Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, November 26, 2010

நந்தலாலா

Nandalala
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை.

nandalala_movie_pictures_02
ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில் இவர் நின்றால் நாமும் நிற்கிறோம். இவர் ஓடினால் நாமும் ஓடுகிறோம். கூடவே பயணிக்க வைத்த மகேஷ் முத்துசாமியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் எல்லோருமே ஷாலினி முதல்.. நேற்றைய மைனாவில் வரும் சிறுவன் வரை வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கையுமாய் பார்த்து பார்த்து சலித்து போன கண்களுக்கு இப்படத்தில் வரும் சிறுவன் அஸ்வத் வெல்லக்கட்டி. முதல் காட்சியில் தலை குனிந்து த்ன் வெறுமையை வெளிகாட்டும் காட்சியாகட்டும், தனித்து பாட்டியுடன் வாழும் நிலையில் உள்ள அவனின் மெச்சூரிட்டியும், படித்த பையனுக்கே உரிய புத்திசாலித்தனமுமாய் சேர்ந்து மிளிர்கிறான். க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் பேசும் வசனம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரியாலிட்டிக்கு மேலே.. மற்றபடி.. ரியலி வெரி குட் பர்பாமென்ஸ்.

nandalala_movie_pictures_04
இவருடனே தன் தாயை தேடி போகும் மெண்டல் கேரக்டருக்கு மிக சரியாய் பொருந்துகிறார் மிஷ்கின். ச்ச்சிலீர் என்று ரோடியோ பெட்டியை ஒடைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல, இடது கை ஆள்காட்டி விரலை சுவற்றில் தேய்த்தபடியே அறிமுகமாகுமிடத்திலிருந்து மெல்ல, மெல்ல நம் மனதில் இறங்கி உட்கார ஆரம்பித்துவிடுகிறார். அவர் பைத்தியம் என்பதாலே பிதாமகன் போல மிகவும் அரகண்டாக ஆளாய் காட்டாமல் மிதமாக கொஞ்சம் அக்ரஸிவாகவும், இன்னும் சில இடங்களில் கையாலாகாமல் அடிவாங்குபவராகவும், மிக சரியான மாடுலேஷனில் சில இடங்களில் பேசி கைத்தட்டல் பெறுகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் இவர் மன நலம் குன்றியவரில்லையோ என்று சந்தேகிக்க வைக்கும்படியான காட்சி வருகிறது.

nandalala-wallpapers01
படம் நெடுக சிறு சிறு கேரக்டர்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அடிக்கடி அகியிடம் பணம் கேட்கும் வேலைக்காரி, அந்த வழிப்பறி செய்யும் வேலையற்றவன்,  காலில் அடிப்பட்டதும் தொடர்ந்து பாவாடையை மிஷ்கின் தூக்க அடித்துக் கொண்டேயிருக்கும் அந்த ஸ்கூல் பெண்ணிடம், வலிக்குதா எச்சி வச்சிக்க ஜில்லுனு இருக்கும் என்றதும் ஆச்சர்யமாக பார்த்து நெருங்குவதும், கிளம்புகையில் ஓடிப்போய் அவள் கையில் நான்கு கூழாங்கற்களை கொடுப்பதும், சிறுவனுக்கு முத்தமும், மிஷ்கினுக்கு ஒரு  தயக்கத்துடனான ஒரு தோள் சாய்தலுடன் திரும்பி பார்க்காமல் ட்ராக்டரை கிளப்பிக் கொண்டு போகையில் நம் மனதில் நிற்கிறாள். அவள் திரும்பி ஃப்ரெமிலிருந்து வெளியேறும் வரை ஷாட் எக்ஸ்டண்ட் ஆவதும் அட்டகாசம். அந்த முகமே தெரியாத பஸ் கண்டக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், லாரி டிரைவர், ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வரும் நாசர், ரோட்டோர விபச்சாரி ஸ்னிகிதா, நொண்டி ஆள், ஜாதி கலவர கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்,  கடோத்கஜன்களான ட்ராவலர்கள், ஸ்னிகிதாவை கடத்த முயற்சிக்கும் வயதான ”போய்” கட்டு கிழவன், அந்த சிகப்பு டெம்போ, புது மண தம்பதிகள்,  ஓப்பன் கார் பீர் இளைஞர்கள், அகியின் அம்மா, அந்த கண் தெரியாத கிழவி, மிஷ்கினின் குடும்பம் என்று படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும் வண்ணமாய் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மிக குறைந்த அளவான டயலாக்குளை மட்டுமே வைத்து பல உணர்வுகளை பல கேரக்டர்கள் மூலம் உணர்த்துகிறார். கொஞ்சம் அந்நியமான கேரக்டர்கள் என்றால் அந்த மோட்டார் பைக் மொட்டை தடியன்கள் தான். ஆனால் அடிக்கடி ட்ராவல் செய்யும் ஆட்களிடம் கேட்டால் இது மாதிரி வித்யாசமானவர்களை அவர்கள் சந்தித்திருப்பதை சொல்வார்கள். நான் கூட சென்னையில் ஒரு பெரியவரை பார்ப்பேன். பூணூல் தரித்த மேல் சட்டை போடாமல் நீண்ட தாடியுடைய பெரியவர், பழைய கைனடிக் ஹோண்டாவில் தலை முழுக்க முண்டாஸுடன், விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, வண்டியின் பின் பக்கம் பூராவும் ஒரு பெரிய பெட்டியில் ஏதோ ஒரு விளம்பரத்தையும் அந்த ப்ராடெக்டையும் ஒரு ரோடியோ பெட்டியை ஸ்பீக்கருடன் கட்டிக் கொண்டு அலைவார்.

nandalala_movie_pictures_05
இப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓசையோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி.  பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா க்டைசி இருப்து நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். என்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும்  வசனமேயில்லாத சிங்கிள் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும்  மொட்டை என் மொட்டை..

படத்தை பற்றிய ஒரு குற்றச்சாட்டு இது ஒரு ஜப்பானிய படமான கிகிஜிரோவின் காப்பி என்று,  கிகிஜிரோவின் கான்செப்ட்தான் ஆனால் காப்பியில்லை. அதைஉள்வாங்கி மிஷ்கின் தந்திருக்கும் வர்ஷன் வேறு. சரி விடுங்க அப்படித்தான் என்று சொல்பவர்களுக்கு கிகிஜிரோ தராத ஒரு உணர்வை இப்படம் எனக்கு தந்திருக்கும் பட்சத்தில் இப்படம் நிச்சயம் நல்ல படமே. படத்தை பற்றி யோசிக்கையில் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் படம் பார்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இம்பாக்ட படித்துவிட்டு பார்த்தால் கிடைக்காது என்பதால் சொல்லவில்லை.
nandalala-ja12-2009 குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. ஒரிரு காட்சிகள்,முக்கியமாய் ஷாட் ப்யூட்டிக்காகவே ரொம்ப நேரம் நின்று கொண்டேயிருப்பது, லெந்தியான ஸ்டாண்ட் ஸ்டில் காட்சிகள். ஆனால் அது உணர்த்தும் விஷயங்கள் நிறைய.  சில க்ளிஷே காட்சிகள், க்ளைமாக்ஸ் முடிந்து வரும் காட்சி போன்றவைகளை சொல்லலாம்.

ஐங்கரன் சுடச் சுட வெளியிட்ட படமெல்லாம் வந்த சூட்டிலேயே பெட்டிக்குள் போய் விட, வெளியிட முடியாமல் இழுத்தடித்த படமெல்லாம் நின்று விளையாடுகிற காலம் போலருக்கு.. பேராண்மை, அங்காடித்தெரு, இப்போது  நந்தலாலா அதில் ஒன்று.. 150 கோடி செலவில்  எந்திரனை  தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை  சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
நந்தலாலா – வாழ்க்கையின் பயணம்  A MUST SEE FILM
கேபிள் சங்கர்
டிஸ்கி: ஒரே நாளில் இரண்டாவது முறையாய் படத்தை பார்த்துவிட்டு வருகிறேன். பாதிப்பு குறையவேயில்லை...

No comments:

Post a Comment

Followers

Blog Archive