Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, April 10, 2011

கொத்து பரோட்டா-11/04/11

சிவந்த கைகள் என்றொரு நாவல். சுஜாதா எழுதியது. அதில் நாயகன் தான் ஒரு எம்.பி.ஏ படித்தவன் என்று போலிச் சான்றிதழ் கொடுத்துவிட்டு, மிகக் குறுகிய காலத்தில் சேர்மனின் பெண்ணை திருமணம் செய்யும் அளவுக்கு வந்துவிட, எத்தேசையாய் சர்டிபிகேட்டுகளை செக் செய்யும் ஒரு வயதான குமாஸ்தாவிடம் மாட்டிவிடுவான். பொய்யை மெய்யாக்க முடியாமல் அவன் அந்த குமாஸ்தாவை கொன்றுவிடுவான். ஒரு பொய்யை மறைக்க, ஒவ்வொரு பொய்யாய் சொல்லிச் சொல்லி, கடைசியில் கொலைகாரனாய் நிற்பான். அவனுக்கான தண்டனை அடுத்த பாகமான கலைந்த பொய்கள் என்கிற நாவலில் கொடுத்திருப்பார். ஏனோ சொல்லணும்னு தோணிச்சு.மனசு கஷ்டமாத்தானிருக்கு வேற வழியில்லை.
#########################
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்த்திருக்கிறது. தன் உண்ணாவிரதப்  போராட்டத்தை முடித்திருக்கிறார் இந்த காந்தியவாதி. இவரது உண்ணாவிரத போராட்டத்திற்கு பொதுமக்களிடையே ஏற்பட்ட பெரிய எழுச்சியும், ஆதரவையும் பார்த்து அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் நடுக்கம் வந்திருக்க வேண்டும். வெள்ளியன்று அன்னாவின் போராட்டத்திற்கு ஆதரவாய் பெரும்பாலான மக்கள் சென்னைக் கடற்கரையில் கூட, போலீஸார் அவர்களை கைது செய்துவிட்டு, பின்பு தி.நகர் குண்டூர் சுப்பையா பள்ளியில் அவர்களை விட்டுவிட்டு அங்கே அவர்களின் உண்ணாவிரத ஆதரவை தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். மாலை வரை மிக அமைதியாய் நடைபெற்றது  அந்த போராட்டம்.
##########################################
கடந்த சில் நாட்களாய் ஜூனியர்விகடன், ரிப்போட்டர் போன்ற இதழ்களில் எலக்‌ஷன் ரிசல்ட்டுகள் குழப்படியாய் அமையும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லி வர ஆரம்பித்திருக்கிறது. போன மாதமெல்லாம் அதிமுகதான் தனிப்பெரும் மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லி வந்தவர்கள் இவர்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் என்ன முடிவு வரும் என்று யோசிக்க வைக்கிறார்கள். பார்ப்போம்.
###################################
கொத்து பரோட்டா புத்தகம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே போகிறதாம் டிஸ்கவரி புக் பேலஸில் சொன்னார்கள். சென்ற வாரம் நெல்லை சந்திப்பு இயக்குநர் நவீன் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு எனக்கனுப்பிய மெசேஜ். “it’s too much, but i like it very much.” என்றிருந்தது. நன்றி தலைவரே. போனவாரம் இயக்குனர் மணிவண்ணன் வாங்கி போயிருக்கிறாராம்.
####################################
கிழக்கு த்ரில்லர் வரிசையில் புது நாவலை வெளியிட்டிருந்தார்கள் உளவுகோப்பைக் கிரிக்கெட் என்று தரணி எழுதியது. மாதாந்திர நாவல்களை விட பக்கங்கள் அதிகம் அதை விட வேறேதும் சிறப்பாய் இல்லை. படு மொக்கையான அமெச்சூர் தனமான  நாவல். இதே போல் இவர்களின் அடுத்த வெளியீடுகள் இருக்குமாயின் செல்ப் எடுக்காது.
######################################### 
dinamalar1தினமலரில் மீண்டும் ஒரு காதல் கதை பற்றிய புத்தக விமர்சனம் நேற்று வெளிவந்தது. முக்கியமாய் தனுக்கு கொண்டாலம்மா கதையை அவர்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
###################################################
உன் கனவுகள் எல்லாவற்றையும் நீ நிஜமாக்க முடியாது.  ஆனால் அந்தக் கனவுகள் உன் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக்க முடியும்

நீ உனக்கு உண்மையாக இரு. மற்றவர்களிடம் இருக்க முடியாத பட்சத்தில்- சுவாமி விவேகானந்தர்.
#########################################
ப்ளாஷ்பேக்
மொகமட் ரபியின் உணர்ச்சிமயமான குரலில் சூப்பர் ஹிட்டான பாடல். இதே பாடல் தமிழிலும் மிகப் பெரிய ஹிட். நம் சம கால தேவா போல அப்போதைய இசையமைப்பாளர் வேதா. பெயரில் கூட என்ன சிங்க் பாருங்கள். வழக்கமாய் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைப்பவர். அக்கால ஹிந்தி சூப்பர் ஹிட் பாடல்களை உட்டாலக்கடியாக இல்லாமல் அப்படியே ஹார்லிக்ஸ் சாப்பிடுவதைப் போல லபக்கிக் கொண்டு தமிழுக்கு அளித்தவர்.
No comments:

Post a Comment

Followers

Blog Archive