்புறம் ரொம்பவே கஷ்டம். இப்பவே 20% தான் சான்ஸ் இருக்கு.”

கமலா மூக்கை உறிஞ்சியபடி, “ அப்படின்னா .. அவர் பொழைக்க மாட்டாறா..? நீஙக் சரியா பாத்தேளா..? சினிமாவுல வர்றாப்புல ரிப்போர்ட் எதாவது மாறியிருக்க போறது..? எப்படி அவருக்கு போய்.. இது..  வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்..? என்று மீண்டும் குலுங்க, ஆரம்பிக்க,

“சிலருக்கெல்லாம் காரணமே சொல்ல முடியாது.. வந்துடுத்து.. ஆக வேண்டியதை பார்க்கணும்” என்றார்.

கமலா சட்டென்று சுதாரித்து, “கேன்சர்தானே டாக்டர்.. பெருமாள் மேல பாரத்தை போட்டுட்டு, அட்மிட் பண்ணா.. ஒரு வாரமோ, பத்து நாள்லேயோ.. அப்படியே சிரிச்சிண்டே எழுந்து வர்ராப்புல பெருமாள் பண்ணிடுவார்.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..?”

வரதராஜனுக்கு என்ன சொவதென்றே தெரியவில்லை. இவ்வளவு இன்னொசென்ஸா..? ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா..? இருந்தா வரச்சொல்லுங்கோ..”

கமலாவுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “எங்களுக்கு குழந்தைகள் ஏதுமில்ல, பொறக்கல டாக்டர்.. அதவிடுங்கோ.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..? எவ்வளவு செலவாகும்..? தம்பிக்கு ஒண்ணுன்னா அண்ணங்கார செய்ய மாட்டாறா என்ன..? நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும்?”

“உடனடியா அப்பல்லோவோ.. அல்லது அடையார் கேன்சர் இன்ஸ்டிடூயூட்லயோ அட்மிட் பண்ணனும். ஒரு நாலஞ்சு நாள் டீரீட்மெண்ட்டுக்கு அப்புறம், ஹீமோக்ளோபின், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஒரளவுக்கு ஏறினதுக்கு அப்புறம்தான் தெரபி ஸ்டார்ட் பண்ணுவா.. இதுக்கே குறைஞ்சது ரெண்டு மாசம் ஆயிடும். சுமார நாலுலேர்ந்து அஞ்சு லட்சமாகிடும்.. அதுக்கு அப்புறம் அவர் தெரபிக்கு ரெஸ்பாண்ட் செஞ்சார்ன்னா திரும்பவும் அவருக்கு கேன்சர் செல் உருவாகாம இருக்கணும். அதுல சொஸ்தமாகி ’போன் மேரோ டிரான்ஸ்பிளேஷன்’ செய்து வெளிய வரதுக்கு கிட்டத்தட்ட பதினைஞ்சு லட்சம் ஆகிடும். இதெல்லாம் இதுக்கு இருக்கிற டிரீட்மெண்ட். ஆனா முதல் தெரபிய அவர் பாடி ஏத்துக்கிட்டு ரியாக்ட் ஆகாம இருக்கணும். அதுக்கு அப்புறம் கடவுள் விட்ட வழி..” என்று சொல்லிவிட்டு போக,

கமலாவுக்கு உலகமே இருண்டது என்று சொன்னால் அது சாதாரண வார்தை. ’அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். நிஜமாகவே போயிடுவாரோ?.. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. ? பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை..? எத்தனை அர்சனைகள்? பத்து பதினைஞ்சு லட்சத்துக்கு எங்கே போவேன். தட்டி முட்டி இன்சூரன்ஸ், அது இதுன்னு மொத்தமா ஒரு லட்சம் வரைக்கும் தேறும்.. பேங்க்ல பெரிசா எதுவுமில்ல.. நகையா பாத்தாக்கூட பெரிசா தேறாதே..? வேற எங்க எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியல.. இருபத்தி அஞ்சு வருஷமா அடிமாடு கணக்கா சேல்ஸ் ரெப்லேர்ந்து ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு இப்பத்தான் ஒரு கம்பெனியின் மேனேஜராய் இருப்பவரிடம் என்ன இருந்து விட போகிறது. பெரிசா சாமர்த்தியம் இல்லாட்டாலும், சமத்து.. என்று நினைக்கும் போது ரகுவின் முகம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டியது.

அவரோட நிழல்லேயே சுகமா இத்தனை நாள் இருந்துட்டு.. இதுவரைக்கு எதுக்காகவும் என்னை அலையவிட்டதேயில்லை. எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். ஆனா அடிக்கடி சொல்லுவார்..” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோடின்னு” அப்ப கேட்கல.. யாரை கேட்பது, யார் எனக்கு தருவார்கள்..? அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே..? கமலாவுக்கு துக்கம் புரட்டி, புரட்டிக் கொண்டு வந்தது. எங்கயாவது ஓவென உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. தனக்குன்னு அழுவதற்கு கூட ஒருத்தரும் இல்லையே என்பது இப்போது குறையாய் தோன்றியது.

ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு வந்து தன் கைப்பையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து அதிலிருந்த ரகுவின் அண்ணனின் நம்பருக்கு போன் செய்தாள். எதிர் முனையில் ரொம்ப நேரம் ரிங் போய் கடைசி நேரத்தில் எடுக்கப்பட

“அண்ணா.. நான் தான் கமலா பேசறேன்..” என்று பேச ஆரம்பித்ததும், ஓவென அழ ஆரம்பித்தாள். சுற்றி உள்ளவர்கள் எல்லாம் பூத்தினுள் அழும் கமலாவையே பார்த்து கொண்டிருக்க, எதிர் முனையில் ”கமலா.. என்னம்ம்மா ஆச்சு..? என்ன ஆச்சு சொல்லும்மா.?” என்று மறுபடி, மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் பதட்டம் அடங்கி, மற்றவர்கள் தன்னை பார்பதை உணர்ந்த கமலா, நிதானமாகி, மூக்கை உறிஞ்சி தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னாள். எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தது.

”ஹலோ.. அண்ணா.. ஹலோ.. அண்ணா.. இருக்கேளா..லைன்ல..?”

”ம்.. ம்.. இருக்கேன். என்னம்மா கடவுள் இப்படி உன் தலையில் எழுதிட்டான். இப்ப என்ன பண்றதுன்னே தெரியல.. நெஞ்செல்லாம் படபடன்னு வருது.. சித்த நேரம் கழிச்சு உன் செல்லுல பேசறேன்” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு அவர் மீண்டும் பேசினால் என்ன சொல்வார் என்று இப்பவே ஊகிக்க முடிந்தது. யாராய் இருந்தால் என்ன.. செலவு செய்தால் பிழைப்பார் என்றால் அங்கே இங்கே புரட்டுவார்கள். இப்படி நம்பிக்கையே இல்லாத வியாதிக்கு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் என்று யார்தான் என்ன செய்வார்கள்.. போன பணம் திரும்பி வருமா..? சிறிது நேரம் ஒரு வெறுமை பார்வை போனை பார்த்தபடி இருக்க, வெளியே கடைகாரன் கதவை தட்ட, வெளியே வந்து எவ்வளவு என்று கேட்டு, பணம் கொடுத்து விட்டு அண்ணாவின் போனுக்காக காத்திருந்தாள். மணி அடித்தது. எடுத்து கொஞ்சம் சத்தமில்லாமல் இருந்த ரோட்டின் முனைக்கு நடந்தபடியே பேச ஆரம்பித்தாள். “சொல்லுங்கோண்ணா..”

“கமலா. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. எனக்கும் அறுவதிரண்டு வயசாச்சு.. இருந்த காசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி மூழ்கியாச்சு.. இரண்டாமவ ஏதோ இப்பத்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கா.. என் பென்ஷன்ல எங்க ரெண்டு பேரோட கதை ஓடிண்டுருக்கு. நினைக்க, நினைக்க அவனுக்கு இப்படி ஒரு வியாதியான்னு துக்கம் நெஞ்ச அடைக்கிறது. ஒரு பத்தாயிரம், இருபதாயிரம்னா அப்படி இப்படி புரட்டிடுவேன். நாலு அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவேன், எங்கே போவேன். அப்படியே பண்ணினாலும்..? ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா..? என்னடா அண்ணா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத.. நான் சொல்றத கேட்கிறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். வேற வழியில்லை, பகவான் இருக்கான் , பாரத்தை அவன் மேல போட்டுட்டு போ, அவன் பாத்துப்பான்.. நானும் இங்க வேண்டிக்கிறேன். எதாவது ஒரு பண்ண மாட்டானா அந்த பெருமாள்.. பாத்துக்கோ.. தைரியமா இரு...” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். எனக்குன்னு என்ன இருக்கிறது இவருக்கு அப்புறம்?. கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா..? எதை வைத்து கொடுப்பார்..? இருக்கிற வீடும் வாடகைதான். அவள் பக்கம் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. வயதான அம்மா, அப்பா.. இப்போது இதை சொன்னால் தாங்குவார்களா..? என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் டாக்டரிடம் போய் நின்றாள்.

“டாக்டர்.. உடனடியா அட்மிட் பண்றதுக்கு பணம் புரட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். அது வரைக்கும் இங்கயே ஏதாவது பண்ண முடியுமா..? இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே..?” டாக்டர் வரதராஜன் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு கமலாவை நிமிர்ந்து பார்த்து,

“அம்மா இது என்ன குளிர் ஜூரம் மாதிரியா.. அவர் ரொம்ப அட்வான்ஸ்டு லெவல்ல இருக்கார். இங்க என்னால பேசிக் டிரீட்மெண்ட் மட்டும்தான் பண்ண முடியும். ப்ளட் ஏத்தலாம், ப்ளேட்லெட்ஸ் ஏத்தலாம். ஆனா பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருப்பார். எந்த நேரத்திலேயும் எது வேணும்னாலும் நடக்கலாம். ப்ளேட்லெட்ஸ் கொறைஞ்சா அப்புறம் ப்ளட்கூட ஏத்த முடியாது. ப்ளட் ஹூஸ் ஆக ஆரம்பிச்சிடும். ஹார்ட், கிட்னி, ப்ரெயின், எது வேணும்னாலும், எப்ப வேணுமின்னாலும் அட்டாக் ஆகலாம். ஏன் திடீர்னு கோமாவுல கூட போகலாம். அவர் உடம்புல எதிர்பு சக்தியே கிடையாது. ஹி இஸ் பவுண்ட் டு பி இன்பெக்டெட்.. தீடீர்னு தொண்டை கட்டிக்கும், ஜலதோஷம் பிடிக்கும், அப்படியே நிமோனியால கூட கொண்டு விடும். அப்படி ஏதாவது ஆயிடுத்துன்னா மேட்டர் ஆப் ஹவர்ஸ். ரொம்ப சீக்கிரமா பரவிடும். உடம்புல ஏதாவது பார்ட்லனா ஆபரேட் பண்ணி அறுத்தெரிஞ்சிடலாம். ஆனா ப்ள்ட் கேன்சர்ல.. இப்போதைக்கு மருந்து, ப்ளட் எல்லாம் ஏத்தியிருக்கேன். சீக்கிரமா அட்மிட் பண்ணியான்னா.. அந்த 20% சான்ஸை யூஸ் பண்ணலாம்” என்று ஒரு கதவை திறக்க, அமைதியாய் வெளியேறினாள்.

வேறு வழியில்லை.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரமாட்டார். சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் என்று யோசித்தபடி, வார்ட் ரூமுக்குள் நுழைந்தவளை பார்த்ததும், ஆர்வமாய் சந்தோஷத்துடன், கையில் மாட்டியிருந்த சலைன் டியூப்புடன் எழுந்து உட்கார்ந்த ரகு, கமலாவை பார்த்து..

“என்ன சொன்னார்.. டாக்டர்.. எல்லாம் நார்மல்னு சொல்லியிருப்பாரே.. பயப்படாதேடி லூசு.. இப்பத்தான் ப்ளட், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஏத்துன உடனே.. ரொம்ப ப்ரெஷா ஃபீல் பண்றேன். அநேகமா ஹிமோக்ளோபின் 4.5லேர்ந்து 9க்கு ஏறியிருக்கும்.. பாரு எனக்கு இப்ப மூச்சே வாங்கலை, உடம்புல தான் அங்க, அங்க ப்ள்ட் களாட் குறையல.. மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாம் சரியா போச்சு.. இன்னும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ.. ப்ள்ட் ஏத்துனதும் சரியாயிடும். சரியானவுடனே குலதெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திடுவோம். ஏதோ ஒரு குறை வச்சிட்டம் போலருக்கு. அதான் இப்படி படுத்தறது” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டை கட்டியது போலிருக்க,. கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்.
******************************************************************************
லெமன் ட்ரீயும் .. ரெண்டு ஷாட் டக்கீலாவும் தொகுப்பிலிருந்து.. 

"I hold this letter in my hand"

Tänään sain mieluisimman yllätyksen, kun löysin asuntoni lattialta ilmoituksen kirjatusta kirjeestä. Lähes juoksin lähimpään postiin noutamaan kirjettä, koska olin aika varma kirjeen sisällöstä. Sydämeni jätti varmasti pari lyöntiä välistä, kun näin, että kirje oli matkannut Saksasta asti luokseni. Ja oikeassa olin, viimein se saapui!

Today I received a pleasant surprise, when I retrieved this from the post office. I was quite sure, what letter will contain and when I saw that it was from Germany, my heart skipped a few beats. And I was right, finally I got it!


Mertarannan sanoin: "Se on siinä!". Pääsylippuni koko vuoden kohokohtaan.
My ticket to the this year´s highlight.

On muuten melkoisen tyylikäs lippu, vai mitä sanotte? Voittaa Suomen festariliput vähintään yhtä hyvin, kuin Suomen jääkiekkomaajoukkue voitti Ruotsin sunnuntaina. Myönnetään, että olen vieläkin tunnekuohuissa sunnuntain jälkeen. Laitan varmaan tuon lipun jonnekin kassakaappiin, että se ei vahingossakaan katoa.

Elämäni on pyörinyt viime aikoina niin tiiviisti koulun ja jääkiekon ympärillä, että aikaa ei ole juuri muuhun jäänyt. Anteeksi kaikille ihmisille, joita en ole ehtinyt kiireiden takia näkemään. Lupaan taas tavata teitä, kunhan koulukiireet tältä vuodelta helpottavat. Aion myös pitää taukoa klubittamisesta ja yritän olla juomatta alkoholia ennen WGT:n reissua. Tekisi nimittäin erittäin hyvää hieman rauhoittua, ennen kuin suuntaan kesän festareille. 

Ostoksia en ole pahemmin tehnyt, koska rahat ovat kadonneet tehokkaasti säästölippaaseen. Tein tosin muutaman isomman ja hyvin tarpeellisen ostoksen, mutta niistä lisää myöhemmin. Jostain syystä en ole tuntenut edes suurta intoa shoppailua kohtaan, eikä kohdalleni ole tullut mitään "must have"- houkutusta. Myönnettäköön, että en ole kiireltäni ehtinytkään kuin lähikauppaan ruokaostoksille. Ainoat ostokseni ovat tässä:

Violetti rusetti Glitterin alennusmyynnistä hintaan kaksi euroa.
A violet bow from Glitter´s sale, costed two euros.
Kaksi hiuslenkkiä mustalla rusetilla, nämäkin kaksi euroa kappale.
 Two hair bands with a black bow, only two euros per item.


Hiuskoristeilla jatketaan, tosin tästä seuraavasta en maksanut yhtään mitään. Löysin tämän eräänä päivänä talomme pihamaalta, roskisten läheisyydestä. Arvelin sen tippuneen roskien joukosta, joten otin hiuskoristeen mukaani, pesin sen ja nyt se on kuin uusi. Toisen roska on toisen aarre.

And one more hair accessory, but this item I found from the ground, near of the wastebaskets. I took that hair accessory with me, washed it and now it´s like a new one. One man´s trash is another´s treasure.


Tanja myi vähän aikaa sitten blogissaan vaatteita, joiden joukosta löysin itselleni nätin paidan korsetin alla pidettäväksi. Paita on ehkä aavistuksen liian lyhyt minulle, mutta eipä tuo korsetin alla haittaa. Paita on läpinäkyvää kangasta, jossa on samettisia kohokuvioita. Kiitokset Tanjalle nätistä paidasta ja hyvin sujuneista kaupoista.

Tanja was selling clothes on her blog little time ago and I found this pretty shirt for me. The shirt is made of transparent fabric with velvet patterns on it.


Tanja lähetti myös kiitokseksi kaupoista Victoria Frances:in vampyyrihenkisen rintanapin. Olin todella otettu tästä eleestä, kiitos. Rintanappi pääsee varmaankin koristamaan jotakin jakuistani.

Tanja also sent me this Victorian France´s pin. Thank you for that.


Siinäpä kaikki tällä kertaa, joten aika lyhyeksi jäi tämä postaus. Lupaan ryhdistäytyä blogini suhteen, kunhan koulu vihdoin ja viimein loppuu. Kesälomasta voin tänäkin vuonna vain haaveilla, koska vietän kesäni suorittaen opiskeluuni kuuluvaa työharjoittelua. Ehkä sitten ensi vuonna minäkin pääsen nauttimaan Suomen suvesta. Tosin jos hyvin käy, en asu enää ensi kesänä Suomessa :) Mutta ei mennä asioiden edelle kuitenkaan. Nyt iltapuuhat ja sen jälkeen painan pääni tyynyä vasten. Kauniita unia itse kullekin.

Followers

Loading...

Blog Archive