Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Wednesday, February 16, 2011

கேபிளின் கதை-4

4
சி.என்.என்னின் புகழ் மெல்ல பரவ ஆரம்பிக்க..இந்நாள் வரை அமெரிக்க போர் படங்களில் மட்டுமே பார்த்த போர்க் காட்சிகளை பார்த்து வந்த நம் மக்களூக்கு, நிஜமான போர்க்காட்சிகள் அதுவும் சுடச்சுட, பேட்டிகளோடும், செய்திகளோடு வருவது மிக ஆச்சர்யமாக இருக்க.. செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் எளிதாய் இருந்தது. ராய்டர்ஸ் போன்ற நிறுவனங்களிடமிருத்து செய்திகளைப் பெற்றுக் கொண்டிருந்த பிரபல நாளிதழ்கள், தாங்களே டிஷ் ஆண்டனாவை பொருத்திக் கொண்டு, செய்திகளை படங்களை உடனுக்குடன் வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அன்றைய கால கட்டத்தில் டிஷ், எல்.என்.பி, கோஆக்ஸில் ஒயர்கள், கனெக்டர்கள், ரிசீவர் போன்ற எல்லா உபகரணங்களும் இறக்குமதி செய்துதான் நிறுவ வேண்டும். ஆனால் சி.என்.என் புகழ் பரவ, பரவ, எதையும் உடனைடியாய் உட்டாலக்கடி செய்து லோக்கல் மாற்று தயாரிக்கும் டெல்லிவாலாக்களூக்கு சரியான பிஸினெஸ் என்று புரிய ஆரம்பித்து, டிஷ்களை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

உடனடியாய் சிக்னல்களை பெறும் எல்.என்.பியையும், ரிசீவர்களையும் இம்போர்ட் செய்து மார்க்கெட்டில் மிகச் சுலபமாய் விற்க ஆரம்பித்தார்கள்.

பன்னிரெண்டு அடி, பதினாறு அடி என்று ஒவ்வொரு இடத்துக்கும் பரந்திருக்கும் சிக்னல்களின் தகுதி அடிப்படையில் டிஷ்களின் அடிகள் அதிகமாகும். நம்ம ஊரில் சிக்னல் தகுதி குறைவாக இருந்தது அதனால் இங்கே பன்னிரண்டு அல்லது பதினாறு அடி டிஷ் ஆண்டனாதான் சிறந்த சிக்னல்களை பெற வல்லதாய் இருந்தது. ஈரோஸ்டார் எனப்படும் வெளிநாட்டு சிக்னல் ரிசீவர்தான் அன்றைய மார்கெட்டின் ராஜா. இப்படி நம் நாட்டிற்குள் நுழைந்த சாட்டிலைட் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தின் மவுசு ஏற, ஏற, சாதாரண கேபிள் டிவி நடத்த ஆரம்பித்தவர்களும் இன்னொரு சானல் மாடுலேட்டரை வைத்து இரண்டு சேனல் கொடுக்க ஆரம்பித்தார்கள். சேனல் மாடுலேட்டர் என்றால் என்ன ? நம் டிவியில் குறிப்பாக கருப்பு வெள்ளை டிவியில் பனிரெண்டு சேனல்களே இருக்கும் அதுவும் டகடகவென திருப்பும் மெக்கானிக்கல் ட்யூனரை வைத்துக் கொண்டு சேனலை நிரடி செய்ய வேண்டும். அப்போது இருந்த சேனல் வெறும் தூரதர்ஷன் மட்டுமே. அதுவும் சேனல் 4லிலும், ஆறிலும், மெட்ரோ சேனலும் வந்து கொண்டிருந்த காலத்தில், சேனல் நெ.2 தான் எல்லோரும் முதல் முதலாய் கொடுக்க ஆரம்பித்த சேனல். மாடுலேட்டர் என்பது என்ன வென்றால் அது ஒரு பாகுபடுத்தி சிக்னல்களை வழி நடத்தும் ஒரு கருவி. அதாவது சேனல் நம்பர் இரண்டின் அலைவரிசை ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து குறிப்பட்ட அளவுதான் இருக்கும் என்றால். நான் டிஷ் ஆண்டனாவிலிருந்து ரீசீவர் மூலமாய் கிடைக்கும் சிக்னலை, அந்த மாடுலேட்டருக்குள் கொடுப்போம். அப்போது அந்த சேனலுக்கான அலைவரிசைக்குள் நாம் கொடுக்கும் நிகழ்ச்சியின் சிக்னல் போகும். அந்த மாடுலேட்டரிலிருந்து சிக்னலை வெளியே எடுத்து, மக்களுக்கு கொடுப்பதற்க்காக வைக்கப் பட்டிருக்கும் ஆம்ப்ளிபையரின் இன்புட்டில் கொடுக்க வேண்டும், இப்போது அந்த ஆம்பிளிபையர் மூலம் சிக்னல்களை மேம்படுத்தி.. அதை கோஆக்ஸில் ஒயர் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு கடத்த வேண்டும். இது வரை ஒரே ஒரு சேனலை வீடியோ கேசட் மூலம் ஒளிபரப்பி வந்த இந்திய கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஒரு மாபெரும் சவாலாய் அமைந்த விஷயம் இரண்டு சேனல்களை எப்படி ஒரே சிக்னலாக மக்களுக்கு அந்தந்த சேனல்களில் அனுப்புவது என்பதுதான் என்று 200க்கும் அதிகமான சேனலகளை பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் சொன்னால் சிரிப்புத்தான் வரும்.

ஒரு கணம் என்ன செய்வதென்றே புரியவில்லை.. முதல் முதலாய் ஒரு பெரிய இழப்பு, திருட்டை நான் பார்க்கிறேன். தினசரிகளில் அங்கே திருட்டு, இங்கே திருட்டு என்று படித்த போது புரியாத உணர்வு இப்போது உணர்ந்தேன். பாதி திறந்து கிடந்த ஷட்டரை திறந்து கொண்டு உள்ளே போனால் எல்லாமே சிதறிக் கிடந்தது, கடை டிராயரில் இருந்த ஒரு ஆயிரம் ரூபாய், மற்றும் பல வீடியோ கேசட்டுகள், கேபிள் டிவி போட வாங்கி வைத்திருந்த நான்கு காயில் பண்டில்கள் எலலாவற்றையும் தூக்கிக் கொண்டு போயிருந்தார்கள். எனக்கு அழுகை, அழுகையாய் வந்தது. ஐம்பதாயிரத்துக்கு மேல் நஷ்டம். உடனடியாய் என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே அங்கிருந்த சேரில் உட்கார்ந்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சகஜ நிலை வருவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. பிறகெழுந்து அப்பாவிடம் சொன்னேன். போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டு, மீண்டும் என் வேலைகளை ஆரம்பித்தேன். என்னடா இது ஆரம்பிக்கும் போதே இப்படியெல்லாம் நடக்கிறதே என்று யோசனை வந்தாலும்.. இன்னொரு பக்கம் அதற்கும் இதற்கும் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று பகுத்தறிவு பேசி வென்றது. என்ன ஐம்பதாயிரத்தை மீண்டும் பிரட்டத்தான் கண் முழி தள்ளிப் போனது. திருடு போனதில் கேபிளை தவிர மற்ற பொருட்களில் பாதி கிடைத்தது தனிக் கதை.

மீண்டும் கேபிள் வாங்கி அதை நிறுவும் வேலையை ஆரம்பித்தோம். மெல்ல ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒயர்களை பிக்ஸ் செய்து இணைப்புக் கொடுக்க, கொடுக்க, பக்கத்து வீடுகளில் லேசான ஆசை எழ ஆரம்பித்து, “சரி எங்களுக்கும் கனெக்‌ஷன் கொடுத்துரு சூர்யா” என்று ஏதோ எனக்காக இணைப்பு எடுப்பது போல ஆர்வம் காட்ட, அந்த முழு காலனிக்கு ஒயர்களை நிறுவி, இணைப்புகளை கொடுத்து முடிக்கும் போது 42 இணைப்புகள் வந்துவிட்டது.

இந்திய நாட்டுக்கே சுதந்திரம் வ்நத அந்த சுபயோக சுபதினத்தில் வெற்றிகரமாக எங்கள் ஒளிபரப்பை ஆரம்பித்தோம். காலை பதினோரு மணிக்கு ஒரு படமும், மாலை மீண்டும் ஏழு மணிக்கு ஒரு திரைப்படமும் போட ஆரம்பித்து கொஞ்சம், டெக்னிக்கல் பிரச்சனைகள் எல்லாம் சரி வர புரிய அரம்பித்து நிலை பெற்றிருந்த நேரத்தில், நான் வைத்திருந்த கண்ட்ரோல் ரூமிற்கு இரண்டு தளத்திற்கு கீழே இருந்த ப்ளாட் ஓனர் ஒருவர். நாளையிலிருந்து இங்கே வச்சி நீ படம் போடக்கூடாது என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இப்போதுதான் திருடு போய் எல்லாப் பிரச்சனைகளையும் சால்வ் செய்து நிலை நிறுத்தும் வேலையில் இதென்னடா புதுப் பிரச்சனை என்று யோசித்தபடி..” சார். நான் இங்க அசோசியேஷன்ல பர்மிஷன் வாங்கிட்டுத்தான் சார் போடுறேன்” என்றது. “ஓ.. அப்படியா.. சூர்யா.. சரி.. அவன் யாரவன் செக்கரட்டரி.. நீ இங்க உக்காந்து படம் போடுறதுக்கு பர்மிஷன் கொடுக்கிறது? எனக்கு டிஸ்டர்பென்ஸா இருக்கு... புரியுதா..? இன்னும் ஒரு வாரம் டைம் தர்றேன்.. நீயா காலி பண்ணலைன்னா.. நான் பண்ணிருவேன் என்று சொல்லிவிட்டு போனவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive