Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, March 22, 2011

அவர்களும்..இவர்களும்


  சில கதைகளை கேட்கும் போது அட அட்டகாசமாய் இருக்கிறதே என்று யோசிக்கத் தோன்றும், ஆனால் அதே கதையை திரைப்படமாய் பார்க்கும் போது எக்ஸிக்யூஷனில் சொதப்பிவிடுவார்கள். அப்படியான ஒரு நல்ல கதையுள்ளப் படம் தான் அவர்களும் இவர்களும்..
 
முதல் காட்சியிலேயே ஒரு காதல் ஜோடியை, குவாலிசிலும், காடு, மலை, தண்ணிர் என்று பாகுபாடு இல்லாமல் வெள்ளைச் சட்டை,வேட்டிக்காரர்கள் துரத்துகிறார்கள். கடைசியில் அவர்கள் திருட்டு ரயில் ஏறி போகிறார்கள். அவர்களின் பெயர் வள்ளல், வெண்ணிலா. அதே ரயிலில் பாரதி, ஸ்வேதா என்கிற இன்னொரு காதல் ஜோடியும் ஊரைவிட்டு ஓடி வருகிறது. ஊர் வந்து சேர்ந்ததும், ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் இருக்கும் நேரத்தில், வெண்ணிலாவின் அண்ணனுக்கு இவர்கள் இருக்குமிடம் தெரிய வருகிறது. அவர்கள் வந்து பிரிப்பதற்குள் திருட்டு கல்யாணம் செய்து விடலாம் என்று இரு ஜோடிகளும் கோவிலுககு போய் உட்காரும் நேரத்தில் வில்லன் அண்ணன்மார்கள் வந்துவிட, நால்வரும் ஒரு ஆட்டோவில் கிளம்புகிறார்கள். அந்த ஆட்டோ ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ரயில் மோதி விபத்துக்குள்ளாகிறது. விபத்தில் வள்ளல்-வெண்ணிலா ஜோடியில், வெண்ணிலாவும், பாரதி- ஸ்வேதா ஜோடியில் பாரதியும் இறக்கிறார்கள். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இரண்டாவது பாதி.

இப்படத்தின் கதையைப் பற்றி கேட்டவுடன் அட போடவைத்தது இந்த இடைவேளை இடம் தான். இனி எப்படி கதையை நகர்த்தப் போகிறார்கள் என்று என்னுள் எழுந்த ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என் ஆர்வத்தை திருப்திபடுத்தினார்களா? என்பதை பின்பு சொல்கிறேன்.

வள்ளல்- வெண்ணிலா ஜோடியில் வெண்ணிலாவின் குட்டிப் பெண் அழகு மிகவும் எடுபடுகிறது. ஆனால் செருப்பு தைக்கும் வள்ளலுக்கும், ஊரில் பெரிய பணக்கார அப்பாவும், சின்னத்தம்பி அண்ணங்களும் உள்ள வெண்ணிலாவுக்குமான காதல் வளர்ந்ததில் டெப்த் இல்லாததால் நாடகத்தனம் அதிகம். அவ்வப்போது இயக்குனர் வேறு சம்மந்தமேயில்லாமல், வள்ளலின் தங்கையின் மூலம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் பற்றியும், உயர்ஜாதி, கீழ் ஜாதிப் பற்றியெல்லாம் அப்பாவின் கேரக்டர் புரட்சி பற்றி பேசுவது படு அபத்தம்.  பணம் சம்பாதித்து செட்டிலாகி விட்டு திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று திருட்டுத்தனமாய் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது காதல் ஜோடிகள் மாட்டுவதும், அதன் பொருட்டு தப்பித்து ஓடுவது அருமை. ஆனால் அதே ஜோடிகள் லெதர் டெக்னாலஜி படித்த வள்ளல், சிங்கப்பூரில் வேலைக்கு சேரும் அளவிற்கு வளர்ந்திருக்கும் வள்ளல், நாகப்பட்டினம் வந்து, கல்யாண வேலைக்கு செல்வது, என்பதெல்லாம் கற்பனை வரட்சி..

இன்னொரு ஜோடியான பரதன் ஸ்வேதா பணக்காரப்பெண் அவளின் ட்ரைவர் காதல் ஜோடிகள். இவர்கள் தொலைந்ததிலிருந்து ஸ்வேதாவின் அப்பா இவர்களைப் பற்றி தேடியதாகவே காட்சிகள் ஏதுமில்லை. க்ளைமாக்ஸில் கூட அவர் ஸ்வேதா கூப்பிட்டுத்தான் வருகிறார். பரதனாக வரும் அழகி சிறு வயது பார்த்திபன் நன்றாக சூட் ஆகிறார். முக்கியமாய் இவர் கேரக்டருக்கு வள்ளலாக நடித்த பையனை போட்டிருக்கலாம். இன்னும் கொஞ்சம் மெச்சூர்டாக இருந்திருக்கும்.

புதிய இசையமைப்பாளர் என்று நினைக்கிறேன். ஒரு பாடல்  ஓகே ரகம். பின்னணியிசையெல்லாம் பல சீரியல்களில் கேட்ட ட்ராக்குகள் போலிருக்கிறது. ஒளிப்பதிவு பல இடங்களில் அவுட் ஆப் போகஸ்.

நடுவே சார்லி, இயக்குனர் அகத்தியன் போன்றோர் நடிக்கிறார்கள். மற்றபடி சொல்லிக் கொள்கிறார்ப் போல் ஏதுமில்லை.

புதிய இயக்குனர் வீரபாண்டியனின் கதைக்காக பாராட்டும் எண்ணமிருந்தாலும், மிகச் சொதப்பலான திரைக்கதை, வசனங்களால் கொடுக்க நினைத்த பாராட்டை வாபஸ் வாங்க வேண்டியதாக போய்விட்டது.படத்தின் வசனங்கள் அதை விட மிக மோசம். நாடகத்தனம் மிக அதிகம். இரண்டாவது பாதிக்கு மேல் வள்ளல்,ஸ்வேதாவுக்குமிடையே இருக்கும் பைண்டிங், அதற்கான காரணங்கள், எல்லாம் முதல் பாதி ஏற்படுத்திய பெப்புக்கு அப்படியே எதிர்பதம். இயக்குனருககு ஒரே குழப்பம். இந்த இருவரையும் காதலர்கள் என்று சொன்னால் தமிழ் சினிமாவின் கொள்கைகளில் ஒன்றான வாழ்க்கையில காதல் ஒரு முறைதான் பூக்கும் என்கிற பண்பாட்டை நாம் மீறினால் படம் ஓடாதோ? என்கிற சந்தேகம் வந்துவிட்டதால்.. பேசாம நட்புன்னு சொல்லிருவோமா? என்றும் யோசித்து.. ரெண்டும்கெட்டானாய் முடித்ததில் நான் எரிச்சலாகி...

அவர்களும்.. இவர்களும் என்னவானா எனக்கென்ன? 

No comments:

Post a Comment

Followers

Blog Archive