Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Sunday, December 5, 2010

கொத்து பரோட்டா-06/12/10

விக்கி லீக்ஸ் லீக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களை  பார்த்தால் அமெரிக்கா மட்டுமல்ல உலகில் உள்ள அத்துனை நாடுகளுமே ஆட்டம் கண்டுவிடும் போலிருக்கிறது. அந்த இணையதளத்தின் டி.என்.எஸ் சப்போர்டை அமெரிக்க சர்வரிலிருந்து தூக்கி விட்டார்கள். இனிமே விக்கிலீக்ஸ் தளத்துக்கு அதனுடய ஐ.பி. http://213.251.145.96/ இந்த லிங்கில் போய் தான் சைட்டை பார்க்க முடியும். சீப்பை ஒளிக்கிறது அமெரிக்கா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார சந்தோஷம்
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “போஸ்டர்” குறும்படம் அந்த வாரத்தின் சிறந்த படமாக தேர்வு பெற்றதும், நான் குரல் கொடுத்த நடிகருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்ததும்.  தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும் பாராட்டிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.. இந்த வெற்றி பெற்ற முடிவுகள் முன்னமே எனக்கு தெரிந்திருந்தாலும், அப்போது கிடைத்த சந்தோஷத்தை விட ஒளிபரப்பாகி கிடைத்த பாராட்டுகள் தான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சொந்த காசை போட்டு மிச்சம் மீதி கிடைத்த பட்ஜெட்டில் மிக அருமையாக இயக்கிய ரவிக்குமாருக்கு பாராட்டுக்கள். இவர்களின் அடுத்த படத்திற்கும் சிறு துரும்பாய் உதவியிருப்பது மேலும் உற்சாகம் தருகிறது.
################################################################### 
இந்த வார வீடியோ
மிக அருமையான ஒரு ஜுகல் பந்தி..
###################################################################
இந்த வார தத்துவம்
ஒவ்வொருனுடய முதல் பீர் அவன் காசில் வாங்கியதல்ல..

உன் போக்கில் போ, நீ நினைத்ததை பேசு அப்புறாம் உலகம் சொல்லும் அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் தறுதலைன்னு..
###################################################################
நண்பேண்டா
காதலன்: உனக்காக எதை வேணா விட்டிருவேன்
காதலி: சிகரெட், காதலன் : ஓ யெஸ், காதலி காதலி : குடிக்கிறது, காதலன் : யெஸ், காதலி : உன்னோட ப்ரெண்ட்ஸ்? காதலன்: தங்கச்சி நீ சீக்கிரம் வீட்டுக்கு போம்மா.. அம்மா வீட்டுல தேடுவாங்க.. நண்பேண்டா..
###################################################################
இந்த வார குறும்படம்
வழக்கமாய் பிக்ஸாரின் படங்கள் எல்லாம் குழந்தைகளுக்கான காமெடியாகத் தான் இருக்கும். ஆனால் இது கொஞ்சம் வித்யாசம்..ஆனா என்ன அனிமேஷன்பா…
###################################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலைக் கேட்டவுடன் நிச்சயம் ஒரு கணம் கிண்டலடிக்கத் தோன்றும். ஆனால் இன்றளவிலும் எட்டு கட்டையில் பாட அதிலும் பிருகாவில் உச்சஸ்தாய்யில் பாட இவரை விட்டால் வேறு யாரும் இருப்பதாய் தெரியவில்லை. சாதாரண ஹைபிட்சுக்கே டபுள் ட்ராக் போட்டு ஒப்பேத்தும் ஆட்களுக்கிடையே.. இவர் ஒரு சகாப்தம் தான்.
##################################################################
இந்த வார விளம்பரம்
#################################################################
போன வாரம் ஒரு கணக்கு கேள்வி கேட்டு என்னை துவைச்சவரை நீங்க சொன்ன ஆன்ஸரை வச்சி அசத்திப்புட்டேன். ஆனா இந்த வாரம் இன்னொரு கணக்க கொடுத்திட்டாரு..  அதனால மக்களே.. தயவு செஞ்சு என் மானத்தை காப்பாத்துங்கோ..
2 3 4 15 12
3 4 5 28 20
4 5 6  X Y
5 6 7 66 42
6 7 8 91 56
அந்த X, Y என்னான்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.
###################################################################
மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கோலாகலமாய் நடந்ததை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். நான் ஏற்கனவே போன வாரம் சொன்ன கிசுகிசு உண்மையாகிவிட்டது. நிகழ்ச்சி அருமையாய் இருந்தாலும் விஜய் டிவியின் மூன்று நிமிட நிகழ்ச்சி, எட்டு நிமிட விளம்பரம் கடுப்பேற்றியது. சூப்பர் சிங்கர்ஸை வைத்தே நிகழ்ச்சி முழுவதும் செய்தது நன்றாக இருந்தாலும் கொஞ்சம் மொனாட்டனி ஆகிவருவதை தவிர்க்க வேண்டும் விஜய் டிவி. நிச்சயம் ஒரு பக்கா காமெடி எண்டர்டெயினரை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. கூடியிருந்த கூட்டத்தை பார்த்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களில் யாரும்  யாருக்கும்  சளைத்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. கமல் கவிதை பாடிய போது த்ரிஷாவின் முகத்தில் தெரிந்த அந்த க்யூட்டான சிரிப்பும், ஆர்வமும்.. அட எனக்கும் திரிஷாவை பிடிக்க ஆரம்பிச்சிருச்சோ?..
###################################################################
சென்ற வாரம் நாங்கள் சென்றிருநத தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னால் வேறொரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்துவிட்டு வந்திருந்த பங்கேற்பாளர்கள் எல்லாருமே ஒரு கொரியன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமா? என்று கேட்ட போது படத்தின் ஹீரோ, ஒளிப்பதிவாளர், இயக்குனர் எல்லோருமே நோ. கமெண்ட்ஸ் என்று சொன்னார்கள். அவர்கள் அங்கு சொன்னது வருதான்னு பாக்கணும் இந்த வாரம்
################################################################### தமிழக் அரசியல் இந்த மழை கொட்டும் வேளையில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.  விரைவில் வரவிருக்கின்ற தேர்தலுக்கான வீயூகங்களும், யூகங்களும், ஊழல், நல்லாட்சி, மைனாரிட்டி ஆட்சி, நான் யாரோடும் இல்லை, நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, ஜாதிக் கட்சிகள், லெட்டர் பேட் கட்சிகள் என்று எல்லாருமே ஆளாளுக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை ஊதி பெருசாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் முதல்வர் அவர்கள் தன் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். பார்பவர்களூக்கு ஏதோ காமெடி போல தோன்றும். ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னால் ஒரு வலை இருக்கிறது அதில் யாரு யாரு மாட்டுவாங்களோ? ஆல் ரெடி ஒருத்தர் மாட்டிட்டாங்கன்னு நினைக்கிறேன்.
###################################################################
ஜோக்
பர்ஸ்ட் நைட்டுக்கும் லாஸ்டு நைட்டுக்கும் வித்யாசம்? பெட்டு மேல பூ போட்டு அதுல படுத்தா அது பர்ஸ்ட் நைட். நம்மள படுக்க வைத்து நம்ம மேல பூ போட்டா.. அது லாஸ்ட் நைட்டு
###################################################################
அடல்ட் கார்னர்
ஒரு இளைஞன் ஒருவன் ரயிலில் இஞ்சி மொரப்பா. இஞ்சி மொரப்பா என்று கூவி கூவி விற்றுக் கொண்டு வர… அவனை ஒரு ஆண்டி கூப்பிட்டு அருகே அழைத்து “தம்பி.. மொதல்ல.. “ … சை மறைப்பா..” என்று ஜிப் போட சொன்னாள்.
###################################################################
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive