Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Thursday, December 2, 2010

தா

Tha_Movie_Stills_018
மீண்டும் ஒரு சிறிய பட்ஜெட் படம். மூச்சு முட்டக்கூடிய அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடுக்குகளில் கிடைக்கும் புதிய வெளிச்சமும், காற்றைப் போல இறுக்கத்தை குறைக்க சில படங்கள் வரத்தான் செய்கிறது.

tha_movie_photos_21
கல்யாணக் கோலத்தில் இருக்கும் சின்னக் கண்ணா என்கிற சூர்யா தன் திருமணத்தை பற்றி பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. சின்னக்கண்ணன் என்கிற சூர்யா.. தன் உருவத்தை பற்றியோ, அழகை பற்றியோ… கவலையில்லாமல், ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்துவிட்டு, நற்பணி மன்றம், நண்பர்கள், தண்ணி, பீடி என்றலையும் சாதாரணன். பெண்கள் விஷயத்தில் துளியும் ஆர்வமில்லாதவன். நிமிர்ந்தே பார்க்காதவன். முரடன். நண்பனின் தங்கை காதலிக்கும் ஆளை நண்பன் சொன்னதால் அடித்துவிட, வெகுண்டெழுந்த தங்கை, முரடனான உனக்கு பெண்களின் மனசை பற்றி என்ன தெரியும் என்று சொல்லி திட்ட, அது முதல் பெண்களை பற்றிய பார்வை மாறி, தானும் காதலிக்க ஆரம்பிக்க முயற்சி செய்யும் வேலையை ஆரம்பிக்கிறான். இவனின் ஆர்வம் தெரிந்து அவனுக்கு வீட்டில் ஒரு காலேஜ் படிக்கும் பெண்ணை பார்த்து முடிவு செய்ய, அவளின் அழகை பார்த்து பிரம்மித்து போகிறான் சூர்யா.. பார்த்த மாத்திரத்தில் அவள் மேல் காதல் கொள்கிறான். ஆனால் அவளுக்கோ.. இவனை பிடிக்கவில்லை. திருமணம் நடந்த்தா? இல்லையா? எனபதை உருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள்.

tha_movie_photos_28
முதலில் மதுரை ஸ்லாங்கில் படமெடுத்து வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை இல்லாமல் கோவை பாஷை காதுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. முக்கியமாய் நாயகனின் தாய்.. ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் நர்வஸாக இருந்தாலும் பின்னால் வரும் காட்சிகளில் நடந்து கொண்டே பேசி க்ளாப்ஸ் வாங்குகிறார். சின்ன கண்ணனின் நண்பர்களாய் வரும், வட்டிக்கு விடுபவன், படிக்காமல் சரக்கடிப்பதற்காகவே அலைபவன், வீடியோ, போட்டோ ஸ்டூடியோ நடத்திக் கொண்டே வரும் பிகர்களை கரெக்ட் செய்யும் அன்பு, அவனின் மச்சான், சிகப்பு ரோஜாக்கள் காலத்தில் இளைஞனாக இருந்து இப்போதும் பதினாறு வயது பெண்ணைத்தான் லவ் பண்ணித்தான் கல்யாணம் செய்வேன் என்றலையும் ஒருவன் என்று இயல்பான கிராமமும் நகரமுமில்லாத ஊர்களில் காணப்படும் கேரக்டர்கள். ஓரிரண்டு காட்சிகளில் கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் இம்பரசிவ்.
Tha_Movie_Stills_020 முக்யமாய் அவர்கள் நண்பர்களில் ஒருவர் பஸ்ஸ்டாண்டில் வரும் பெண்ணை காதலிக்க, காதல் ஓக்கே ஆக அந்த பெண் அட்வைஸ் செய்யும் காட்சிகளும், அதற்கு பிறகு நடக்கும் காட்சிகளும் குபீர் சிரிப்பு. நிச்சயம் இந்த வருடத்தின் சிறந்த  நகைச்சுவை. அந்த பெண்ணின் டயலாக் டெலிவரியும், இவரது ரியாக்‌ஷன்களும் அய்ய்யயோ.. அதகளம்.

படத்தில் நடித்திருக்கும் எலலா நடிகர்களும் புதுமுகங்களாய் இருந்தாலும் கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு பளிச், பளிச். முக்கியமாய் அந்த பிகர் மடிக்கும் அன்பு, தண்டல் கொடுக்கும் நண்பன், அந்த காமெடி நண்பன், பஸ்ஸ்டாண்ட் பெண், என்று எல்லா கேரக்டர்களும் மின்னுகிறார்கள்.

கதாநாயகன் ஸ்ரீஹரிக்கு அறிமுகம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பு வருகிறது. ஆரம்பக்காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் நிறைவாய் செய்திருக்கிறார். கதாநாயகி நிஷாவின் முகம் கொஞ்சம் முத்தலாய் கோவைப் பெண் போலில்லாம அந்நியப்பட்டு இருந்தாலும் ஸ்ரீஹரிக்கும் அவருக்குமான காதல் காட்சிகளில் மிக இயல்பாய் பழக்கமாகிவிடுகிறார்.

ஸ்ரீவிஐய்யின் இசையில் பின்னனியிசையை விட பாடல்கள் அருமை. அதிலும் சின்ன கண்ணனுக்கு காதல் பற்றி ஒரு உணர்வு வரும் போது வரும் பாடலும், தன் வருங்கால மனைவியை கொச்சியிலிருந்து அழைத்து வரும் போது வரும் பாடலும் நிச்சயம் ஹிட் லிஸ்ட். பின்னணியிசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Tha_Movie_Stills_022 எழுதி இயக்கியவர் புதியவர் சூரியபிரபாகர். முதலில் படத்தின் களத்தை மதுரையிலிருந்து கோவைக்கு மாற்றியதற்கு வந்தனம். வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க.. என்று கேட்டுக் கேட்டு அலுத்து போய்விட்டிருந்த நேரத்தில் கோவை ஸ்லாங்.. இனிமை.  ஆரம்ப் காட்சியில் கொஞ்சம் கிராமம், அராத்து ரவுடிப்பையன், தண்ணி, குத்து பாட்டு, பைட் என்று க்ளிஷேவாக சென்றாலும், இடைவேளை வரும் போது கதாநாயகியை அறிமுகப்படுத்தி நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வருவது என்பது ஒரு புதிய முயற்சிதான் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஸ்ரீஹரி மறந்து போய் தன் பாக்கெட்டில் காண்டம் பாக்கெட் வைத்துவிட, திடீரென எழுந்து பார்த்து தேடும் ஸ்ரீஹரி, அம்மாவிடம் சட்டைய ஏன் தோய்ச்சே? என்று கேட்க, என்னைக்கு நான் தானேடா தோய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியில் பையனுக்கு பெண் பார்க்க போகும் காட்சியில் என்ன திடீர்னு என்று கேட்கும் அப்பாவிடம், “என்ற பையனுக்கு எப்ப எதை செய்யோணுமின்னு எனக்கு தெரியும்” என்று சொல்லுமிடம் அருமை. அந்த காண்டம் மேட்டரை பார்த்துவிட்டு தான் இந்த ஏற்பாடு என்பதை மிக இயல்பாய் ஆனால் நச்சென சொல்லியிருக்கிறார். பின்பகுதியில் வரும் காட்சிகள் எல்லாமே நண்பர்களுக்குள் நடக்கும் பிரச்சனையாகட்டும், மற்ற காதல் காட்சிகளாகட்டும் சுவையாக சொல்லியிருக்கிறார். எதிர்பார்ககாத க்ளைமாக்ஸுடன். தலைவா.. எனக்கொரு கேள்வி தாங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?
தா- மீண்டும் ஒரு குட்டி பொக்கே
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive