Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, March 27, 2011

கொத்து பரோட்டா-28/03/11

ழ பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை பெற்றுக் கொள்ள, சிறப்பாய், நிகழ்சி நடந்தேறியது. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாய் தொகுத்தளித்த நண்பர் சுரேகாவுக்கு நன்றிகள் பல.   ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. எல்லாப் புத்தகங்களிலும் நூறு புத்தகங்கள் புக் செய்து பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் ஜெயவேல் அவர்களுக்கும், மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல. நாளை விழாப் படங்களை தொகுத்து அளிக்கிறேன்.
###############################################
குஜராத் அரசாங்கத்தை உலகின் சிறந்த இரண்டாவது அரசாங்கமாய் ஒரு இண்டர்நேஷனல் கவுன்சில் அறிவித்துள்ளது. பத்து வருடஙக்ளுக்கு முன்னால் 50,000 கோடி உலக வங்கியில் கடங்காரனாய் இருந்த அரசு இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம். குஜராத்தில் டாஸ்மாக் இல்லை, மின்சார வெட்டில்லை, இலவசங்கள் ஏதுமில்லையாம். 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள். நாம எப்போ அப்படி மாறுவோம்?
&&&&&&&&&&&&&&&&&&&&&
தமிழகமெங்கும் தேர்தல் ஜுரம் எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்குள்ளும் வந்துவிட்டது. ஆனால் எந்தவிதமான ஆர்ப்பாட்டம், படாடோபமில்லாமல் இதெல்லாம் நடப்பது நமக்கு புதுசாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நிச்சயம் இதை நாம் வரவேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்களின் கெடுபிடியால் சிற்சில விஷயங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதை மீறி ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது. அப்பாவி மக்களின் திருமணத்திற்காக, மற்றும் சிறு வியாபாரிகள் எடுத்துப் போகும் பணப்பெட்டிகள் பறிமுதல் செய்வது பற்றி சம்பந்தப்பட்டவரை விட, மற்ற அரசியல் கட்சிகள் அலறுவது வேடிக்கையாக இருக்கிறது. எதிர்காலத்தில் டிவியில் தான் அரசியல் பிரச்சாரம் நடைபெறும் என்று தெரிகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
விஜய்காந்தின் செங்கல்பட்டு தேர்தல் பிரசாரத்தின் போது கலைஞரை வாய்க்கு வந்தபடி பேசினார். இவரின் ஆட்சி சரியில்லாததால்தான் இவர் அரசியல் கட்சியே ஆரம்பித்ததாகவும், இல்லாவிட்டால் இவர் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பேன் என்றும் பேசினார். எக்காரணம் கொண்டும் ஜெயலலிதாவின் பெயரை சொல்லாமல் உஷாராய் பேசினார். அவர் எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாய் சொன்னார். கலைஞர் 3000 கோடியில் கலர் டிவி கொடுத்து மாதம் ஒவ்வொரு டிவிக்கும் நூறு ரூபாய் வாங்கி ஒரு வருடத்தில் 3600 கோடி சம்பாதிப்பதாகச் சொன்னார். சரி கலைஞர் டிவி கொடுத்தார். கேபிள் இணைப்புகளை மக்களுக்கு வழங்கும் வேலையை எங்களைப் போன்ற கேபிள் ஆப்பரேட்டர்கள்தான் இணைப்புக் கொடுத்து பணம் வாங்குகிறோம். வேண்டுமானல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள எம்.எஸ்.ஓ எனப்படும் ஆட்களுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்த பட்சமாய் இருபது ரூபாய் வரை போகும் அவ்வளவுதான். சும்மா.. மம்மி போல டம்மியாக பாயிண்ட் சொல்லக்கூடாது மக்களே. சே.. சாரி. அவர் பேசினது மாதிரியே பேச வருது.
#############################
அம்மா மாற மாட்டார் என்பதை முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, தாந்தோன்றித்தனமான வேட்பாளர் அறிவிப்பு பட்டியல், மதிமுக வெளியேற்றம், மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான முரண். வேட்பாளர் பட்டியல் எப்படி வெளியானது என்றே தெரியாது என்கிற அறிக்கை. இதையெல்லாம் விட உச்சம். தேர்தல் அறிக்கை. சென்ற தேர்தலில் இலவசங்கள் எதையும் அளிக்க முடியாது என்று சொன்னவர், இந்த தேர்தலில் இலவசங்களின் உச்சமாம் திமுக அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் அடித்திருப்பது மகா கொடுமை. அதிலும் மகா கொடுமை நிதமும்  இலவச அறிவிப்புகளை ஏற்றிக் கொண்டேயிருப்பது. இது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்க மீண்டும் சென்னையில் மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றால் என்ன அர்த்தம்? மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும்.  யார் வீட்டு காசு? இப்படி ஏட்டிக்கு போட்டியாய் யோசிப்பதை விட்டு விட்டு இன்னும் சிரத்தையாக யோசித்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லதாப் போகும்.
##################################
ப்ளாஷ்பேக்
ஏக் துஜே கேலியேவுக்கு பிறகு இந்தி திரையுலகில் எஸ்.பி.பியின் கொடி பறக்க ஆரம்பித்தது. சாகர், மே நே பியார் கியா, போன்ற படங்களின் பாடல்கள் ஹிட்டினால் எரிச்சலடைந்த இந்திப் பாடகர்கள் எல்லோரு சேர்ந்து எஸ்.பி.பியை ஓரங்கட்டினார்கள் என்ற குற்றச்சாட்டிருந்தாலும் அற்புதமான பாடல். வழக்கப்படி எஸ்.பி.பி. கமல் காம்பினேஷன் ராக்ஸ்.
#######################################
குறும்படம்
How to write screenplay? என்கிற இந்த குறும்படம் காலேஜ் ப்ராஜெட்டுக்காக எடுத்தப்படமாம். பார்த்தவுடன் பக்கென பற்றிக் கொள்ளூம் நகைச்சுவையுடன் இருக்கிறது. செம நக்கல் நையாண்டி. என்ன எவ்வளவு தூரம் காட்டினால் அது நகைச்சுவையாய்  எடுபடும் என்று தெரியாமல் இழுத்திருப்பதை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நல்ல முயற்சி இயக்குனர் சுதர்சன்.
########################################
டவுட்டு?
மோனோரயில்னா என்ன? மெட்ரோ ரயில்னா என்ன?
மோனோ ரயிலுக்கு ப்ரிட்ஜு மேல தண்டவாளம் இருக்கும் ஆனால் ரயில் தொங்கிட்டே போகும். மெட்ரோ ரயில் ப்ரிட்ஜ் மேல தண்டவாளம் இருக்கும் அதுக்கு மேல ரயிலு போகும்.

இலவச நிலமெல்லாம் கொடுக்க முடியாது என்று போன எலக்‌ஷனில் சொன்ன ஜயலலிதாவுக்கு இப்போது மட்டும் எப்படி எல்லாவற்றையும் விட அதிகமாய் கொடுக்க முடியும் என்று வாக்குறுதி கொடுக்க முடிகிறது?
#####################################
உன் எதிரியின் பேச்சைக் கவனி. ஏனென்றால் உன் தவறுகளை அவன் தான் உன்னிப்பாக கவனிப்பவன் – ஷேக்ஸ்பியர்

எவனொருவனையும் இன்றைய நிலையில் வைத்து பார்க்காதே. ஏனென்றால் காலம் தான் நிலக்கரியை வைரமாக்குகிறது.
#####################################
நம்பினால் நம்புங்கள்
ரஞ்சனா அகர்வால் என்கிற இந்தப் பெண்ணுக்கு கண்களை முழுவதும் துணியால் கட்டினாலும் பார்க்க முடிகிறது, படிக்க முடிகிறது. இது பற்றிய சர்ச்சை ஒன்று கூட ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காணொளி இங்கே
இந்த பெண்ணைப் பற்றிய சர்ச்சை http://nirmukta.com/2010/06/23/exposing-the-miracle-of-blindfolded-sight-the-story-of-ranjana-agarwal/
########################################
அடல்ட் கார்னர்
secretaryக்கும் பர்சனல் secretaryக்கும் என்ன வித்யாசம்..?
secretary 'காலை வணக்கம் சார்' என்று சொல்வாள்..
ஆனால் பர்சனல் secretary, 'வணக்கம் சார்.. இது காலை' என்பாள்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive