Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Monday, December 19, 2011

நான் – ஷர்மி - வைரம் -12

12 ஷர்மி
என் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.

ஒரு விதத்தில் அவனை பார்க்க பாவமாயிருந்தது. அடிப்பட்ட பார்வையுடன், என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அலைபவனாகவே இருந்தான். ரேஷ்மாவின் அக்கா திருமணத்தின் போது அவன் வழக்கம் போல தூரத்திலிருந்து என்னை பார்ப்பதை உணர்ந்து அழைத்தேன். தயங்கித் தயங்கி வந்தான். அந்த மண்டபத்திலிருந்த மாடி ரூமில் அவனை கூட்டிச் சென்று கதவை சாத்தி, அவனின் கைகளை பிடித்தேன். சில்லென்று இருந்தது. சரேலென கையை இழுத்துக் கொண்டான்.


“உனக்கென்ன வேணும் என்னைத் தொடணும் அவ்வளவு தானே..? வா..தொடு.. நல்லா தொடு.. “ என்று அவன் கைகளை இழுத்து வைத்து, முகம், மார்பு, இடுப்பு என்று தடவினேன். வலுக்கட்டாயமாய் அவன் கைகளை விலக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவனின் அழுகை எனக்கு ஒரு மாதிரியிருந்தது. சிறிது நேரம் அவனை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

“நான்.. நான்.. உன்னை அப்படி நினைக்கல.. ப்ளீஸ்.. ஐ ஃபீல் கில்டி. அன்னைக்கு...அன்னைக்கு.. சாரி... சாரி.. யு..நோ.. ஐ லவ் யூ..ஸோ..மச்.. என்னால் உன்னை அப்படி நினைக்கவே முடிவதில்லை” என்றான். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. என் செய்கை எனக்கே அசிங்கமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் எனக்கு காதல் என்ற எதுவும் வரவேயில்லை. தமிழ் சினிமாவில் மட்டுமே சிம்பதியால் காதல் வரும் என்பது என் எண்ணமாகவேயிருந்தது. ஏதும் பேசாமல் அவன் கன்னத்தை தடவிவிட்டு நகர்ந்தேன். ஆனால் அவன் பின் தொடர்வது மட்டும் நிற்கவேயில்லை.

திருப்பத்தை பற்றிச் சொல்ல வந்துவிட்டு வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல.. வளைந்து, நெளிந்து திரும்பத் திரும்ப ஒரே பாதையில் ஓடுவது போல் தெரிந்தாலும், ஒவ்வொரு சறுக்கலிலும் ஏற்படும் அடிவயிற்று கத்திக்குத்தும், ஏற்றத்தில் கிடைக்கும் உற்சாக எக்ஸ்டசியினால் கிடைக்கும் அனுபவங்கள், ஒவ்வொரு முறையும் வேறுபட்டுக் கொண்டேதானிருக்கும். வெகு சிலரால் தான் உச்சஸ்தாயியில் கத்தாமல், இறுக கண் மூடிடாமல், கடவுள் பெயரை கூப்பிடாமல், வேகத்தோடு அட்ரிலின் மண்டைக்குள் ஏற, முகம் முழுக்க, பிய்ந்து போகும் காற்றின் எதிர்திசையில் பயணிக்க முடியும். மிகவும் சாதாரண நிலையிலிருந்து வெகு உயரத்திற்கு சென்ற என் அப்பாவினால் அந்த நேரத்தில் அரசு எடுத்த முடிவினால் டிராக்கில்லாமல் தலை குப்புற வீழ்ந்தது போல அந்தரத்திலிருந்து வீழ்ந்தார்.

பைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் நாற்பது சதவிகிதம், ஐம்பது சதவிகிதம் வட்டி தருகிறேன் என்று வாங்கிய பணத்தை, எல்லாம் நிலத்திலும், தேக்கு மரத்திலும் இன்வெஸ்ட் செய்திருந்தார்கள். அந்நேரத்தில் ஊரில் லட்சத்திற்கு இருந்த இடமெல்லாம் பத்து லட்சத்திற்கும், பதினைஞ்சு லட்சத்திற்கு போக, ஏகப்பட்ட்தாய் புழங்கும் பணத்தை இன்வெஸ்ட் செய்ய, இருந்த போட்டி இப்படி எல்லாம் சேர்ந்து ஐந்துரூபாய் பொருள் ஐம்பது ரூபாயாக ஏறியது. அந்த இட்த்தை சின்ன மேடம் வாங்கியிருக்காங்க, இந்த இடத்தை இவங்க வாங்கியிருக்காங்க என்று பேசுவது சகஜமாகிப் போன ஒன்றாய் இருந்த காலம் அது. ரியல் எஸ்டேட் மார்கெட் உச்சத்தால் ஏற்றிவிடப்பட்ட மார்கெட்டினால் வாங்கியவர், விற்றவர், மீடியெட்டர் என்று எல்லோரிடமும் காசு புழங்க, காசு புழக்கம் வேண்டுமென்றால் இந்த ஆட்சியில் மட்டும் தான் நடக்கும் என்று பேச துவங்கினார்கள்.

போலியாய் ஏற்றிவிடப்பட்ட மார்கெட் அதன் பாரம் தாங்காமல் சரேலென கவிழ, இன்வெஸ்ட் செய்த பணத்திற்கு ஏற்ற ரிட்டன் இல்லாமல் ஒவ்வொரு பைனான்ஸ் கம்பெனியும் முழிக்க ஆரம்பித்தது. சரி வாங்கி வைத்த நிலங்களை விற்று விடலாம் என்றால் பதினைந்து லட்சத்திற்கு வாங்கிய நிலமெல்லாம் வெறும் அஞ்சுக்கும் ஆறுக்கும் கேட்க, வாங்கி வைத்த்தை கொள்வாரில்லாமல் ரியல் எஸ்டேட் சரேலென அதள பாதாளத்திற்குள் மார்கெட் கீழே விழுந்தது. மக்களுக்கு வட்டிப் பணம் கொடுக்க முடியாமல் ஒவ்வொரு நிறுவனமாய் டிபால்ட் ஆக, ஆக, அரசு முழித்துக் கொண்டு ஒவ்வொரு நிதி நிறுவன அதிபராய் கைது செய்ய ஆரம்பித்த வேளையில் என் அப்பாவும் கைதானார்.

அப்பா கைதானதை டிவியில் மறுபடியும், மறுபடியும் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்கள். வீடே போன் களேபரமாய் இருந்தது. யார் யாரோ வந்தார்கள். போலீஸ், சில லோக்கல் அரசியல்வாதிகள், மீடியா என்று ஏகப்பட்ட பேர். நான் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தேன். பேப்பர், டிவி, எல்லாவற்றிலும் இதைப் பற்றியே பேச்சு. அப்பா அப்படி வாழ்ந்தார். இப்படி வாழ்ந்தார். அந்த நடிகையுடன் உல்லாசம், இவளுடன் ஹாங்காங் பயணம் செய்தார். சுருட்டிய பணத்தில், மனைவி, மகள், மற்றும் பினாமிக்களின் பேரில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக ஆளாளுக்கு செய்தி போட்டார்கள். உண்மை எதுவென்று எங்களுக்கு மட்டுமே தெரியும். நாங்கள் இருந்த வீடும், அம்மா போட்டிருந்த நூற்றிச் சொச்ச பவுன் நகைகளும், ஈசிஆர் பங்களா, ஊரில் கொஞ்சம் நிலம், வீட்டில் இருந்த இரண்டு கார்கள் என்று மிகச் சொற்பமே வைத்திருந்தாய் அம்மா சொல்லித்தான் தெரியும். ஆனால் இவையெல்லாம் நொடிகளில் காற்றாய் கரையும் என்பது எங்களுக்கு தெரியாமல் போனது. எப்பவும் அரசியல்வாதிகளாலும், மீடியா உலகின் முக்யஸ்தர்களும், ஊரிலிருந்து டொனேஷன் வாங்க வரும் ஆட்களும், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் என்றிருக்கும் எங்கள் வீட்டு வரவேற்பரை காலியாகி, வெறிச்சோடியது. அவசரத்திற்கு உதவி கேட்டு அம்மா போன் செய்தால் பாதி பேர் எடுக்கவேயில்லை. சில பேர் நேரடியாகவே சொல்லிவிட்டார்கள் இனிமேல் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று. சமூகத்தில் அவர்களுக்கென்று மரியாதை இருக்கிறதாம். வீட்டிற்கு வழக்கமாய் வரும் ஆட்களில் வக்கீல் அங்கிள் மட்டுமே மிச்சமாய் இருக்க, அம்மாவுக்கு ஆதரவாய் வேறு யாருமில்லாத அந்த நேரத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

தினமொரு போலீஸ் விசாரணை, ஸ்டேஷன், கோர்ட், ஆபீஸில் வேலை செய்தவர்களின் சம்பள பாக்கி, வாடகை, ஒவ்வொரு முறையும் வரும் போதும் போகும் போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு போகும் அதிகாரிகள் என்று ப்ரச்சனைகள் பெரிதாகியது.

ஒரு முறை நடு ராத்திரியில் ஒரு வயதானவர் வீட்டு வாசலில் வந்து நின்று ஓவென அழுதார். தன் பெண் கல்யாணத்திற்காக வைத்திருந்த பணத்தை தான் முதலீடு செய்ததாகவும், பணம் இல்லையென்றால் அடுத்த நாள் ஏற்பாடாயிருந்த கல்யாணம் நின்றுவிடும் என்றும் காசு கொடுக்காமல் போக மாட்டேன் என்று டிசம்பர் மாத பனியில் ரோட்டில் உட்கார்ந்துவிட்டார். அம்மா அவரை வீட்டிற்குள் கூப்பிட்டு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் கேட்பதாய் தெரியவில்லை. அவரின் அழுகையை பார்க்க பாவமாயிருந்தது. அம்மாவிடம் நகை, பணம் என்று எதையும் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை. வீட்டிற்குள் வந்தபின்பும் அவர் ஆரற்றிக் கொண்டேயிருந்தார். ஒரு நிலையில் அவரின் கண்களில் கண்ணீரே இல்லாமல் வெறும் அழுகுரல் மட்டுமே வந்து கொண்டிருக்க, “என் பொண்ணு கல்யாணம்.. என் பொண்ணு கல்யாணம்” என்று மறுபடி, மறுபடி சொல்லிக் கொண்டேயிருக்க, அம்மா தாங்கமாட்டாமல் என்னை எழுப்பி என் கழுத்திலிருந்த ரெண்டு சவரன் செயினை கழட்டினாள். நான் அழுதேன். எனக்கென இருக்கும் ஒரே நகை அதுதான். அம்மா பிடிவாதமாய் பிடுங்கி அவரிடம் கொடுத்து, “இதைத் தவிர எங்க கிட்ட பணமோ, நகையோ இப்ப இல்லை. ப்ரச்சனை முடிஞ்சதும் நிச்சயம் திரும்பக் கொடுத்துருவோம்” என்று அவரின் காலில் விழுந்து அழுதாள். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “பொண் குழந்தை கழுத்துலேர்ந்து அழ, அழ, கழட்டுன நகை என் பொண்ணுக்கு வேண்டாம். நீங்க ஏமாத்தல இல்லை.. பகவான் இருக்கான். அவன் பார்த்துண்டே இருக்கான். அவனுக்குதெரியும் நீங்க நல்லாயிருப்பேள்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினார். அவர் ஆசீர்வாதமாய் சொன்னாரோ, அல்லது வயிறெரிந்து சொன்னாரோ.. அதன் பிறகு நடந்த விஷயங்கள் எதுவுமோ நன்றாக நடக்கவில்லை.

அப்பாவை ஜெயில் பார்க்க பாவமாய் இருந்தது. இளைத்துப் போய் கண்களுக்கு பதில் கருவளையங்களாய் இருந்தது. மிக நம்பிக்கையாய் பேசினார்.

“என்னதான் கோடி கோடியா பணம் இன்வெஸ்ட் பண்ணாலும் ஒரே ராத்திரியில எல்லாரும் பணத்தை திரும்பக் கேட்டா எப்படி தர முடியும். கவர்மெண்டும் இதைப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும். இதைப்பத்தி இன்னும் சில கம்பெனி எம்டிக்கள் இங்க இருக்கிறவங்க கிட்ட பேசி வெளிய மூவ் பண்ணப் போறோம். சீக்கீரம் எல்லாம் சரியாயிரும்.. நம்ம வக்கீல் கிட்ட பெயிலுக்கு மூவ் பண்ணச் சொல்லியிருக்கேன். அவரோட போய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. பேபி.. நீ பயப்படாத.. எல்லாம் சரியாயிரும். டாடி வந்திருவேன்.” என்று ஜன்னல் இடுக்கு வழியே என் கன்னத்தை தடவினார். சில்லென இருந்தது. அவரின் விரல் பட்ட மாத்திரத்தில் அழுகை பொத்துக் கொண்டு வர, “பாத்தியா பேபி.. நீ அழுதியானா.. எனக்கும் அழுகை வரும். இனி பேபியை கூட்டுட்டு வராதே” என்றார் அம்மாவிடம் சொன்னார்.

உள்ளே நுழைந்ததிலிருந்து லஞ்சமாய் நிறைய பணம் கொடுக்க வேண்டியிருந்த்து. மற்றவர்களை விட அதிகமாய் குறைவாய் கொடுத்தால் ”என்னம்மா நீங்களே.. “ என்று இழுத்தார்கள். யாருடைய பார்வையிலும் மரியாதை இல்லை.

என் நண்பர்கள் எல்லோரும் விலகிப் போய் என்னுடன் பழகவே யோசித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா என்னுடன் சேரக்கூடாது என்று சொல்லிவிட்டாளாம். எங்கேயும் போகப் பிடிக்கவேயில்லை.

அம்மாவை பார்க்க வக்கீல் அங்கிள் வந்திருந்தார். அவர்கள் இருவரும் இருந்தால் நான் கீழே போவதேயில்லை. அம்மாவுடன் அவர் காட்டும் நெருக்கம் அருவருப்பாய் இருந்தது. அன்றைக்கு நான் கீழே இறங்கியதற்கான காரணம் அம்மா கோபமாய் கத்திய காரணத்தால். அம்மா ஏன் கத்தினாள் என்று ரெண்டு நாள் கழித்து, இரண்டு வயதானவர்கள் வீட்டில் இரவு தங்கிவிட்டு போன போதுதான் புரிந்தது. அம்மா அப்பாவுக்காக முதல் முதலாய் சோரம் போனது அப்போதுதான்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Sunday, December 18, 2011

கொத்து பரோட்டா –19/12/11


ஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் கவிஞர், எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன். அவர் பேசியதற்கான மாற்றுக் கருத்தும் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது  இடம் அளித்து, வெற்றியாளர்களுக்கு தன் பங்காய் சிறப்பு பரிசளித்து வாழ்த்திய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி. இதில் வழக்கமாய் நிறைய பேசும் நான் தான் ரெண்டு வரியில் வரவேற்று சொதப்பினேன் என்று நினைக்கிறேன். சிலர் அதை வரவேற்று கை தட்டியதிலிருந்து என் பேச்சிலிருந்து அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம் தெரிந்தது. மற்றபடி விழா இனிதே நடைபெற்றது. வந்திருந்து நடத்திக் கொடுத்த நண்பர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் யுடான்ஸின் சார்பாக எங்கள் நன்றிகள்.
##########################


இந்த பக்கம் நாங்க அடிக்கவேயில்லை. தமிழர்கள் எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, சபரிமலையில நாங்க பாதுகாப்பு கொடுத்துட்டுத்தான் இருக்கோம். எங்கேயும் ப்ரச்சனையில்லை. அது போல தமிழ் நாட்டில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கேரள முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ.. அகதியாய் பக்கத்து மாநிலத்திலேர்ந்து குடும்பம் குடும்பமா வந்தவங்க யாரு.. சார்..?
####################################
டிவிட்டரில் இந்தியாவிலேயே சிறந்தவர் யார் என்ற ஓட்டெடுப்பை ஹெட்லைன்ஸ் இண்டியா நடத்தி வருகிறது. அதில் நம் பதிவர், கார்க்கி முதல் நிலையில் உள்ளார். இந்திய அளவில் தமிழில் டிவிட்டர் முதல் நிலையில் உள்ளது சந்தோஷமாய் இருக்கிறது. அவருக்கு உங்கள் ஓட்டுக்களைப் போட்டு வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளும் இந்த இனிய வேளையில், போட்டியில்லாமல் எந்த வெற்றியும் அவருக்கு சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக நானும் போட்டியில் இருக்கிறேன். அதனால் எனக்கும் உங்கள் பொன்னான வாக்கை போட்டு இந்திய அளவில் ஒரு ஓரத்திலாவது இடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு வாக்களிக்க. அப்படியே ஃபேஸ்புக்குலயேயும் ஒரு ஓட்டை இங்க வந்து குத்தினீங்கன்னா.. நல்லாருக்கும் வாக்களிக்க
################################
கூ
குள் பஸ்ஸை மூடிவிட்டதால் பல பேர் கையொடிந்த நிலையில் இருக்கிறார்கள். பஸ் வந்து நன்றாக எழுதும் பல பதிவர்கள் எழுதுவது குறைந்தது.  சில கூகுள் +ல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் பேஸ்புக், டிவிட்டர் என்று மாறியிருந்தாலும் மீண்டும் எழுத வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
############################
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு மெசேஜ். கோலா, பெஸ்சி குடிப்பவர்கள், இனி “பாலை” அருந்துங்கள் என்று இது மறைமுகமாய் ஒரு படத்திற்கான  ப்ரோமோ விஷயம் என்று தெரிந்தது. இதில் காமெடி என்னவென்றால் இந்த தமிழுணர்வு குஞ்சாமணிகள் பலர் படம் பார்க்காமலேயே ஜல்லியடித்துக் கொண்டிருப்பதும், அதைப் பற்றி ஏதும் புரியாமல் உடன் வந்து ஜலிப்பதுமாய் இருப்பவர்களைப் பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
################################
கேரள ப்ரச்சனையால் சபரிமலைக்கு செல்லாமல் பல பேர் ஆங்காங்கே இருக்கும் ஐயப்பன் கோவிலில் பதினெட்டுப் படியேறி தங்கள் விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள். பலருக்கு இது வருத்ததை தந்திருக்கிறது. மாலை போட்டு சபரிமலை ஏறிவரும் அனுபவத்தை இம்முறை இழந்துவிட்டோமே என்றும், அங்கே கிடைக்கும் ஒரு பேரானந்தம் இங்கே எங்கேயும் கிடைக்காது என்று தாங்கள் உறுதியாய் நம்புவதாகவும் சொன்னார்கள். கடவுள் எங்குமிருக்கிறான். எவ்வளவோ செய்யுற கடவுள் இந்த இரண்டு மாநில ப்ரச்சனையை தீர்க்க மாட்டாரா என்ன?
###############################
என் ட்வீட்டரிலிருந்து
என்னைப் பற்றி தன் நண்பர்களிடம் நல்லவிதமாய் நானில்லாத போது சொல்பவன் தான் என்னுடயவன்.


ஈகோ என்பது இரண்டு சைட் கத்தி. அதை சொல்வதற்கு முன் நீ எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறாய் என்று யோசித்துப்பார்.

உடனிருப்பவரால் எந்த வித சந்தோஷமும் இல்லாமல் இருக்கும் போது தனியே இருப்பதே சாலச் சிறந்தது.


அவளுடன் தான் உன் சந்தோஷம் என்று நீ நினைத்தால் அவளுக்காக நீ துக்கமடைவதும் சந்தோஷமே
#################################
ப்ளாஷ்பேக்
இன்னொரு இளையராஜா கிளாசிக். கண்ணதாசனின் வரிகளில், எஸ்.பி.பியின் இழையும் குரலில், தேனான ஒரு பாடல்.  அருமையான தாலாட்டை கேட்ட சுகம் இப்பாடலை கேட்டால் கிடைக்கும். பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலும், இடையே இண்டர்லூடாக வரும் வயலினும் அஹா.. சுகானுபவம்.
##############################
அடல்ட் கார்னர்
A trucker who had driven his fully loaded rig to the top of a steep hill and was just starting down the equally steep other side when he noticed a man and a woman lying in the center road, making love. 

He blew his air horn several times as he was bearing down on them. 

Realizing that they were not about to get out of his way he slammed on his brakes and stopped just inches from them. 

Getting out of the cab, madder than hell, the trucker walked to the front of the cab and looked down at the two, still in the road, and yelled, "What the hell's the matter with you two? 

Didn't you hear me blowing the horn? You could've been killed!" 

The man on the highway, obviously satisfied and not too concerned, looked up and said, "Look, I was coming, she was coming, and you were coming. You were the only one with brakes."
##################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Saturday, December 17, 2011

பதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..

பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவே முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.


6 x 3 -sathya இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள், பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள், கடும்பணி மேற்கொண்ட நடுவர்கள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அப்துல்லா என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்

              6, முனுசாமி சாலை (மாடியில்)
              கே.கே.நகர். 
நிகழ்ச்சி நிரல் :

6.00 : வரவேற்பு
வரவேற்புரை - கேபிள் சங்கர்
பரிசளிப்பு நிகழ்வு

(பிரபல, மூத்த பதிவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்,  வெற்றியாளர்களுக்கு பரிசுப் பத்தகங்களை வழங்குவார்கள்)


சிறப்பு அழைப்பாளர்கள்

இயக்குனர் பத்ரி (வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு)
இயக்குனர் கே.பி.பி.நவீன் ( உச்சக்கட்டம், நெல்லை சந்திப்பு)
போட்டி மற்றும் கதைகள் குறித்த ஒரு பார்வை - எம்எம்.அப்துல்லா

(இரண்டு போட்டிகளிலும் நடுவராக இருந்தமையாலும், மற்ற நடுவர்கள் வெளியூர்க்காரர்கள், வருவது சந்தேகம் என்பதாலும் அப்துல்லாவை கேட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் பிஸியானவர் என்பதால் நம்ப முடியாது. ஆகவே அவர் வராவிட்டால், யாராவது A4 சைஸ் பேப்பரில் கண்டெண்ட் குறித்து குறிப்பாக பாராட்டி எழுதிக் கொண்டுவந்தால் அதைப் பார்த்து, தணிக்கை செய்தபின் வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே வருகிறவர்கள் எதற்கும் தயாராக வரவும்.. ஹிஹி ஹிஹி)

நன்றியுரை - பரிசல்காரன்

நிறைவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் - கார்க்கி
பதிவர்கள், இணையத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
அன்புடன் -
கேபிள் சங்கர் 
ஜோஸப் பால்ராஜ்
பரிசல்காரன் 
ஆதிமூலகிருஷ்ணன்

Friday, December 16, 2011

மெளனகுரு

mouna-guru-2 சமீபகாலமாய் பார்த்த திரைப்படங்களில் தமிழுணர்வோ, அல்லது வன்முறை உணர்வோ ஏதோ ஒரு உணர்வு இருந்தாலேயன்றி தமிழ் சினிமா இல்லை என்றிருந்த நேரத்தில் வந்த வித்யாசமான படம் தான். குத்துப்பாட்டு இல்லை, அச்சுபிச்சு காதல் இல்லை, எட்டு அடிக்கு பறந்து பறந்து அடிக்கவில்லை. இப்படி வழக்கமாய் தமிழ் சினிமாவில் இருக்கும் பல விஷயங்கள் இல்லாத ஒரு படம்.


மூன்று கரப்டட் போலீஸ்காரர்களால் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இளைஞனின் கதை.  அவன் அந்த ப்ரச்சனையிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை கொஞ்சம் கூட சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் ஒரு ஸ்லீக்கான ஆக்‌ஷன் த்ரில்லரை தந்திருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய படங்களில் எப்படியோ அருள்நிதிக்கு இந்த கேரக்டர் சரியாய் பொருந்தியிருக்கிறது. படம் முழுவதும் டைட்டிலுக்கு ஏற்றார்ப் போல மெளனகுருவாகவே வருகிறார்.  அதிகம் பேசாமல் நம் பக்கத்துவீட்டு பையன் போலிருக்கிறார். அண்ணன் வீட்டில் தன்னை அவாய்ட் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு வெளியேறும் போதும், டெலிபோன் கடையில் இரண்டு ரூபாய்க்காக சண்டை போடும் போதும், என்ன ஏது என்று கேட்காமல் அடித்த போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரின் குழந்தையை ஸ்டேஷனில் கொண்டு வந்து சேர்க்கும் இடம். போலீஸ்காரர்களின் சதியால் மனநிலை பிழன்றவர் என்று காப்பகத்தில் கையாலாகாமல் மாட்டிக் கொண்டு மெளனம் காக்கும் போதும், வேறு வழியேயில்லை எனும் போது சாதாரணன் கூட எதிர்த்து போராடுவான் என்பது போல போராடும் இடமாகட்டும் அருள்நிதி பேசாமலேயே மனதில் நிற்கிறார். என்ன அவர் வாய் திறந்து பேசினால் கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிகிறது. அது அவர் பேசும் சில வசனங்களுக்கு பொருந்த மாட்டேன் என்கிறது. மற்றபடி இந்த படம் அருள்நிதிக்கு சொல்லிக் கொள்ளும் படமே.
mouna-guru-4 வாகை சூடவாவிற்கு பிறகு இனியா நடித்து வரும் படம். சின்னச் சின்ன ரியாக்‌ஷனில் மனதில் நிற்கிறார். அருள்நிதியை காதலிப்பதை தவிர பெரிதாய் ஏதும் செய்ய ஸ்கோப் இல்லாத கேரக்டர். ஆனால் அது தான் கதையின் கட்டாயமும் கூட என்பதால் பெரிதாய் நெருடவில்லை. மொட்டை மாடி காட்சிகளில் அவர் முகத்தில் மிக இயல்பாய் தெரியும் அந்த வெட்கம் கலந்த க்யூட்டான பார்வைகள். அஹா..

கரப்டட் போலீஸ் உதவி கமிஷனராக ஜான் விஜய்.அருமையாய் செய்திருக்கிறார்.பாடிலேங்குவேஜிலாகட்டும், டயலாக் டெலிவரியிலாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். அவருடன் வரும் மற்ற இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பர்பாமென்ஸில் கலக்கியிருக்கிறார்கள். இவருக்கு பிறகு முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய ஒரு பர்பாமென்ஸ் உமா ரியாஸினுடயது. காலேஜ் பாதர், அதன் வாட்ச்மேன், காலேஜில் வில்லத்தனம் செய்யும் அந்த மாணவன், ஹாஸ்டல் வார்டன் என்று சின்னக்கேரக்டர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
mouna-guru-8 மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆரம்பக் காட்சியில் வேனில் ஹீரோவுடன் அறிமுகமாகும் காட்சியில் ரோட்டின் வெளிச்சம் வரும் போது மட்டுமே ஒவ்வொரு கேரக்டராய் ப்ரேமில் கொண்டு வரும் இடம் குறிப்பிடத்தக்கது. படம் நெடுக உறுத்தாத இயல்பான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். இசை தமன். பாடல்கள் என்று பார்த்தால் இரண்டு பாட்டுக்கள் தான் வருகிறது என்று நினைக்கிறேன். அவைகள் ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லாவிட்டாலும், பின்னணியிசையில் மனிதர் நிரம்ப உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் ஆர்கெஸ்ட்ரேஷன் அருமை. க்ளைமாக்ஸில் வசனமேயில்லாமல் வரும் சண்டைக் காட்சியும், அதன் பிறகு வரும் காட்சிகள் தமன் பேர் சொல்லும்.

எழுதி இயக்கியவர் சாந்தகுமார். தரணியின் உதவியாளர். தன் முதல் படத்திலேயே தன்னை நிருபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுப்பது, அதுவும் முழுக்க,முழுக்க திரைக்கதையை மட்டுமே நம்பி ஆரம்பிப்பது தன் ஸ்கிரிப்ட்டில் நல்ல நம்பிக்கையிருந்தால் மட்டுமே முடியும். அதற்காக இவரின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அருள்நிதியின் கேரக்டரை பற்றி அறிமுகப்படுத்துவதில் ஆரம்பித்து, கதையின் முக்கிய கேரக்டர்கள் இன்வால்வ் ஆகும் அந்த விபத்து, மற்றும் பணம் கொள்ளையை ஹீரோவின் கதையோடு இணைத்து, அதன் பிறகு நடக்கும் அத்துனை காட்சிகளிலும் யதார்த்தமான ட்விஸ்டுகளை வைத்து பண்ணியிருப்பது பாராட்டுக்குரியது.  முக்கியமாய் உமாரியாஸின் கர்பவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.படு யதார்த்தம். அவர் இன்வெஸ்டிகேட் செய்யும் விதமும், அதை காட்சிப்படுத்திய அழகும் வாவ்.. தமிழ் சினிமாதான் பார்க்கிறோமா? என்று ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு காரண காரியம் வைத்திருப்பதும், விபச்சாரி, பாதரின் பையன், கல்லூரி ரவுடி மாணவன் ஆகிய கேரக்டர்களுக்கான ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் என்று நிறையவே உழைத்திருக்கிறார். காட்சிகளை நகர்த்தும் விதமும், போலீஸ் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான இரண்டு எக்ஸ்ட்ரீம் கேரக்டர்களான ஜான் விஜய், உமா ரியாஸ்  மூலம் அழகாக உணர்த்தியிருக்கிறார்.
mouna-guru-9 படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முக்கியமானது படத்தின் நீளமும், க்ளைமாக்சும்தான். முடிந்த வரை யதார்த்தை சினிமாவாக்கி, ஹீரோயிசமில்லாத படமாய் எடுக்க முயற்சித்திருந்தாலும், நிஜ வாழ்கையில் நடக்கும் அதே மெத்தனம் படத்திலும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதை எடிட்டுட்டு, நீளம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் குறையில்லை. பரபரப்பான ஃப்ரீ க்ளைமாக்ஸுக்கு பின் வரும் க்ளைமாக்ஸ் ஒரு மாற்றுக் குறைவுதான். இம்மாதிரியான படங்களுக்கு வெளியின் வரும்போது கதாநாயகனின் ப்ரச்சனையோடு உழன்ற நமக்கு அதிலிருந்து அவன் விடுபடும் போது கிடைக்கும் ரிலீப்பை உணர்ந்தால் அது பெரிய இம்பாக்டாக இருந்திருக்கும். மிக இயல்பான க்ளைமாக்ஸால் அது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எது எப்படியிருந்தாலும் மொத்தத்தில் நல்ல ஆக்‌ஷன் திரில்லரை கொடுத்ததிற்காக சாந்தகுமாரை பாராட்ட வேண்டும்.
மெளனகுரு – அழுத்தம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Thursday, December 15, 2011

சாப்பாட்டுக்கடை –பாரதி மெஸ்

Photo0420 Photo0416
திருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.“வாங்க நம்ம பாரதி மெஸ்சுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றார்.

திருவல்லிக்கேணி பாரதி ரோட்டில், அதாவது இட்லி சாம்பாருக்கு புகழ் பெற்ற ரத்னா பவனிலிருந்து பீச்சுக்கு வலது பக்கம் திரும்புவோமில்லயா அந்த ரோட்டின் பேர் பாரதி ரோடு. ஒரு நூறு மீட்டர்  நடந்தால் இடது பக்கமாய் ஒரு பெரிய பாரதியின் படம் போட்ட ஒர் வழிகாட்டி விளம்பரம் இருக்கும். பாரதி மெஸ் என்று. அந்த தெருவின் பெயர் அக்பர் தெரு. உள்ளே நுழைந்தவுடன். முதல் கட்டடமே பாரதி மெஸ்தான் வாசலிலேயே பாரதியார் முண்டாசோடு வரவேற்றார்.
Photo0417 Photo0415
பார்த்த மாத்திரத்திலேயே இடம் பிடித்துவிட்டது. ஒரு சின்ன நீளமான இடம். அதில் இடிபாடில்லாத நிலையில் டேபிள்கள் போடப்பட்டு, பாஸ்ட் புட் பாணியில் நின்று கொண்டு சாப்பிடும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்ததும், சுவரெங்கும் பாரதியின் படங்களும், அவரைப் பற்றிய சிறு குறிப்புகளுமே விரவியிருந்தது இம்ப்ரசிவாக இருந்தது. நாற்பது ரூபாய் சாப்பாடுக்கு. ஒரு வட்ட தட்டில் சின்னச் சின்ன கிண்ணங்களில் சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, ஊறுகாய், அப்பளம், அது தவிர அதில் ஒரு சிறு தட்டில் சாதம் போட்டு சாப்பிட வைத்திருந்தார்கள். அதில் ஒரு குட்டியூண்டு மசால் வடை. அநேகமாய்  இந்த வடை மேட்டர் தினம் மாறும் என்று நினைக்கிறேன். அதனுடன் சூடான சாதத்தை ஒரு ஹாட்பேக்கில் ஒரு குட்டி கரண்டி போட்டு தருகிறார்கள். அட பார்க்கும் போதே அசத்துகிறார்களே என்று நினைத்து சாதத்தை எடுத்து போட்டு, துளி காரக்குழம்பை கலந்தடித்து, ஒரு கவளம் சாப்பிட்டவுடன் கண்கள் கலங்கியது. வாவ்… அட்டகாசம். அவ்வளவு சுவையான காரக்குழம்பு. நான் மூன்று முறை வாங்கிச் சாப்பிட்டேன். அளவான காரத்துடன், முழு மிளகையையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு, திக்காக ஒரு குட்டியூண்டு கப்பில் கொடுத்தார்கள். நாக்கில் ஒட்டியது. அடுத்து வந்த சாம்பார், ரசம் என்று எல்லா அயிட்டங்களுமே அசத்தலாய் மெஸ்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட் சுவையில்லாமல் வீட்டுச் சாப்பாடு போல இருந்தது. அதிலும் ரசமும், காரக்குழம்பும்.. ம்ம்ம்ம்........ மவுத் வாட்டரிங்..
Photo0414Photo0418
கடையில் வாசலில் ஒரு சின்ன பூத் வைத்திருந்தார்கள். அதில் நிறைய பத்திரிக்கைகள் போடப்பட்டிருந்தன. “இங்கு இருக்கும் பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு போய் படிக்கலாம் இலவசம்” என்று போட்டிருந்தார்கள். இன்னொரு சிறு அலமாரியில் பாரதியின் கவிதைகள் 20 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. “என்னஜி.. கடை ஓனர் இலக்கியவாதி போலருக்கு?” என்றேன் நண்பர் பாலாவிடம்.

“அட சொல்லலையில்லை. இதை நடத்துறவர் பத்திரிக்கையாளர் கண்ணன். தினமலர்ல இருந்தாரு. இவர் ஒரு குறும்பட, ஆவணபட இயக்குனரும் கூட” என்றார். நிச்சயம் ஒரு அருமையான, சுவையான, நிறைவான, டிவைனான வீட்டு சாப்பாட்டுக்கு நான் கேரண்டி.

சங்
கர் நாராயண் @கேபிள் சங்கர்

Wednesday, December 14, 2011

It is wintertime, all but dreams will die

Hieman yli viikko jouluun on ja lumesta ei ole tietoakaan. En ole koskaan ollut jouluihmisiä, mutta tänä vuonna olen löytänyt itsestäni hieman jouluihmisen vikaa. Tänään olen paketoinut lahjoja ja askarrellut kortteja. Koska lahjat ja kortit ovat minulta, eivät nekään noudata aivan perinteistä linjaa. Paketit on kiedottu mustan ja hopean sävyihin ja joulukortin virkaa toimittavat mustasta kartongista askarrellut lepakot. Tykkään ostaa rakkailleni lahjoja, mutta olen siinä toivottoman huono. Sen takia ostankin lahjoja mieluiten silloin, kun sattumalta silmääni osuu jotain, mistä toinen voisi pitää.
Joulu tietää minulle aina matkustamista. koska tänäkin vuonna otan suunnaksi pohjoisen eli Lappiin käypi tieni. Minulle joulua ei ole missään muualla. Lappi on se paikka, missä voi rauhoittua, missä ovat läheiset, missä on koti, siellä on joulu. Ei kiirettä, ei stressiä, ei paineita, hyvää ruokaa ja rentoa yhdessäoloa läheistän kanssa. Sitä kaipaan ja odotan joka vuosi eniten.

Mutta joulutarinoinnit sikseen, koska siitä ehtii näpytellä vielä useammankin postauksen. Viime lauantaina oli Ofelia second hand market Kulttuuriareena Glorissa. Olen tainnut käydä jokaisessa Ofeliassa, enkä tehnyt nytkään poikkeusta. Ofeliassa viihdyin lähinnä Tuomaksen ja Katin seurassa, mutta tulipa tuolla muihinkin tuttuihin törmäiltyä. Ofeliassa on aina mukava tunnelma ja muutama ostoskin tuli tehtyä. Silti minusta näytti, että porukkaa oli huomattavasti vähemmän kuin viime vuonna, en tiedä johtuiko tämä mahdollisesti kamalasta säästä. Glorissa oli tosin huomattavasti miellyttävämpää kierrellä ympäriinsä ilman hirveää tungosta.


Saturday's outfit:

 Paita, shirt - Second hand
Korsetti, corset - Morticia
Hame, skirt - Second hand

Tein paikalta vain muutaman löydön. Ensimmäisenä samettijakku turkisyksityiskohdilla. Vaikka en muuten turkiksista välitä, niin pidän niistä hihansuissa ja helmoissa. Aitoa turkista ei minun päälläni tulla koskaan näkemään, sen voin luvata. Mutta tämä samettijakku on lämmin ja tyylikäs eli juuri sopiva talveksi. Kaunis löytö neljällä eurolla.


Toinen löytöni oli lyhythihainen paita pallokuvioinnilla. Joudun tosin hieman kaventamaan tätä vyötäröltä, mutta onneksi matkustan ensi viikolla vanhempieni luokse, mistä löytyy ompelukone. Enimmäkseen aion tosin käyttää tätä korsetin alla, joten ei haittaa vaikka ompelujälki ei niin kaunista olisikaan. Tästä paidasta maksoin viisi euroa.


Tarkempi kuva kankaasta.
A better picture of the fabric.


Ofelian jälkeen kävimme Tuomaksen ja Katin kanssa palloilemassa Kampissa, josta oli tarkoitus löytää itselleni hiustenleikkuukone. Kiitos joulun, lähes kaikki edullisimmat mallit olivat loppuneet. Onneksi Anttilasta sentään löytyi halpa perusmalli, koska en minä mitään hienouksia undercutin leikkaamiseen tarvitse.

"For men" so I am officially a man now?

Muuten vietin viikonlopun lähinnä kuntosalilla ja kotona. En juonut alkoholia, en ollut baarissa, enkä klubilla. Oli kyllä ihana viettää rauhallinen viikonloppu ihan yksikseen kotona. En edes kaivannut sen kummempaa toimintaa, mutta ikävöin kyllä erästä ihmistä hyvin paljon.

Eilisen päivän käytin joululahjojen ostamiseen ja nyt onkin jo lähes kaikki hankittu. Toki lahjojen etsimisen lomassa poikkesin myös H&M:lle, josta piti muutama juttu ostaa itsellekin.

Mustavioletit tekoripset. Täydelliset värit hiusteni kanssa ja tykkäsin erityisesti ripsien pituudesta ja mallista. Sopivat jostain syystä hyvin silmiini. 
Eyelashes, black and purple, perfect match to my hair. 


Paketillinen erilaisia näyttäviä tekoripsiä. Nyt tulee valinnanvaikeus, mitkä laittaisin uutena vuotena.
Three pairs of different kind eyelashes. Which ones should I use on New Year's Eve?
Löysin myös itselleni pienen tiaran, koska olenhan prinsessa! Tämä taitaa olla pakko laittaa uutena vuotena tai viimeistään syntymäpäivänä.

I bought myself a tiara, because I'm the princess.Illalla menimme viimein Meri Tuulen kanssa katsomaan Twilight, Aamunkoi -elokuvan. Minä pidän Twilightista, enkä edes häpeä myöntää sitä. Pidän kaikenlaisesta hömpästä yleensäkin. Taannuimme Meri Tuulen kanssa takaisin teinitytöiksi elokuvan aikana ja olimme fiiliksissä vielä bussissa matkalla kotiin. 
 pic: wikipedia

Elokuvaillan asu
My outfit to the movies

 Pitsipaita, shirt - Vero Moda
Hame, skirt - Lip Service, Morticia

Tänä viikonloppuna on tiedossa kaikkea muuta kuin rauhallista illanviettoa kotona, nimittäin edessä on kahdet pikkujoulut, kaverin syntymäpäiväjuhlat ja Klub Kalma. Kiirettä siis pitää ja pakatakin pitäisi ehtiä. Alkuperäinen suunnitelmani oli lähteä vasta tiistaina Espoosta Tampereelle, mutta kun Ville nätisti pyysi minua jo maanantaina Tampereelle, niin pakkohan se oli suostua. Niinpä siis maanantaina junalla Tampereelle ja keskiviikkona ajelemme siskon Mondeolla kohti Lappia. Hieman ennen uutta vuotta palailen takaisin sivistyksen pariin ja uutena vuotena on tiedossa Charnel Haus -klubi Dark Side:ssa. Kaikki kynnelle kykenevät mukaan viettämään synkempää uutta vuotta erään söpön miehen soittaessa levyjä ;) 

Ihanaa ja kiireetöntä joulun odotusta kaikille lukijoille!

Translation:

The last Saturday was held up Ofelia second hand market in the place called Gloria. I have been in every Ofelia Market and this was not an exception. I was there mostly with Tuomas and Kati, but I also met other friends of mine. I like the atmosphere at Ofelia Market and I found two pieces of clothing for myself.

The first one was a velvet jacket with furry details. Quite warm and stylish, so perfect for a winter. This costed four euros. 

The second piece of clothing was shirt with dots. It´s a little bit too big for me, so I have to narrow it and then it would fit me perfectly. It doesn't matter if that sewing won't look nice, because I think I will use this under a corset anyway.

After Ofelia Market we went to the shopping center, because I had to find a mains clipper for myself. I need to shave my new undercut! Luckily I found a very basic one and it was cheap too. 

Yesterday I went to buy Christmas presents, but of course I found something for myself too (found the presents too). All those eyelashes and a tiara are from H&M. I also went to the movies with my friend Meri Tuuli to watch that new Twilight Breaking dawn. I have to admit that I like Twilight and I´m shame of that fact. We felt ourselves like teenagers and were excited about that movie even in the bus on our way back home.

I will have two little Chritmas parties, my friend's birthday party and Klub Kalma on upcomming weekend. And I have to also pack my suitcase, because I will travel to Tampere on Monday and from there to Lapland on Wednesday with my little sister. I will spend my Christmas in Lapland and will come back to Espoo two days before New Year's Eve. And of course we will have the gothic club Charnel Haus on New Year's Eve too and one cute boy will be playing CDs there ;)

I wish you all happy and non-hectic times before the Christmas Eve!

கேபிளின் கதை -2626
எப்படி எஸ்.சி.விசென்னையில் தங்கள் நெட்வொர்க்கை பரப்பியதோ, அது போல சேலம், கோவை, மதுரை,திருநெல்வேலி, திருச்சி, ஆகிய இடங்களில் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்த பெரிய ஆப்பரேட்டர்கள் எல்லோரும் ஆடிப் போக ஆரம்பித்தனர். எஸ்.சி.விநெட்வொர்க் ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழகமெங்கும் அதுவும் முக்கியமாய் எல்லாமாநகராட்சி ஏரியாக்களிலும் தங்கள் நெட்வொர்க்குகளை முடுக்கி விட, சேலம் ஏரியாவில்கோலோச்சிக் கொண்டிருந்த பாலிமர் கல்யாணசுந்தரம்,  மதுரை கரன் டிவி, என்று ஒவ்வொரு ஊரிலும் உள்ளபெரிய நெட்வொர்க்குகள் கையை பிசைய ஆரம்பித்தது. அதற்கு காரணம் தங்களின் மோனோபாலிபோய்விடுமே என்ற கவலையும், மீண்டும் தாங்கள் வேறொரு நெட்வொர்க்குளின் கீழ் செயல்படவேண்டுமே என்ற ஆதங்கமும் தான் என்றாலும், ஏற்கனவே மற்ற ஊர்களில் மாறியது போல இந்தஊர்களிலும் எல்லோரும் எஸ்.சி.விக்கு மாற ஆரம்பித்தார்கள்.


சேலத்தில் மட்டும்எஸ்.சி.வியின் கண்ட்ரோல் ரூம் மட்டுமே போடப்பட்டு ரொம்ப நாளைக்கு எந்தவிதமானஇணைப்பும் கொடுக்காமல் இருந்து பின்னர் பாலிமர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில்சுமுகமாகி பாலிமர் நெட்வொர்க்கே போனதாய் தகவல். அவர்கள் சேட்டிலைட் சேனலாய் வரதொடங்கிய போதுதான் அவர்களுக்கு ப்ரச்சனையே ஆரம்பமானது.  சேலத்துக்காரர்கள் யாராவது இருந்தால் இன்னும்கொஞ்சம் தெளிவுபடுத்தலாம். 

இந்த ஊர்களில் மட்டும்அவரவர்களின் லோக்கல் டிவி சேனல்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க, விரும்பியோ,விரும்பாமலோ வேறு வழியில்லாமல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எஸ்.சி.வி தன்ஒளிபரப்பை துவக்கியது அந்தந்த ஊர்களின் லோக்கல் சேனல்களோடு. ஒரு கட்டத்தில்தமிழகத்தின் எல்லா மாநகராட்சிகளிலும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவுடன்எஸ்.சி.வி தங்கள் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.

சரி இப்படி ஒருநெட்வொர்க்கை வளர்ப்பதினால் என்ன பயன்? எதற்காக இப்படிப்பட்ட விஸ்தீரணமான முயற்சி?சொந்தமாய் சேட்டிலைட் சேனலே இருக்கும் போது எதற்காக க்ரவுண்ட் நெட்வொர்க்எனப்படும் கேபிள் நெட்வொர்க்குக்கு வர வேண்டும்?. இப்படி கேபிள் நெட்வொர்க்குகளைதங்கள் வசம் வைத்திருப்பதினால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா?அப்படியென்றால் எவ்வளவு? என்று பல கேள்விகள் உங்களுள் எழத்தான் செய்யும்.அவைகளுக்கான விளக்கங்கள் இதோ.

நெட்வொர்க்கை வளர்ப்பதுஏன்?
இப்போது சென்னையில் உள்ளஎல்லா ஏரியாக்களிலும் ஒரே நெட்வொர்க் தான் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்படிப்பட்ட நிலையில் அலைவரிசைகளின் அடிப்படையில் ப்ரைம் பாண்டில் இடம் பெரும்சேனல்கள் நெட்வொர்க்கின் சேனல்களாய்த்தான் இருக்கும். அதாவது சன்னின் நெட்வொர்க்எஸ்.சி.வி எனும் பட்சத்தில், சன் மட்டும் அதன் துணை சேனல்களுக்குத்தான்முன்னுரிமையாய் இருக்கும். அது மட்டுமில்லாமல் மக்கள் ஆன் செய்தவுடன் கிடைக்கும்முதல் சேனல் அவர்களுடயதாய் இருக்கும் போது ஒரு நிமிடம் அந்த சேனலைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.அந்த ஒரு நிமிடத்தில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் நிகழ்ச்சி அமைந்துவிட்டால்நிச்சயம் அடுத்த விளம்பர இடைவேளை வரை அவர்கள் சேனலுக்கான பார்வையாளர்கள்ரெடி.  இன்றைக்கு வேண்டுமானால்இருபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் சன் நெட்வொர்க்குக்கு இருக்கலாம் ஆனால் அவர்கள்நெட்வொர்க் ஆரம்பித்த நேரத்தில் இவ்வளவு இல்லை. எனவே அடுத்தடுத்த அலைவரிசைகளில்இடம் பெறப் போகும் சேனல்களே அடுத்த கட்ட சேனல்களாய் வரும். அதை முடிவெடுக்கும்நிலையில் அந்த நெட்வொர்க் இருக்கும் பட்சத்தில் இவர்களின் கடைக்கண்பார்வையில்லாமல் கேபிளில் அவர்களின் சேனல் கிடைக்காது.  

சன் துவங்கப்பட்டவுடம்அதே வேகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏராளமான தமிழ் சேனல்கள் ஆரம்பித்த வேகத்தில்துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிக் கொண்டிருந்தற்கான காரணத்தில்முக்கியமான ஒன்று அந்த சேனல்கள் கேபிள் நெட்வொர்க்கில் தெரிய வைப்பதுதான். அதாவதுகேபிள் டிவியின் ஆரம்ப காலகட்டத்தில் வெறும் 550mhz ஆம்ப்ளிபையர் மூலம்ஒளிபரப்பு செய்தால் சுமார் 30-35 சேனல்கள்தான் மக்களின் டிவிக்கு போகும். அதில்கடைசி சேனல்களுக்கு சுத்தமாய் சிக்னல் பற்றாமல் புள்ளிப்புள்ளியாய் தெரியும்.அதனால் அவ்வகை சேனல்களுக்கு மக்களிடையே வரவேற்பிருக்காது.

எஸ்.சி.வியை பொறுத்தவரைஅவர்கள் ஆப்பரேட்டர்களுக்கு கொடுக்கும் சிக்னலில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல்இருந்தாலும். டெக்னிக்கலாய் அத்தனை சேனல்களையும் கடைசி வீடு வரை கொண்டு செல்லமுடியாது என்று தெரிந்தே அச்சேனல்களை பின்னுக்கு தள்ளிப் போடுவார்கள்.

என்னவோ எஸ்.சி.வி மட்டுமேஇம்மாதிரி செய்தார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு. இந்தியாமுழுக்க, ஏன் உலகம் முழுவதும் இந்த சேனல்முன்னிலைப் ப்ரச்சனையும்,போட்டியாளர்களின் சேனல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்ட்த்தைவிட்டு ஓட விடுவதும்வழக்கமே.  


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Followers

Loading...

Blog Archive