Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, March 29, 2011

குள்ளநரி கூட்டம்


25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி


முதலில் இயக்குனருக்கு ஒரு வணக்கம் வைக்க வேண்டும். ஏனென்றால் மதுரைப் படம் என்றதும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுக்கும் அளவிற்கு வந்து கொண்டிருந்த டெம்ப்ளேட், கொண்டேபுடுவேன், அருவாள், ஊர் திருவிழா, கிடா வெட்டி, டாஸ்மாக், ஷேவ் செய்யாத முகமும், திருத்தாத முடியுடன், டவுசர் தெரிய அலையும் ஹீரோக்கள், சகாக்கள் இல்லாத ஒரு படத்தை கொடுத்ததற்க்காக.


மிக சீரியஸான பெயரை வைத்துவிட்டு, படு லைட்டான மேட்டரை தொட்டிருக்கிறார்கள். விஷ்ணு ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. வெட்டியாய் வேலை தேடியலையும் இளைஞன். அவனுடய அப்பா இரு முறை நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆனால் போலீஸ்காரர்கள் என்றாலே எரிச்சலடைபவர். ஒரு நாள் விஷ்ணு அவர் அப்பாவின் செல்லுக்கு ரிசார்ஜ் செய்யும் போது கடைசி நம்பர் மாறி வேறு ஒரு செல்லுக்கு சார்ஜ் ஆகிவிடுகிறது. நம்பரைக் கண்டுபிடித்து பணத்தை திரும்பப் பெரும் முயலும் போது அது ஒரு பெண் என்று தெரிய, பின் என்ன நடக்கும். காதல் தான். ஒரு வழியாய் காதல் பெண் வீட்டிற்கு தெரிந்துவிட, பெண் வீட்டில் அவளுடய அப்பா கண்டீஷன் போடுகிறார். எப்படியாவது போலீஸ் ஆகிவிட்டு வா என் பெண்ணைத் தருகிறேன் என்கிறார். விஷ்ணுவின் அப்பாவுக்கோ போலீஸ் என்றாலே பிடிக்காது. வேறு வழியில்லாமல் வீட்டிற்கு தெரியாமல் போலீஸ் வேலைக்கு சேர விழைகிறான். அங்கு அவனுக்கு பல பிரச்சனைகள். அத்தனையும் தாண்டி அவன் வெற்றிப் பெற்றானா? என்பதுதான் திரைக்கதை.


விஷ்ணுவை ஒரு சாதாரண மதுரைக்கார பையனாய் பார்ப்பதற்கு பாந்தமாய் இருக்கிறார். போனில் வேறு யாரோ என்று நினைத்து தடாலடியாய் ஆரம்பித்து, அது பெண் என்றதும், வேறு வழியில்லாமல் கெஞ்சிக் கூத்தாடுவது இண்ட்ரஸ்டிங். எந்தவித ஹீரோயிசம் இல்லாத கேரக்டராய் இருப்பதால் கொஞ்சம் ரசிக்க முடிகிறது. இடைவேளைக்கு பிறகு அவர் செய்யும ஹீரோயிசங்கள் கொஞ்சம் அசட்டுத்தனமாய்த்தானிருக்கிறது.

ரம்யா நம்பீசன் பார்பதற்கு மிக க்யூட்டா இருக்கிறார். மற்றபடி இருவரது காதல் காட்சிகள் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும்,கொஞ்சம் இழுவையாகத்தான் இருக்கிறது.

இரண்டாவது பாதியில்தான் படத்தின் முக்கிய விஷயம் வருவதால் அதிலிருந்துதான் சுறுசுறுப்பாகிறது. போலீஸ் செலக்‌ஷனில் பங்குபெற நடு ராத்திரி ப்ளாட்பாரத்தில் படுத்துறங்க ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து சுவாரஸ்யம் பிடிக்க ஆரம்பிக்கிறது.

செல்வகணேஷின் இசையில் ஒரு பாடல் ஓகே ரகம். மற்றதெல்லாம் எரிச்சலாய்த்தான் இருக்கிறது. அதிலும் ரெண்டாவது பாதியில் தேவையேயில்லாமல் வரும் ரெண்டு பாடல்கள் படு சொதப்பல்.

ஒளிப்பதிவு பற்றி பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியவர் ஸ்ரீ பாலாஜி. கதையின் நாட் மிக எளிமையானதாய் இருந்தாலும் திரைக்கதை செட்டிலாவதற்கு மிகவும் நேரமெடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் முதல் பாதி ரொம்பவே நெளிய வைக்கிறது. இரண்டாவது பாதியில் வெண்ணிலா கபடிக்குழுவில் வருவது போன்றே காட்சிகள் அமைத்திருப்பது சுவாரஸ்யத்தை குறைப்பதாகவே இருக்கிறது. திறமையானவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கொள்கைக்குத்தான் கடத்தல் எல்லாம் செய்து அதிரடி செய்யும் ஹீரோயிசம் திடீர் என்று விஷ்ணுவுக்கு வந்தது எடுபடவில்லை. நேர்மையாக, திறமையாக இருப்பவர்களுக்குத்தான் போஸ்டிங் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், மினிஸ்டர் மச்சான், அந்த டீ விற்கும் ஆள், ஹீரோவின் குண்டு ப்ரெண்டு கேரக்டர்கள் எல்லாம் க்ளைமாக்ஸில் போலீசாகி விடுவது போல் காட்டுவது.. படத்தின் காமெடிக்கு வேண்டுமானால் ஓகே ஆகுமே தவிர. படத்தின் கதைக்கு ஓகே ஆகாத விஷயம். இருந்தாலும் படம் முடியும் போது ஏதோ கொஞ்சம் ரிலாக்ஸாகி வருவதால்..
குள்ளநரி கூட்டம் கிச்சு கிச்சு
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


No comments:

Post a Comment

Followers

Blog Archive