Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, December 3, 2010

சிக்கு.. புக்கு

chikku-bukku-wallpapers-004
இந்த வருடத்தில் ஆர்யா நடித்து வரும் மூன்றாவது படம். முதல் இரண்டு படங்களின் வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்யாவும், ஸ்ரேயாவும் லண்டனின் தனித்தனியே இருக்கிறார்கள். ஆர்யாவின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப்போவதை தடுக்க இந்தியா கிளம்புகிறார். ஸ்ரேயா.. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்புகிறார். லண்டனிலிருந்து பங்களூர் வந்தவர்களுக்கு ஸ்ட்ரைக் காரணமாய் ப்ளைட்டுகள் இல்லாமல் போக.. ப்ளாக் டிக்கெட்டில் கணவன் மனைவியாய் ஒரே ட்ரைனில் பயணிக்க, டி.டி.ஆர். கண்டுபிடித்து இறக்கிவிட, நடராஜா சர்வீஸ், பஸ், சைக்கிள் என்று உலகில் உள்ள எல்லா ஊர்திகளிலும் பயணிக்கிறார்கள், இதற்கு நடுவில் சண்டைப் போட்டு, பிரிந்து, காதலித்து அவரவர் ஊர்களுக்கு போகிறார்கள். இவர்களின் காதல் ஜெயித்ததா? என்பது க்ளைமாக்ஸ்.

Chikku-Bhukku-Movie1
இந்த மெயின் கதைக்கு நடுவே ஒரு ப்ளாஷ் பேக்  இருக்கிறது. அதில் ஆரியாவின் அப்பா ஆர்யா (டபுள் ஆக்‌ஷனுங்கோ) அந்த ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் பெண்ணை காதலிக்க, வீட்டில் எதிர்க்கிறார்கள். அவளுடன் ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்து காத்திருக்கும் போது அவள் வராமல் போக.. ஆர்யா போலீஸ் ட்ரைனிங்கில் போய் சேர்ந்து விடுகிறார். அங்கே அறிமுகமாகும் ஒரு மாக்கான் நண்பன் அவனின் அத்தை பெண் மேல் காதலாகியிருக்க, தான் காதலிக்கும் பெண்ணும், அவன் அத்தை பெண்ணும் ஒருத்தியே  என்று தெரிந்து அவனுக்காக காதலியை விட்டுக் கொடுக்கும் கதையிருக்கிறது. இந்த இரண்டு கதையும் பாரலலாக படம் முழுவதும் ட்ராவல் செய்கிற திரைக்கதை.

ஆர்யாவுக்கு பையன் கேரக்டரை விட அப்பா ஆர்யா கேரக்டர் அம்சம். ஸ்கூலில் டி.இ.ஓவாக வந்து மீனாளை கலாய்க்கும் காட்சியிலும், வீட்டில் அறுபதாம் கல்யாண களேபரங்களின் நடுவே நடக்கும் ரொமான்ஸ் கூத்துக்கள் க்யூட்.. ஆனால் அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் கூட உணர்வுகளை பிரதிபலிக்க மாட்டேன்கிறது. காதலனை வெகு நாட்கள் கழித்து பார்க்கும் போது ஏன் என்னை காண்டேக்ட் செய்யலைன்னு கேட்கற போது கூட சாப்டியா? என்ற  பாவத்தில் முகத்தை வைத்துக் கொண்டு பேசினால் எப்படி காதல் கொப்பளிக்கும்?. முக்கியமாய் இந்த ப்ளாஷ் பேக் ட்ராக்கில் ஊட்டியில் ஏது போலீஸ் டிரைனிங்?. கண்ணாடி போட்டுக் கொண்டு இருப்பவர்கள் எப்படி போலீஸ் டிரைனிங்கில் சேர்ப்பார்கள்? உயிருக்கு உயிராய் காதலித்தவளை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு இவர்களது நட்பில் அவ்வளவு எமோஷனலாக ஏதும் இல்லையே..? அந்த பேக்கு நண்பனின் முகமே மனதில் ஏறாமல் எரிச்சலடையும் போது. அந்த கேரக்டர் மேல் எப்படி இன்வால்மெண்ட் வரும்?. ஆர்யாவுக்கு ஏன் அந்த கேரக்டர் மேல் பாசமும், நட்பும் பொத்துக் கொண்டு வர வேண்டும்?.

chiku
இன்னொரு கரண்ட் லைனான ஆர்யா, ஸ்ரேயா காட்சிகள் படு ஸ்லோ.. இம்மாதிரியான ட்ராவல் படங்களில் மிக இயல்பான நகைச்சுவை மிளிர வேண்டும், அதற்கு இரண்டு வேறுபட்ட கேரக்டர்கள் படத்தினுள் இருக்க வேண்டும். ஸ்ரேயா கேரக்டர் மேல் எந்த விதமான இன்வால்மெண்டும் வரக்கூடிய காட்சிகளே இல்லை. அது மட்டுமில்லாமல் அவர்கள் பேசும் டயலாக்குகள் படு அசுவாரஸ்யமாகவே இருக்கிறது. சாரி.. எஸ்.ராமகிருஷ்ணன் சார். ஆர்யாவின் நடிப்பில் கொஞ்சம் கூட  இன்வால்வ்மெண்ட் இருக்கவே இல்லை. ஸ்ரேயா மட்டுமே நடிக்க முயற்சி செய்திருந்தாலும் ரொம்பவும் அப்நார்மலான பெண்ணாய் தான் தெரிகிறாரே தவிர நார்மலாக இல்லை.. அதுவும் சில வருடங்களாய் தான் லண்டனில் இருக்கும் பெண் எனும் போது கொஞ்சம் ஓவர் அல்டாப்பாய் தான் தெரிகிறது. க்ளைமாக்ஸில் எப்படி சேரப் போகிறார்களோ என்ற பதைப்பு எழவு வர வேண்டாமோ..?

படத்தில் பாராட்டப் படவேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். லண்டனாகட்டும், கூர்க், மற்றும் இந்திய மலைப் பிரதேசங்களாகட்டும், ப்ளாஷ் பேக் காரைக்குடி, ஊட்டியாகட்டும் சும்மா மனசை அள்ளும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இசை ஹரிஹரன் – லெஸ்லி  பின்னணியிசை பிரவீன் மணி.. இரண்டு பேருமே மிகப் பெரிய லெட் டவுன்.  இம்மாதிரியான படங்களுக்கு மிகப் பெரிய பலமே பாடல்களும், பின்னணியிசையுமாய் தான் இருக்க வேண்டும் இந்த ரெண்டுமே கவிழ்த்துவிட்டதால் பாதி புஸ்..

Chikku-Bukku _11_
எழுதி இயக்கிய மணிகண்டன். ஜீவாவின் உதவியாளர். தாம்தூமை ஓரு வழியாய் ஜீவாவுக்கு பிறகு முடித்தவர். ஜீவாவிடம் ஒரு நல்ல பழக்கமிருந்த்து, அவர் இன்ஸ்பயர் ஆகும் படங்களை மிக அழகான விஷுவல், மற்றும் இசையால் இன்வால்வ் செய்துவிடுவார். அவரது உள்ளம் கேட்குதே, 12பி, தாம் தூம் போன்றவை இன்ஸ்பிரேஷன் படங்களாய் இருந்தாலும் அவரின் இம்பாக்ட் இருக்கும். நீங்கள் இன்ஸ்பயரான கிளாஸிக்கில் இருக்கும் அந்த காதலும், ரொமான்ஸும் இப்படத்தில் இல்லவே இல்லை.. மற்ற டிபார்ட்மெண்டான வசனம், இசை ஆகியவை கைவிட்டிருந்தாலும், உங்களது திரைக்கதை கைவிடாமல் இருந்திருந்தால் ஆர்யாவுக்கு, ஹாட்ரிக்கும், உங்களுக்கு முதல் ஹிட்டாகவும் அமைந்திருக்கும்..

சிக்கு.. புக்கு – ட்ரையின் கிளம்பவேயில்லை.

டிஸ்கி: நாளை காலை கலைஞர் டிவியில் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில், நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான “போஸ்ட்ர்” என்கிற குறும்படம் காலை. 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

மதியம் நான், மணிஜீ, பலாப்பட்டரை, விந்தை மனிதன், கே.ஆர்.பி, ஜாக்கி கலந்து கொண்ட நந்தலாலா படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். விஜய் டிவியில் மதியம்2.00 மணிக்கு..  ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive