Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, December 10, 2010

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

Sanikizhamai_Sayangalam_5_Mani_Movie_Stills_39
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி என்கிற ஒரு சிறு பட்ஜெட் படக்குழுவினரின் அடுத்த படைப்பு. முதல் படம் சாதாரண HDVயில் எடுத்தார்கள். படத்தை பற்றிய விளம்பரம் வித்யாசமாய் செய்து மக்களிடையே ரீச்சாகி தியேட்டரில் வசூலாவகில்லை என்றாலும், சாடிலைட் ரைட்சிலேயே படத்தின் இன்வெஸ்ட்மெண்டை எடுத்து லாபம் பார்த்தவர்கள். இவர்கள் அடுத்த முயற்சியும் டிஜிட்டல் தான். ஆனாம் இம்முறை Canon 5D HDSLR கேமராவில் எடுத்திருக்கிறார்கள். உலகின் முழு முதலாக அந்த கேமராவில் எடுக்கப்பட்ட படம் என்று லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
 Sanikizhamai_Sayangalam_5_Mani_Movie_Stills_51 டிஜிட்டல் முறையில் எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம் நம்ப முடியாது. மிக அருமையான ஒளிப்பதிவு.  வழக்கமாய் டிஜிட்டல் படங்களில் உள்ள க்ரெயின்ஸ் இல்லவேயில்லை. ரெட் ஒன் தவிர மற்ற எல்லா கேமராக்களிலும் க்ரெயின்ஸ் லேசாக தெரியும். ஆனால் இதில் பளிச். வாழ்த்துக்கள் ஒளிப்பதிவாளருக்கும், காமெரா கண்டுபிடித்தவர்களுக்கும். நிறைய பேர் இப்போது இந்த கேமராவில் தான் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய படங்களில் ஒரு சில காட்சிகள் எடுத்து சேர்த்திருக்கிறார்கள். சமீபத்தில் பாலாஜி சக்திவேல், வேலு பிரபாகரன், மற்றும் பல பேர் இந்த கேமராவில படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலத்தில் பட பட்ஜெட்டில் மிகப் பெரிய ஒரு லாபத்தை கொடுக்கப் போகும் டெக்னாலஜியை வரவேற்போம். ஒளிப்பதிவில் முக்கியமாய் கொடைக்கானல், மூணாறு, போன்ற லொக்கேஷன் இவர்களுக்கு மிகவும் உதவியிருக்கிறது. சூசைட் செய்து கொண்ட பாடியை எடுத்து வரும் காட்சியில் ஜிம்மி ஜிப் இல்லாமலேயே எடுக்கப்பட்ட விஷுவல்ஸ் அருமை. பாராட்டுக்கள் எஸ்.பி.எஸ்.குகன் அவர்களே
Sanikizhamai_Sayangalam_5_Mani_Movie_Stills_59 சரி கதைக்கு வருவோம். ஒரு சனிக்கிழமையன்று  பிடிக்காத திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பித்து, தன் காதலனை பார்க்க வத்தலக்குண்டுக்கு பஸ் ஏறுகிறாள் கதாநாயகி. தொடர்ந்து பஸ்ஸிருந்தபடியே காதலனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். வந்தலக்குண்டில் அவளுக்காக காத்திருக்கும் காதலன் அவள் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறான். அவளுடய போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்க, அவள் வந்த பஸ் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. அங்கே போய் தேடிப் பார்த்தால் அந்த லிஸ்டிலும் அவள் இல்லை. கொடைக்கானலில் பஸ் ஏறியவள் காணாமல் போய்விட்டாள் எங்கே போனாள்? என்னாயிற்று அவளுக்கு? என்று ஒரு பக்கம் அவளின் குடும்பமும், இன்னொரு பக்கம்  தாய்மாமாவும் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டருமானவரும் தேட, இன்னொரு பக்கம் காதலனும் அலைய.. அவள் கிடைத்தாளா? இல்லையா என்பதுதான் கதை.
Sanikizhamai_Sayangalam_5_Mani_Movie_Stills_58 ஒரு அருமையான த்ரில்லர் கம் இன்வெஸ்டிகேஷன் படமாய் வந்திருக்க வேண்டியது திரைக்கதையாலும், நடித்த நடிகர்களாலும், ஒரு சவ சவ படமாய் போய்விட்டது.  ஆரம்ப காட்சியிலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்  காதல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காமெடி என்று மெனக்கெட்டு படத்தின் ஓட்டத்தை ஸ்லோவாக்கியிருக்க வேண்டாம். ஒரு கதாநாயகியை காட்டுகிறார்கள். அவளை காணவில்லை என்றால் நம் மனதும் தவிக்க வேண்டும். நாமே அவள் தொலைந்தால் நல்லாருக்கும் என்று நினைக்கும்படியாக இருந்தால் எப்படி படத்தில் ஒட்ட முடியும். தேவையில்லாத இடங்களில் பாடல்கள், சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களின் க்ளீஷே காட்சிகள், ஒவ்வொரு காட்சியிலும் எதாவது ஒரு கேரக்டர் வசனங்களை திரும்ப, திரும்ப பேசுவது அநியாயக் கொடுமை. டிவி சீரியலில் புட்டேஜுக்காக பேசுவார்களே அது போல இருக்கிறது. 
Sanikizhamai_Sayangalam_5_Mani_Movie_Stills_48இடைவேளை வரை ஆரம்ப விறுவிறுப்பை நம்பி போய்விட்டார்கள். நடுநடுவே வரும் காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் ஏற்கனவே ஸ்லோவாக போகிற படத்தை இன்னும் ஸ்லோவாக்குகிறது.  யார் தேடியும் கிடைக்காத கதாநாயகியை எந்த வழியில் தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும் என்று கதாநாயகன் முடிவுக்கு வர, ஒரு சீன் வைத்திருக்கிறார்கள். படு சீரியல் தனம்.  கதாநாயகன் சரத் பார்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறார்.  ஆனால் நடிப்புத்தான் வர மாட்டேன்கிறது. கதாநாயகன், கதாநாயகி, இன்ஸ்பெக்டர், வில்லன், என்று எல்லார் நடிப்பிலும் படு அமெச்சூர்தனம் தெரிகிறது. கதாநாயகியை விட அவளது தோழியாய் வருபவர் கச்சிதமாய் நச்சென இருக்கிறார். அவர் முகத்திலிருக்கும் ஒரு இயல்பு தன்மை கதாநாயகி முகத்தில் இல்லை. எப்படியிருந்து என்ன ஒரு நல்ல த்ரில்லர் படம் மிஸ்ஸாயிருச்சு.

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி- டிஜிட்டல் முயற்சிக்காக
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive