Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Tuesday, December 14, 2010

விருதகிரி

viruthagiri-vijayakanth-3 கடைசியாய் நானும் பார்த்துவிட்டேன். மணிஜி பார்த்துவிட்டு நல்லாத்தான் இருக்கு கேபிள் என்று ரெகமண்ட் வேறு செய்துவிட்டார். அதனால் நானும் பார்த்துவிட்டேன். விஜயகாந்த முதல் முதலாய்  இயக்கும் படம். அதற்காக அவரது இரண்டு கைகளையும் அகல விரித்து வைத்து போஸ் கூட கொடுத்திருப்பதினால் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

இணையத்தில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது அதிலிருந்து எடுத்தது, இதிலிருந்து எடுத்தது என்று சொல்லி டேக்கன் படத்தை சொல்லலாம். ஆனால் விஜயகாந்த் படம் பார்க்க வருபவர்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை என்பது அண்ணா தியேட்டரில் கூடியிருந்த ஆல்மோஸ்ட் ஹவுஸ்புல் கூட்டத்தை பார்த்தால் தெரிந்தது.

வழக்கமான விஜயகாந்த படமாகத்தான் ஆரம்பிக்கிறது. கூடுதலாக ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் டயலாக் பேசி, ஆளும் கட்சியை விமர்சித்து, டைட் க்ளோசப்பில் சிவந்த கண்களுடன் பேசுகிறார். அதையெல்லாம் மீறி வில்லன்கள் கூட சண்டை போடுவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக விஜயகாந்த்தின் அரசியல் பார்வையை பற்றியும், அவரது கொள்கைகளை பற்றி அவரை பேச வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள் என்பது போன்ற ஒரு சில இடர்பாடுகளை தவிர, இண்ட்ரஸ்டாக பொழுது போக்க வைத்திருக்கிறார்கள்.
 viruthagiri-vijayakanth-4
உலக போலீஸெல்லாம் சல்யூட் அடிக்கும் போலீஸ் பெரிய ஆபீஸர் விருதகிரி, ஓப்பனிங் சீனே.. ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இந்தியா போலீஸ் திறமையை காட்டி கலக்கியிருக்கிறார் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்யும்.. . அந்த ஸ்பிரிங் ஷூ போட்ட் சண்டை நல்ல கற்பனை.. ஆனால் அத்துனை பேரையும் மனுஷன் ஒத்தக்கையிலேயே சமாளித்து பொறி கலங்க வைப்பது அட்டகாச காமெடி. வழக்கமாய் பாகிஸ்தானிய தீவிரவாதியாக இருந்தாலும் தமிழிலேயே பேச வைக்கும் விஜய் காந்த் இப்படத்தின் மூலம் கே டிவி  இங்கிலீஷ் டப்பிங் முறையை பயன் படுத்தி, எல்லா வில்லன்களுக்கும் லாஜிக்கலாக தமிழில் டப் செய்துவிட்டிருக்கிறார். சப்டைட்டில் படிப்பதை விட நல்ல தாட்..

என்ன தான் டேக்கன் படத்தை எடுத்தாலும் அதையெல்லாம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரச்சனையோடு இணைத்து, அரவாணிகள், உடல் உறுப்பு திருட்டு, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் பிரச்சனை என்று எல்லாவற்றையும் கலந்து கட்டியதில் நல்ல சுர்ருன்னு ஏத்தித்தான் விட்டிருக்கிறார்கள். நிஜமாக்வே படத்தின் இரண்டாம் பாகம் படு விறுவிறுப்பு..

ஆஸ்திரேலியா என்று படம் பூராவும் மலேசியாவில் உட்டாலக்கடி அடித்திருப்பது மலேசியா, சிங்கை தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். தனக்கென ஜோடி என்று ஏதுவும் இல்லாமல்.. தன் வயதுக்கேற்ற சரியான ரோலைத்தான் கேப்டன் செலக்ட் செய்திருக்கிறார். கதை திரைக்கதை இயக்கம் செய்த கேப்டன், வசனத்தை மட்டும் வேலுமணி என்பவரின் பெயர் போட்டதற்கு பின் குறிப்பு ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது.  பெரும்பாலான காட்சிகளில் அந்த உடம்பை வைத்து அலட்டாமல் வெறும் ப்ரேமை ஆட்டியே ஒரு பெரிய பில்டப்பை கொடுத்திருப்பது.. நல்ல ஐடியா…

சுந்தர் சி. பாபுவின் பின்னணியிசையும், பாடல்களும் செம இரைச்சல் இவைகள் இல்லாவிட்டால் இன்னும் சுறுசுறுப்பாக போயிருக்கும் படம்.  விஜய்காந்த்  படம் என்ற எண்ணத்தை தூக்கி வைத்துவிட்டு,  படம் பார்த்தால் நிச்சயம் விறுவிறுப்பான படம் தான். Inspite Of Taken

விருதகிரி-  ”Taken”
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive